வியட்நாமியக் கலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வியட்நாமியக் கலை (Vietnamese art) என்பது வியட்நாமியக் கலைஞர்களால்கடைப்பிடிக்கப்பட்ட அல்லது வியட்நாமில் தோன்றிய அல்லது பயின்ற காட்சிக் கலையாகும். இது பண்டைய காலம் முதல் இன்றுவரையிலான அனைத்துக் கலையையும் உள்ளடக்கும்.

அறிமுகம்[தொகு]

வியட்நாமியக் கலைக்கு நெடிய செழித்த வரலாறு உண்டு. இது கி.மு 8000 ஆண்டுகளுக்கு முன்பே கற்காலத்தே தோன்றி வலர்ந்த்தற்கான வரலாற்றுச் சான்றுகள் உண்டு[சான்று தேவை].

கி.மு இரண்டாம் நூற்றாண்டில் சீனக் குடியேற்ற ஆட்சி ஏற்பட்ட ஓராயிரம் ஆண்டுகளாக வியட்நாமியக் கலை பல சீனப்பாணிகளால் உள்வாங்கித் தாக்கமுற்றது. இது வியட்நாம் 10 ஆம் நூற்றாண்டி விடுதலை பெற்ற பின்னரும் தொடரலானது. என்றாலும் வியட்நாமியக் கலை தனக்கே உரிய தனிப்பான்மைகலைக் கொண்டதாகும்.

19 ஆம் நூற்றாண்ண்டில் வியட்நாமில் பிரெஞ்சுக் கலையின் தாக்கம் ஏற்பட்டது. இது பேரளவில் வியட்நாமில் புத்தியற் கலை மலர உதவியது.

காலந்தோறும் வியட்நாமியக் கலை[தொகு]

புதுக் கற்காலக் கலை[தொகு]

துணியில் அழகு வேலைப்பாடுகளை உருவாக்கப் பயன்பட்ட வெங்களித் துண்டுகள் (Terracotta pieces)

வியட்நாம் பாசு சோனில் கி.மு 8000 சார்ந்த கற்காலப் பானைகள் கிடைத்துள்ளன. இந்த பானைகள் களிமண்ணால் செய்யப்பட்டவை. இவற்ரில் தொடக்கநிலைப் பானைகள் கலையுணர்வு குன்றிய அடிப்படைத் தேவைக்கானதே. புதிய கற்காலத்தில் வியட்நாமியப் பானைகள் வேகமாக அழகுமிக்கனவாக வளரலாயின.

வெண்கலக் காலக் கலை[தொகு]

வடக்கு வியட்நாமில் உயர்வளர்ச்சிகண்ட தோங் சோன் பண்பாடு தோன்றிய காலத்தில், அதாவது கி.மு 1000 இல் இருந்து கி.மு 4 ஆம் நூற்றாண்டுக் கால இடைவெளியில் உலகப் பெயர்பெற்ற தோங் சோன் முரசுகள், வெண்கலக் கால வார்ப்புத் திறம் மிக்கனவாக உருவாகின.

இவை தொடக்கநிலை வியட்நாமிய வழ்க்கையைப் படம்பிடித்துக் காட்டுகின்றன. இவை விரிவான வடிவியற் பாணிகளால் அழகுபடுத்தப்பட்டன. குறிப்பாக, இவற்றில் பண்ணை உழவுக் காட்சிகளும் தூவியணிந்த தலைப்பாகைகளும் கப்பற்கட்டுதலும் இசைஞர்களும் வரையப்பட்டன.

இக்காலத்துக்குப் பின்னரான தொல்லியல் சான்றுகள் இம்மக்கள் நெடுங்காலமாகவே நெசவில் ஈடுபட்டிருந்த்தைக் காட்டுகின்றன. இந்த தோங் சோன் முரசுகளில் விரிவான உடைகளை அணிந்த நிலைமையும் அழகிய துணித் தலைப்பாகையும் வரையப்பட்டுள்ளன.

கி.மு 111 முதல் கி.பி 939 வரையிலான சீனக் குடியேற்ற ஆட்சி[தொகு]

பத்து நூற்றாண்டு சீன ஆட்சியில், வியட்நாமியர் புதியதாக்க் கற்ற சீன நுட்பங்களைக் கலையில் பயன்படுத்தலாயினர். குறிப்பாக, வெங்களி (பீங்கான்) ஓவியப் பாணிகளை தமது சொந்தக் கலையாக்க முறைகளையும் பின்பற்றிப் பயன்படுத்தினர்; வியட்நாமில் அகழ்ந்தெடுக்கப்பட்ட சீனக் கல்லறைகளில் இருந்து நிறுவப்பட்டது. [1]

நிகோ முதல் திரான் அரசகுலம் வரை[தொகு]

வியட்நாமிய விடுதலிக்குப் பின்னரான 10 ஆம் நூற்றாண்டு முதல் 15 ஆம் நூற்றாண்டு வரை வியட்நாமியக் கலையும் வெங்களிக் கலையும் செழித்து வளர்ந்தன. இக்கால வெங்களிப்பாண்டக் கலையில் பண்டைய மரபும் தாங், சோன் அரசகுலக் காலக் கலை மரபுகளும் பொதிந்துள்ளதாக்க் கூறுகின்றனர். இதில் மூவண்ணப் பீங்கான் ஓவியப் பாணிகளும் அடங்கும். சீன மெய்யியல்களாகிய கன்பூசியனியமும் மகாயாண புத்த சமயமும் தாவோயியமும் வியட்நாமியக் கலையில் பெருந்தாக்கம் செலுத்தி வருகின்றன. சில்ர் வியட்நாமியக் கலையில் சாம்பா நாகரிக்க் கலைச் சுவடுகளும் உள்ளதெனக் கருதுகின்றனர்.

11 ஆம் நூற்றாண்டில் தொடங்கிய இலய் அரசர் காலம் வியட்நாமியக் கலையின் பொற்காலமாக்க் கருதப்படுகிறது. குறிப்பாக வியட்நாமிய பீங்கான் கலை கிழக்கு, தென்கிழக்கு ஆசியாவில் மிகவும் போற்றப்பட்டது. இக்காலத்தில் குறிப்பிட தக்க கட்டிடங்களும் கட்டப்பட்டன. இவற்றில் கனாய் இலக்கியக் கோயில், ஒற்றைத்தூண் அடுக்குத் தூபி, குவின்லாம் அடுக்குத் தூபி ஆகியன குறிப்பிடத்தக்கன.13 ஆம் நூற்றாண்டில் வந்த திரான் அரசகுலக் காலக் கலை, மேலும் நுட்பமான அணுகுமுறையைப் பின்பற்ரலானது.[2]

நான்காம் சீன குடியேற்ற ஆட்சியும் இலே பேரரசும்[தொகு]

17 ஆம், 18 ஆம் நூற்றாண்டின் கலையமைந்த மரத்துண்டுகள்

வியட்நாமில் அமைந்த நான்காம் குடியேற்ற ஆட்சி குறுகிய காலமே, அதாவது இரு பத்தாண்டுகளே, அமைதியாக்க் கழிந்துள்ளது. இருந்தாலும் இக்காமும் மிக கொடுமையோடே கழிந்ததாக கருதப்படுகிறது. பல செவ்வியல் வியட்நாமிய நூல்கள் எரிக்கப்பட்டன. எனவே, விடுதலை சார்ந்த பல ஆவணங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. முன்பு எப்போதும் இல்லாத சீனமயமாக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டு, கணக்கில்லாத வியட்நாமிய வளங்களும் பொருட்களும் சீனாவுக்குக் கடத்தப்பட்டன என்று கூறப்படுகிறது.

இதன் விளைவாக இக்காலத்தின் பெரும்பாலான கலையும் விடுதலையாகிய பின்பான கலையும் மிங் அரசகுலக் காலக் கலையின் தாக்கத்தைப் பெற்றுள்ளன.

நிகுயேன் அரசகுலம்[தொகு]

வியட்நாமில் கடைசியாக அரசாண்ட்து நிகுயே அரச குலமாகும். இக்காலத்தில் வெங்களிக்கலையும் பீங்கான் கலையும் புத்துயிர்ப்பு பெற்ரு ஓங்கி வளர்ந்தன. ஆசியப் பேரரசுகளின் அரசவைகல் வியட்நாமிய வெங்களிப்பொருட்களை விரும்பி ஏற்றுமதி செய்தன.

அரசவை இசை, நடனம் ஆகிய நிகழ்த்து கலைகள் இக்காலத்தில் வளமுற்றோங்கின. ஆனால், பிற கலைகள் நலிவுறத் தொடங்கியதாகவும் கூறப்படுகிறது.

புத்தியற் கலை[தொகு]

அல்லி மலருடன் இளம்பெண் (தியேயு நூ பேன் கோவா குயே (Thiếu nữ bên hoa huệ)), நெய்வண ஓவியம், 1943, நிகோசு வான் வரைந்தது

திரைப்படம்[தொகு]

கட்டிடக் கலை[தொகு]

அணியெழுத்தியல்[தொகு]

காட்சிக் கலைகள்[தொகு]

பட்டு வண்ண ஓவியம்[தொகு]

மரக்கட்டை அச்சு[தொகு]

நிகழ்த்து கலைகள்[தொகு]

மரபிசை[தொகு]

மரபு அரங்கு[தொகு]

காண்க, வியட்நாமிய அரங்கு

மரபு நடனம்[தொகு]

நீர்ப்பாவைக் கூத்து[தொகு]

காண்க, வியட்நாமிய நீர்ப்பாவைக் கூத்து

மொழிசார் கலைகள்[தொகு]

இலக்கியம்[தொகு]

கவிதை[தொகு]

மேலும் காண்க[தொகு]


குறிப்புகள்[தொகு]

  1. http://www.vietnamartbooks.com/articles/article.html?id=67 Pottery and ceramics during Chinese rule
  2. VietNamNet Bridge

மேலும் படிக்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Art of Vietnam
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வியட்நாமியக்_கலை&oldid=2908597" இருந்து மீள்விக்கப்பட்டது