உள்ளடக்கத்துக்குச் செல்

தோங் சோன் பண்பாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோங் தா இடத்து முரசு, வியட்நாம். தோங் சோன் இரண்டாம் பண்பாடு. கி. மு முதல் ஆயிரம் இடையில். வெண்கலம்.

'தோங் சோன் பண்பாடு (Đông Sơn culture) அல்லது ( "கிழக்குமலைப் பண்பாடு",என்பது தோங் சோன் எனும் ஊரின் பெயரால் வழங்கப்படுகிறது. இது பண்டைய வியட்நாமின் வெண்கலக் காலப் பண்பாடாகும். இது வட வியட்நாமில் சிவப்பு ஆற்றுப் படுகையில் கி.மு 700 முதல் கி.மு 500 இல் தொடங்கி கி.பி முதல் நூற்றாண்டு வரை நிலவியது.[1]:207 இது முந்தைய வியட்நாமின் பெயரான வான் இலாங்கின் கடைசிப் பண்பாடாகும். இது மற்றொரு வியட்நாம் அரசாகிய ஔ இலாக் பகுதியுள்ளும் பரவியிருந்த்து. இதன் தாக்கம் கடல்சார்ந்த பகுதிகள் உட்பட்ட தென்கிழக்கு ஆசியாவின் மற்ற பகுதிகளிலும் கி. மு 1000 முதல் கி.மு முதல் நூற்றாண்டு வரை பரவிக் காணப்பட்டது.[2][3][4]

இலாக் அல்லது இலாக் வியட் என வழங்கப்பட்ட தோங் சோன் மக்கள், நெல் பயிரிடுவதிலும் நீர்யானை, பன்றிக் கால்நடை வளர்ப்பிலும் மீன் பிடித்தலிலும் நீண்ட திமில் படகு ஓட்டுவதிலும் வெண்கல வார்ப்புத் தொழிலிலும் கைதேர்ந்தவர். இது தோங் சோன் முரசு வட வியட்நாமில் இருந்து தென்சீனம் வரை கிடைப்பதில் இருந்து தெளிவாகிறது.

தோங் சோன் பண்பாட்டுக்குத் தெற்கே முதனிலைச் சாம் சா குய்ன் பண்பாடு நிலவியது.

தோற்றம்[தொகு]

வென்கலப் பெண்சிலை, தோங் சோன் பண்பாடு, கி.மு 500 BC-கி.பி 300. தாய்லாந்து.

பண்டைய வெண்கல வார்ப்புகளில் இருந்து தோங் சோன் பண்பாடு தோன்றியது. கிழக்காசிய வெண்கல வார்ப்புகள் வட சீனாவில் தோன்றியது என மரபுக் கோட்பாடு கருதுகிறது. என்றாலும் 1970களில் தாய்லாந்தில் நட்த்தப்பட்ட தொல்லியல் சான்றுகளின்படி, முதலில் வெண்கல வார்ப்புகள் முதலில் தென்கிழக்காசியாவில் தோன்றியமை கண்டறியப்பட்டது.[5] தோங் சோன் வெண்கலத் தொழில். கி.மு 700 முதல் 500 வரை நிலவிய கோ முன் பண்பாட்டுக் காலத்தில் இணையாகத் தோன்றியதாகும். இதில் வெண்கலக் கோடரிகளும் ஈட்டிகளும் கத்திகளும் அடங்கும். இதைத் தொடர்ந்து வெண்கல கடபாறைகளும் வாள்களும் முரசுகளும் வெண்கலக் கலங்களும் கி.மு 500-0 கால அளவில் உருவாகின. கடைசியாக, சீன இலச்சினைகளும் நாணயங்களும் கண்ணாடிகளும் கி.பி முதல் நூற்றாண்டில் தோன்றின.[1]:207

வெண்கல முரசுகள் போர்க்களத்தில் பயன்படுத்தப்பட்டன. விருந்துகளின் போதும் இரங்கல் நிகழ்ச்சிகளிலும் போர்த்தளபதி முரசியக்கி போர்வீர்ர்களை அணிதிரட்டுவர். "முரசுகளின் காட்சிகள் வார்ப்படக் கலைஞர்களின் உயர்திறனைக் காட்டுகின்றன. தோங் சோன் தலைவர்கள் அவர்களைத் தேர்ந்தெடுத்துப் புரந்த்தும் விளங்குகிறது" இதற்குப் பயன்பட்ட மெழுகு வார்ப்பட்த் தொழில் சீன வார்ப்பட முறையைச் சார்ந்த்தாக்க் கருதப்படுகிறது. ஆனால் காட்சிகள் வட்டரம் சார்ந்தனவே. இவற்றில் முரசறைபவர், இசைக்கலைஞர், போர்வீர்ர்களின் உருவங்களும் அரிசி பதப்படுத்தல், பறவைகள்,மான்கள், போர்க்கலங்கள், வடிவியல் வடிவங்கள் ஆகியவையும் அடங்கும்.[1]:200–202

வெண்கல முரசுகள் வடக்கு வியட்நாமிலும் தென்சீன யுன்னான் பகுதிகளிலும் கணிசமான அளவில் செய்யப்படுகின்றன. Tதோங் சோன் வெண்கல முரசுகள் கைவினைத்திறம் மிக்கவை. சோ உலோவா முரசு72 கிலோகிராம் எடை உடையது. இதைச் செய்ய 1 முதல் 7 டன் செம்புத் தாதை உருக்க வேண்டியிருக்கும்.[1]:200

மேலும் காண்க[தொகு]

  • இலாக் வியட்
  • தோங் சோன் முரசு
  • நாம் வியட்
  • ஔ இலாக்
  • பாச் வியட்

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 Higham, C., 2014, Early Mainland Southeast Asia, Bangkok: River Books Co., Ltd., பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9786167339443
  2. "Vietnam Tours". Archived from the original on 2013-04-26. பார்க்கப்பட்ட நாள் 2016-11-27.
  3. Nola Cooke, Tana Li, James Anderson - The Tongking Gulf Through History - Page 46 2011 -"Nishimura actually suggested the Đông Sơn phase belonged in the late metal age, and some other Japanese scholars argued that, contrary to the conventional belief that the Han invasion ended Đông Sơn culture, Đông Sơn artifacts, ..."
  4. Vietnam Fine Arts Museum 2000 "... the bronze cylindrical jars, drums, Weapons and tools which were sophistically carved and belonged to the World famous Đông Sơn culture dating from thousands of years; the Sculptures in the round, the ornamental architectural Sculptures ..."
  5. Taylor, Keith W. (1991). The Birth of Vietnam. University of California Press. p. 313. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-520-07417-3.

Austronesian vernacular architecture and the Ise Shrine of Japan: Is there any connection? Link பரணிடப்பட்டது 2014-03-12 at the வந்தவழி இயந்திரம்

by Ezrin Arbi Department of Architecture Faculty of Built Environment University of Malaya.

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,

Đông Sơn culture

என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தோங்_சோன்_பண்பாடு&oldid=3559723" இலிருந்து மீள்விக்கப்பட்டது