உள்ளடக்கத்துக்குச் செல்

விபின் பக்சே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விபின் பக்சே
Vipin Buckshey
பிறப்பு3 சூன் 1955
குவாலியர், மத்தியப் பிரதேசம், இந்தியா
பணிகண் மருத்துவர்
அறியப்படுவதுபார்வை அளவையியல்
விருதுகள்பத்மசிறீ

விபின் பக்சே (Vipin Buckshey) இந்தியாவைச் சேர்ந்த ஒரு கண் மருத்துவர் ஆவார். [1] இந்திய குடியரசுத் தலைவரின் அதிகாரப்பூர்வ கண் பார்வை மருத்துவராக பணியாற்றினார். [2] இந்திய மாநிலமான மத்தியப் பிரதேசத்தில் உள்ள குவாலியர் நகரில் 1955 ஆம் ஆண்டு சூன் மாதம் 3 ஆம் தேதியன்று இல் பிறந்தார். தனது பள்ளிப் படிப்பை பிராங்க் அந்தோணி பொதுப் பள்ளியில் பயின்றார். பிறகு புது தில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் பார்வை அளவையியலில் பட்டம் பெற்றார். [2] தில்லியிலுள்ள இலாரன்சு மற்றும் மேயோ நிறுவனத்தில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். [3] இங்கு ஒரு கண் மருத்துவ அதிகாரியாக தொடு வில்லைப் பிரிவை நிறுவியதாகக் கூறப்படுகிறது. [2]   2000 ஆம் ஆண்டில், இந்தியாவில் வழங்கப்படும் நான்காவது மிக உயர்ந்த குடிமகன் விருதான பத்மசிறீ விருது இவருக்கு வழங்கப்பட்டது. [4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Practo". Practo. 2014. Archived from the original on 29 ஜூலை 2018. பார்க்கப்பட்ட நாள் 29 December 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. 2.0 2.1 2.2 "Visual Aids Centre". Visual Aids Centre. 2014. Archived from the original on 29 டிசம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 29 December 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "Lawrence and Mayo". Lawrence and Mayo. 2014. பார்க்கப்பட்ட நாள் 29 December 2014.
  4. "Padma Awards" (PDF). Padma Awards. 2014. Archived from the original (PDF) on 19 அக்டோபர் 2017. பார்க்கப்பட்ட நாள் 11 November 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=விபின்_பக்சே&oldid=3531474" இலிருந்து மீள்விக்கப்பட்டது