உள்ளடக்கத்துக்குச் செல்

வினைமுற்று

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழில் வினைச்சொற்கள் முற்றாகவும் எச்சமாகவும் வரும். எச்சமானது பெயரெச்சமாகவோ, வினையெச்சமாகவோ இருக்கும். முற்றோ, எச்சமோ எதுவாயினும் காலம் காட்டும். காலம் காட்டாத வினைப்பகுதியோடு இணைந்து நிற்கும் தொடரை வினைத்தொகை என்பர்.

வகை

[தொகு]

தமிழில் வினைமுற்றுகள் நாவகையில் அமையும். தெரிநிலை வினைமுற்று, குறிப்பு வினைமுற்று, ஏவல் வினைமுற்று,வியங்கோள் வினைமுற்று என்பன அவை. [1]

தெரிநிலை வினைமுற்று

[தொகு]

ஒரு வினை (செயல்) முற்றுப் பெற்ற சொல்லாயின் அது வினைமுற்று. (எடுத்துக்காட்டு) அவன் கற்றான். அவள் நின்றாள். அவர் சென்றார். அது வந்தது. அவை வந்தன. - என்பனவற்றில் தடித்து எழுத்துக்களில் காட்டப்பட்டுள்ளவை ஐம்பால் தெரிநிலை வினைமுற்றுகள்

குறிப்பு வினைமுற்று

[தொகு]

அவன் நல்லன். அவள் நல்லள். அவர் (அவர்கள்) நல்லர். அது நன்று. அவை நல்ல. - என்பனவற்றில் தடித்த எழுத்துக்களில் காட்டப்பட்டுள்ளவை ஐம்பால் குறிப்பு வினைமுற்றுகள்.

வெளி இணைப்புகள்

[தொகு]

இவை.(பிழையின்றித் தமிழ் பேசுவோம்- எழுதுவோம்!, கவிக்கோ ஞானச்செல்வன், தினமணிக்கதிர், 10 ஏப்ரல் 2011 [தொடர்பிழந்த இணைப்பு])

அடிக்குறிப்பு

[தொகு]

  1. குறிப்பினும் வினையினும் நெறிப்படத் தோன்றிக்
    காலமொடு வரூஉம் வினைச்சொல் எல்லாம்-
    உயர்திணைக்கு உரிமையும், அஃறிணைக்கு உரிமையும்,
    ஆயிரு திணைக்கும் ஓரன்ன உரிமையும்,
    அம் மூஉருபின,-தோன்றலாறே.(தொல்காப்பியம் 2-201)
"https://ta.wikipedia.org/w/index.php?title=வினைமுற்று&oldid=3810799" இலிருந்து மீள்விக்கப்பட்டது