விதர்ப்பதேசம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Map of Vedic India.png

விதர்ப்பதேசம் விந்தியமலையின் தெற்கில் மலை அடிவாரம் முதல் கிழக்கில் சிபரா நதி உருவாகும் இடம் வரையிலும், மேற்கில் நர்மதை நதி உருவாகும் இடம் வரையிலும், பரவி இருந்த தேசம்.[1]

இருப்பிடம்[தொகு]

இந்த தேசத்தின் பூமி சம தளமானது, விந்திய மலையின் ஓரத்தில் மிகவும் உயர்ந்தும் கொஞ்சம் கொஞ்சமாக வடக்கில் தாழ்ந்தும் பெரிய பெரிய மலைகள் நிறைந்தும் காணப்படுகிறது.[2]

மலை, காடு, விலங்குகள்[தொகு]

இந்த தேசமானது விந்தியமலைக்கு அருகில் இருப்பதால் தொடர்குன்றுகள் நிறைந்தும், கற்பாறைகள் மிகுந்தும் வளம் குன்றியும், சிறிய காடுகளும், அவைகளில் கரடி, பன்றி, புலி, யானை, குயில், மயில், அணில் ஆகிய விலங்குகள் அதிகமாக இருக்கும்.

நதிகள்[தொகு]

இந்த தேசத்தின் நதிகள் விந்தியமலையில் ஓடும் மலையருவிகளே ஆகும். இவற்றில் கும்பிலா நதி முக்கியமானதாகும்.

விளைபொருள்[தொகு]

இந்த தேசத்தில் நெல், கோதுமை, கரும்பு முதலியனவும், தாமிரம், பித்தளை, முதலிய உலோகப் பொருள்களாலான வெகு அழகாய், நேர்த்தியாய் செய்யப்பட்ட பாத்திரங்களையும், இரும்பாலான ஆயுதங்களையும் அம்மக்கள் பயன்படுத்தினர்.

கருவி நூல்[தொகு]

சான்றடைவு[தொகு]

  1. "புராதன இந்தியா"-பி. வி. ஜகதீச அய்யர்-1918 - Published by- P. R. Rama Iyer & co-madaras
  2. புராதன இந்தியா என்னும் பழைய 56 தேசங்கள் - சந்தியா பதிப்பகம் - சென்னை-83- மூன்றாம் பதிப்பு-2009- பக்கம் - 146 -
"https://ta.wikipedia.org/w/index.php?title=விதர்ப்பதேசம்&oldid=2076833" இருந்து மீள்விக்கப்பட்டது