விண்வெளிச் சுற்றுச்சூழல் தகவல் அமைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

விண்வெளிச் சுற்றுச்சூழல் தகவல் அமைப்பு (Space Environment Information System) என்பது ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் செயல்பாட்டு மென்பொருளாகும். [1] விண்வெளி வளிமண்டலவியல் பெல்ஜிய நிறுவனம் இம்மென்பொருளை 1996 ஆம் ஆண்டு உருவாக்கி பராமரித்து வருகிறது. விண்வெளிச் சூழலை மதிப்பிடுவதற்கான ஒரு வலை அடிப்படையிலான இடைமுகத்தையும், விண்கல அமைப்புகள் மற்றும் குழுக்கள் மீதான அதன் விளைவுகளையும் இம்மென்பொருள் வழங்குகிறது. இந்த அமைப்பு பன்னாட்டு பயனர் சமூகத்தால் பல்வேறு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. [2] திட்டமிடல் மற்றும் திட்டப்பபகுப்பாய்வு மற்றும் திட்டமிடல், கல்விக்கான ஆதரவு மற்றும் அறிவியல் பயன்பாடுகளுக்கான இயங்கும் மாதிரிகள். போன்றவை எடுத்துக்காட்டுகளாகும். விண்வெளிச் சூழல் மற்றும் சுற்றுச்சூழல் மாதிரிகள் பற்றிய விரிவான பின்னணி தகவல்களும் இம்மென்பொருளில் இடம்பெற்றுள்ளன. [3] விண்கலத்திற்கு வெளியே உள்ள விண்வெளிச் சூழல் எதுவும் வடிவமைப்பு அல்லது செயல்பாட்டை பாதிக்கும். [4]

மேற்கோள்கள்[தொகு]

புற இணைப்புகள்[தொகு]