விண்ணேற்புக் கல்லூரி, சங்கனாச்சேரி

ஆள்கூறுகள்: 9°27′06″N 76°32′16″E / 9.4517112°N 76.537718°E / 9.4517112; 76.537718
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விண்ணேற்புக் கல்லூரி, சங்கனாச்சேரி
வகைஇளங்கலை மகளிர் கல்லூரி
உருவாக்கம்1949; 75 ஆண்டுகளுக்கு முன்னர் (1949)
சார்புமகாத்மா காந்தி பல்கலைக்கழகம்
தரநிர்ணயம்பல்கலைக்கழக மானியக் குழு (இந்தியா) , தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவை
தலைவர்உயர் அருட்திரு முனைவர்.ஜேம்ஸ் பாலக்கல்
தலைவர்அருட்திரு.முனைவர்.தாமஸ் ஜோசப்
முதல்வர்அன்னி மேரி ஜோசப்
அமைவிடம், , ,
686101
,
9°27′06″N 76°32′16″E / 9.4517112°N 76.537718°E / 9.4517112; 76.537718
மொழிஆங்கிலம், மலையாளம்
இணையதளம்கல்லூரி இணையதளம்
விண்ணேற்புக் கல்லூரி, சங்கனாச்சேரி is located in கேரளம்
விண்ணேற்புக் கல்லூரி, சங்கனாச்சேரி
Location in கேரளம்
விண்ணேற்புக் கல்லூரி, சங்கனாச்சேரி is located in இந்தியா
விண்ணேற்புக் கல்லூரி, சங்கனாச்சேரி
விண்ணேற்புக் கல்லூரி, சங்கனாச்சேரி (இந்தியா)

விண்ணேற்புக் கல்லூரி(Assumption College), என்பது இந்தியாவின் கேரளாவில் சங்கனாச்சேரியில் 1950 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பெண்கள் கல்லூரி ஆகும்.

பல்வேறு பாடங்களில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டங்களை[1] பயிற்றுவிக்கும் இக்கல்லூரியானது, மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் இக்கல்லூரி 2016 ஆம் ஆண்டில் இருந்து தன்னாட்சி கல்லூரி எனும் நிலையை அடைந்தது.[2]

அங்கீகாரம்[தொகு]

சங்கனாச்சேரி உயர்மறைமாவட்டத்தால் நிர்வகிக்கப்படும் இக்கல்லூரி, கிறிஸ்தவ சிறுபான்மை நிறுவன வகையைச்சேர்ந்ததாகும். பல்கலைக்கழக மானியக் குழு (இந்தியா)வின் சட்டப்பிரிவு 2(f) மற்றும் 12B இன் கீழ் அங்கீகாரம் பெற்றுள்ளதோடு[3], தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவையால் நான்காவது சுழற்சியில் ஏ+ தரத்தை பெற்று மறுஅங்கீகாரம் அடைந்துள்ளதோடு

ISO 9001-2015 சான்றிதழும் பெற்றுள்ளது.

படிப்புகள்[தொகு]

19 இளங்கலை மற்றும் 9 முதுகலை மற்றும் 2 முனைவர் பட்டப் படிப்புகளில் 2500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்துவரும் இக்கல்லூரியில் இவை தவிர, தொழில் சார்ந்த படிப்புகள், ஏசிஎஸ்ஏடி சான்றிதழ் படிப்புகள், செறிவூட்டல் திட்டங்கள் மற்றும் சமூக தொடர்புக்கான திட்டங்கள் ஆகியவையும் பயிற்றுவிக்கப்படுகிறது.

குறிப்பிடத்தக்க முன்னாள் மாணவர்கள்[தொகு]

  • கீது அன்னா ஜோஸ், இந்திய கூடைப்பந்து வீராங்கனை
  • மீரா ஜாஸ்மின், மலையாள திரைப்பட நடிகை
  • காயத்ரி அருண், தொலைக்காட்சி நடிகை

மேற்கோள்கள்[தொகு]

  1. "Courses offered". Assumption College, Changanasserry. Archived from the original on 2 September 2013. பார்க்கப்பட்ட நாள் 31 August 2013.
  2. "Home page". Assumption College, Changanasserry. Archived from the original on 28 August 2013. பார்க்கப்பட்ட நாள் 31 August 2013.
  3. "UGC சட்டம் 1956 இன் பிரிவு 2 (f)& 12(B) இன் கீழ் உள்ள கல்லூரிகள்".