வின்டோஸ் நெப்டியூன்
வின்டோஸ் நெப்டியூன் 5111 இன் திரைக்காட்சி | |
விருத்தியாளர் | மைக்ரோசாஃப்ட் |
---|---|
ஓ.எஸ். குடும்பம் | மைக்ரோசாஃப்ட் வின்டோஸ் |
மூலநிரல் | பகிரப்பட்ட மூலம் |
தற்போதைய முன்னோட்டம் | 5.0.5111 / டிசம்பர் 27, 1999 |
கருனி வகை | கலப்பு கெர்னல் |
அனுமதி | மைக்ரோசாஃப்டின் பயன்ர் உரிம ஒப்பந்தம் |
அதிகாரப்பூர்வ வலைத்தளம் | ஏதும் இல்லை (சோதனை பதிப்பு) |
ஆதரவு நிலைப்பாடு | |
ஆதரவு இல்லை |
வின்டோஸ் நெப்டியூன் (Windows Neptune) என்பது 1999 முதல் 2000 இன் முற்பகுதி வரை உருவாக்கத்தில் இருந்த மைக்ரோசாஃப்ட் விண்டோஸின் ஒரு பதிப்பாகும். விண்டோஸ் நெப்ட்யூன் விண்டோஸ் என்டியை அடிப்படையாக கொண்ட விண்டோஸ் 2000 இன் இல்ல பதிப்பாக வெளி வர இருந்தது. இது முன்னிருந்த விண்டோஸ் 98 இன் அடுத்த மேம்படுத்தப்பட்ட விண்டோஸ் பதிப்பாக வெளி வர உருவாக்கப்பட்டு கொண்டிருந்தது. எனினும் விண்டோஸ் 2000இன் வெளியீட்டுக்கு பின்னர் விண்டோஸ் விஸ்லர் திட்டப்பணி குழுவுடன் ஒன்றினைக்கப்பட்டது. இந்த விண்டோஸ் விஸ்லரே பின்னர் அதிகாரப்பூர்வமாக விண்டோஸ் எக்ஸ்பி ஆக வெளியிடப்பட்டது. நெப்ட்யூன் குழு விஸ்லர் குழுவுடன் ஒன்றினைக்கப்பட்டவுடன் விண்டோஸ் நெப்ட்யூனின் உருவாக்கம் உட்கட்டசோதனை(ஆல்ஃபா) நிலையிலேயே கைவிடப்பட்டது. [1] பிறகு மைக்ரோசாஃப்ட் நிறுவனம் டாஸ்'ஐ அடிப்படையாக கொண்ட விண்டோஸ் மில்லேனியம் வெளியிட்டது[2]
சிறப்பம்சங்கள்
[தொகு]விண்டோஸ் நெட்ப்யூனில் இணைய மற்றும் வலைய பாதுகாப்புக்காக ஆரம்பநிலை பாதுகாப்புச்சுவர்(Firewall) அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. இந்த அம்சம் பின்னர் விண்டோஸ் XPயுடன் ஒன்றிணைக்கப்பட்டு விண்டோஸ் ஃபயர்வால் என மறுபெயரிடப்பட்டது
நெப்ட்யூன் ஆல்ஃபா(உட்கட்ட சோதனை) பதிப்பாதலால், இதை பொது பயன்பாட்டிற்கோ அல்லது பீட்டா(வெளிப்புற சோதனை) பதிப்பாகவோ மைக்ரோசாஃப் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. எனவே உட்கட்டச் சோதனைக்காக சிலரிடம் தரப்பட்ட பதிப்பே தற்போது இணையத்தில் புழக்கத்தில் இருக்கிறது. அதிலும் கட்டுமானம்(Build) 5000 பெரும்பாண்மையாக இருக்கிறது.. கட்டுமானம் 5111 அவ்வளவாக புழக்கத்தில் இல்லை.
கட்டுமான எண்கள்(Build Numbers)
[தொகு]விண்டோஸின் இந்த உட்கட்டச் சோதனை வெளியீடு மற்ற விண்டோஸ் 9X பதிப்புகளை ஒத்து 5111 என்ற கட்டுமான எண்ணை கொண்டிருந்தது ஏனெனில் இது விண்டோஸ் 9X அடுத்த தொடர்பதிப்பாக(Successor) விண்டோஸ் வெளியிட உத்தேசிக்கப்பட்டது. எனவே தான் விண்டோஸ் நெப்ட்யூன் என்.டி அடிப்படையில் உருவாக்கப்பட்டிருப்பினும் விண்டோஸ் என்.டியின் கட்டுமான எண்ணை பின் பற்றாமல் விண்டோஸ் 9Xஇன் கட்டுமான எண் தொடரை பின்பற்றி கட்டுமான எண் இடப்பட்டது.
நிறுவல் சிக்கல்கள்
[தொகு]விண்டோஸ் நெப்ட்யூனை விண்டோஸ் XPஇல் நிறுவ இயலாது, ஏனெனில் நெப்ட்யூன் பதிப்பு 1999ஆம் ஆண்டு XP வெளியிடுவதற்கு முன் உருவாக்கப்பட்டது. ஆனால் இதை மைக்ரோசாஃப்டின் வர்ச்சுவல் பி.சி(Virtual PC) மூலம் நிறுவிக்கொள்ள இயலும்.
விண்டோஸ் 98 மற்றும் அதன் முந்திய பதிப்புகளின் உயர்த்தலாக(Upgrade) இதை பயன்படுத்தலாம். எனினும் இது சோதனை கட்டத்திலேயே கைவிடப்பட்ட பதிப்பு என்பதால் இந்த பதிப்பில் உள்ள அளவற்ற பிழைகளை கருத்தில் கொண்டு, இந்த உயர்த்தல் பரிந்துரைக்கப்படுவதில்லை. எனினும் மேற்கூறியவாறு வர்ச்சுவல் பி.சி மூலம் எந்தவித பயமுமின்றி சோதனைக்காக நிறுவிக்கொள்ளலாம்.
உசாத்துணைகள்
[தொகு]- ↑ Christopher Jones (April 2002). "Written Direct Testimony of Christopher Jones". State of New York v. Microsoft Corporation. பார்க்கப்பட்ட நாள் 2006-01-07.
- ↑ Paul Thurrott. "Windows Millennium Edition ("Windows Me") FAQ". Windows SuperSite. பார்க்கப்பட்ட நாள் 2006-01-07.
External links
[தொகு]எம்எஸ்-டொஸ்–சார்ந்தது: 1.0 | 2.0 | 3.0 | 3.1x | 95 | 98 | மீ |
என்டி-சார்ந்தது: என்டி 3.1 | என்டி 3.5 | என்டி 3.51 | என்டி 4.0 | 2000 | எக்ஸ்பி | சேவர் 2003 | விஸ்ஃடா | ஹோம் சேவர் |
சிஈ-சார்ந்தது: சிஈ 3.0 | செல்லிடம் | சிஈ 5.0 |
வரவிருப்பவை: 2008 மற்றும் 7 |
வெளியிடப்படாதவை: நெப்ட்யூன் | ஒடிஸ்ஸி | நேஷ்வில் | கய்ரோ |