உள்ளடக்கத்துக்குச் செல்

வின்டோஸ் சேவர் 2008

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(விண்டோஸ் சேவர் 2008 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
வின்டோஸ் சேவர் 2008
வின்டோஸ் 2008 பீட்டா 3 (Build 6001) இன் திரைக்காட்சி
விருத்தியாளர்Microsoft
ஓ.எஸ். குடும்பம்மைக்ரோசாப்ட் வின்டோஸ்
மூலநிரல்மூடியநிரல்
தற்போதைய
முன்னோட்டம்
Beta 3 (Build 6001.16510.070417-1740) / ஏப்ரல் 25 2007[1]
கருனி வகைHybrid kernel
அனுமதிமைக்ரோசாப்ட் பயனர் உரிம ஒப்பந்தம்
அதிகாரப்பூர்வ
வலைத்தளம்
www.microsoft.com/windowsserver2008/
ஆதரவு நிலைப்பாடு
விருத்தியில் இருக்கும் மென்பொருள்

வின்டோஸ் சேவர் 2008 (Windows Server 2008) விண்டோஸ் சேவர் 2003 இன் வழிவந்த அதற்கு அடுத்த மைக்ரோசாப்டின் (Microsoft) சேவர் இயங்குதளம் ஆகும். இது பில்கேட்ஸ் அதிகாரப்பூர்வப் பெயரான வின்டோஸ் சேவர் 2008 ஐ விண்டோஸ் வன்பொருட் பொறியியற் கருத்தரங்கில் வெளியிடும் வரை லாங்ஹான் (இலங்கைத் தமிழ்: லோங்ஹோன்) என்றறியப்பட்டது.

வின்டோஸ் சேவர் 2003 வின்டோஸ் எக்ஸ்பியுடன் ஒத்த தன்மைகளைக் கொண்டிருப்பது போன்றே வின்டோஸ் சேவர் 2008 வின்டோஸ் விஸ்டாவுடன் வந்த புதிய வசதிகளைக் கொண்டுள்ளது.

இதன் இதன் வெள்ளோட்டப்பதிப்பான (அல்லது சோதனைப்பதிப்பான) பீட்டா 1 ஜூலை 27, 2005]] வெளிவிடப்பட்டது. பீட்டா 2 மே 23 2006 இல் விண்டோஸ் வன்பொருட் பொறியியற் கருத்தரங்கில் வெளிவிடப்பட்டது. பீட்டா 3 எல்லாருக்குமாக [[ஏப்ரல் 25, 2007 இல் வெளிவிடப்பட்டது.

ஆதரிக்கும் இயங்குதளங்கள்

[தொகு]

64 பிட் மற்றும் 32 பிட் x86 புரோசர்களுக்காக இயங்குதளமானது வெளிவிடப்பட்டுள்ளது. இது இன்டெல் இட்டானியம் புரோசர்களை அதிக வேலைப் பழுவைக் கையாளும் திறமையுள்ள டேட்டாசெண்டர் மாத்திரமே ஆதரிக்கும். இவை கோப்பு சேவர்கள் (பைல்சேவர்) மற்றும் மீடியா சேவர்களாகப் பாவிப்பதற்குத் தேவையில்லை என்பதால் இவற்றில் இட்டானியம் புரோசர்களின் ஆதரவு சேர்க்கப்படவில்லை. மைக்ரோசாப்ட் இதுவே தமது இறுதியான 32பிட் இயங்குதளமாக இருக்கும் என்று அறிவித்துள்ளனர்.[2]

பதிப்புக்கள்

[தொகு]

விண்டோஸ் சேவர் 2008 கீழ்வரும் பதிப்புக்களை விண்டோஸ் சேவர் 2003 பொன்றே கொண்டிருக்கும். இவை x86 32பிட் மற்றும் x86 64பிட் புரொசசர்களுக்கானவை.

  1. வெப் எடிசன்
  2. ஸ்ராண்டட் எடிசன்
  3. எண்டபிறைஸ் எடிசன்
  4. டேட்டா செண்டர் எடிசன்

விண்டோஸ் சேவர் 2008 இன் வசதிகள்

[தொகு]

தானகவே சுகப்படுத்தும் விண்டோஸ் எண்டி கோப்பு முறை

[தொகு]

மைக்ரோசாப்ட் டாஸ் ( DOS ) இயங்குதளக் காலத்தில் இருந்தே கோப்பில் ஏற்படும் பிழைகளைச் சரிசெய்வதற்கு இயங்குதளம் இயங்காநிலையில் (அதாவது பொதுவாக கணினியை ஆரம்பிக்கையிலே) கோப்புக்களை சரிசெய்யலாம். வின்டோஸ் சேவர் 2008 இல் இயங்குதளத்தின் பின்னணியில் ஓர் சிஸ்டம் சேவையாக இயங்கும் கோப்பில் ஏற்படும் பிழைகளைக் கண்டறிந்து சரிசெய்வதால் விண்டோஸ் சேவரை இடைநிறுத்தவேண்டிய அவசியம் கிடையாது.

ஏதாவது ஓர் இடத்தில் கோப்பானது சேதமுற்றிருந்தால் (Corrupted) NTFS Worker Thread ஆனது அந்தப் பகுதியானது அணுகமுடியாமல் இருப்பதோடு அந்தநேரத்தில் சரிசெய்ய ஆரம்பிக்கும். இதனால் கணினியில் உள்ள பிரயோகமென்பொருளானது அந்தகோப்பை அணுகமுடியாமல் இருக்கும். இந்த சேதமுற்ற கோப்புக்களைச் சரிசெய்தபின்னர் அணுகமுற்பட்டால் அவற்றைப் பின்னர் எதுவித சிரமமும் இன்றி அணுக முடியும். கணினி எந்த நேரமுமே இயங்கிய நிலையிலேயே வைத்திருக்கலாம். எனவே கணினியை மீள ஆரம்பிப்பதோ CHKDSK கட்டளைகளை வழங்கி கணினியின் வன்வட்டினைச் (ஹாட்டிஸ்க்) சரிபார்பதோ தேவையற்றது.

ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பயனர்களின் பிரயோக நேரத்தை உருவாக்குதல்

[தொகு]

விண்டோஸ் சேவர் 2008 வருவதற்கு முன்னர் டேமினல் சேவரில் பயனர்கள் ஒன்றன் பின் ஒன்றாகவே உருவாக்கப்பட்டனர். ஒரு டேமினல் சேவரிலோ அல்லது அல்லது ஹோம் சிஸ்டத்தில் ஒன்றிற்கு மேற்பட்ட பயனர்கள் பாவிக்கவிரும்பினால் ஒரே நேரத்தில் பாவிக்க முயன்றால் அவை Sections என்றவாறழைக்கப்படும்.

விண்டோஸ் விஸ்டா மற்றும் விண்டொஸ் சேவர் 2008 இல் 4 வரையிலான sections களை ஆரம்பிக்கமுடியும். 4 புரோசர்களைக் கூடுதலாக புரோசசர்களை சேவர் கொண்டிருக்கும் பட்சத்தில் இதைவிடக் கூடுதலாகக் கூட ஆரம்பிக்க இயலும்.

உசாத்துணைகள்

[தொகு]

வெளியிணைப்புக்கள்

[தொகு]
  1. விண்டோஸ் சேவர் 2008 இன் பத்துப் புதிய வசதிகள் பீட்டா நியூஸ் (ஆங்கில மொழியில்)
"https://ta.wikipedia.org/w/index.php?title=வின்டோஸ்_சேவர்_2008&oldid=3484077" இலிருந்து மீள்விக்கப்பட்டது