விஜயரகுநாத தொண்டமான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

இராஜா விஜய ரகுநாதராய தொண்டைமான் பகதூர் (1759 –1807) விஜயரகுநாத தொண்டமான் என அறியப்படும் இவர் புதுக்கோட்டையை (1789-1807) ஆண்ட மன்னர் ஆவார்.

இவர் சிங்கமங்கலம், கலசமங்கலம் என்னும் நகரங்கள் அழிந்த பின்னர் அவைகள் இருந்த விடத்தில் ஓர் புதிய நகரையுண்டாக்கி, அதற்குப் புதுக்கோட்டை என்று பெயர் கொடுத்தார்[1][2]. இரு நாழிகை வழி நீளமுள்ள மதிலும், கோட்டையும் கட்டினார்.[சான்று தேவை]

சூழ்ச்சி விருந்து[தொகு]

ஆங்கிலேயர்களால் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை கைப்பற்றப்பட்ட போது வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டையை விட்டு வெளியேறி காட்டில் ஒளிந்திருப்பதை அறிந்த புதுக்கோட்டை மன்னர் விஜய ரகுநாத தொண்டைமான், தன் தளபதி முத்துவைர அம்பலக்காரன் வழியாக அவரை விருந்துக்கு அழைத்து, அடைக்கலம் அளிப்பதுபோல் நாடகமாடி பிரிட்டிஷாரிடம் ஒப்படைத்தார்[3].

புதுக்கோட்டை சமஸ்தானம்[தொகு]

முதன்மைக் கட்டுரை: புதுக்கோட்டை சமஸ்தானம்
 • விஜயரகுநாதராய தொண்டைமான் 1730-1769
 • இராயரகுநாத தொண்டைமான் 1769-1789 /
 • இராஜா விஜயரகுநாத தொண்டைமான் பகதூர் 1789-1807
 • இராஜா விஜய ரகுநாதராய தொண்டைமான் பகதூர் 1807-1825
 • ஹிஸ் எக்சலென்சி இராஜா ரகுநாத தொண்டைமான் 1825-1839
 • ஹிஸ் ஹைனெஸ் ஸ்ரீ பிரகதம்பாதாஸ் இராஜா ராமச்சந்திர தொண்டைமான் பகதூர் 1839-1886
 • ஹிஸ் ஹைனெஸ் ஸ்ரீ பிரகதம்பாதாஸ் இராஜ மார்த்தாண்ட பைரவ தொண்டைமான் பகதூர் ஜி.சி.ஐ.இ 1886
 • விஜயரகநாத துரைராஜ தொண்டைமான் பகதூர் 1922 முதல்
 • புதுக்கோட்டை சமஸ்தான அம்மன் காசு
 • ஸ்ரீ பிரகதாம்பதாஸ் ராஜகோபாலத் தொண்டைமான்

மேற்கோள்கள்[தொகு]

 1. "360 டிகிரி - புதுக்கோட்டை". தினமணி. பார்த்த நாள் 10 சனவரி 2014.
 2. "வேங்கையின் மைந்தன்". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் 10 சனவரி 2014.
 3. "PUDUKKOTTAI The Tondiman Dynasty GENEALOGY". The Royal Ark. பார்த்த நாள் 10 சனவரி 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=விஜயரகுநாத_தொண்டமான்&oldid=2209842" இருந்து மீள்விக்கப்பட்டது