உள்ளடக்கத்துக்குச் செல்

விசாலினி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விசாலினி என்பவர் இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் தமிழ் திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களிலும், நகைச்சுவை வேடங்களிலும் நடித்துள்ளார். [1]

திரைப்படத்துறை

[தொகு]

இவர் 24 ஆகஸ்ட் 1983 இல் பிறந்தார். இவர் தமிழகத்தில் பிறந்தாலும் அந்தமான் நிக்கோபர் தீவுகளில் வளர்ந்தார். இவர் இயக்குனர் பாரதிராஜாவால் அறிமுகம் செய்யப்பட்டார்.

கலைஞர் தொலைக்காட்சியில் தெக்கத்தி பொண்ணு என்ற தொலைக்காட்சி தொடரில் 2008-2011 வரை நடித்தார். இவருடன் நெப்பொலியன், ரஞ்சிதா, சுவர்ணமால்யா, சந்திரசேகர் மற்றும் புவனேஷ்வரி ஆகியோர் நடித்திருந்தனர். இந்தத் தொலைக்காட்சி தொடரை இயக்குனர் பாரதிராஜா இயக்கியிருந்தார்.

இவர் 2015 இல் ரஜினிகாந்த் நடித்த லிங்கா திரைப்படத்தில் நடித்திருந்தார். 2016 இல் விஜய்சேதுபதி நடித்த தர்மதுரை திரைப்படத்தில் நடித்தார். அங்காளி பங்காளி திரைப்படத்தில் நடித்தார். ரஜினிகாந்துடன் மீண்டும் காலா திரைப்படத்தில் 2018 இல் நடித்தார்.

திரைப்படங்கள்

[தொகு]
ஆண்டு திரைப்படம் மொழி
2008 தெக்கத்தி பொண்ணு தொலைக்காட்சி தொடர்
2014 லிங்கா தமிழ்
2016 தர்மதுரை தமிழ்
2016 அங்காளி பங்காளி தமிழ்
2018 காலா தமிழ்

ஆதாரங்கள்

[தொகு]
  1. https://celpox.com/celebs/vishalini-tamil-character-artist?ID=9774

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=விசாலினி&oldid=3674324" இலிருந்து மீள்விக்கப்பட்டது