விக்குன்யா
Jump to navigation
Jump to search
விக்குன்யா | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கினம் |
தொகுதி: | முதுகுநாணி |
வகுப்பு: | பாலூட்டி |
வரிசை: | இரட்டைப்படைக் குளம்பிகள் |
குடும்பம்: | ஒட்டகக் குடும்பம் |
சிற்றினம்: | Lamini |
பேரினம்: | Vicugna |
இனம்: | V. vicugna |
இருசொற் பெயரீடு | |
Vicugna vicugna (மொலினா, 1782) |
விக்குன்யா தென்னமெரிக்காவில் உள்ள உள்ள ஒட்டக இனத்தைச் சேர்ந்த ஒரு விலங்கு. உயிரியல் அடிப்படையில் இது இலாமாவிற்கு நெருக்கமானது. இது இதனுடைய முடிக்காக வளர்க்கப்படுகிறது. இவை குறைவான மயிர்களைக் கொடுத்தாலும், இதன் மயிர்கள் மிகவும் மென்மையாகவும் வெதுவெதுப்பாகவும் இருப்பதால், அவற்றினாற் செய்யப்பட்ட ஆடைகள் விரும்பி வாங்கப்படுகின்றன. மூன்றாண்டுகளுக்கு ஒருமுறைதான் வெட்ட முடியும் என்பதால் இதன் மயிரின் விலை மிகவும் அதிகமாகும்.
இன்கா காலந்தொட்டு விக்குன்யாக்கள் அரசின் சட்டப் பாதுகாப்புப் பெற்றுள்ளன. 1974-இல் அழியும் நிலையில் இருப்பதாக அறிவிக்கப்பட்டபோது வெறும் 6000 விலங்குகளே எஞ்சியிருந்தன. தற்போது, இவற்றின் எண்ணிக்கை 350,000 ஆகக் கூடியுள்ளது.
விக்குன்யா பெரு நாட்டின் தேசிய விலங்கு ஆகும். இது பெரு அரச சின்னத்திலும் இடம்பெற்றுள்ளது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Vicugna vicugna". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2008. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2008).