உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிப்பீடியா பேச்சு:வாழ்க்கை வரலாறு எழுதுதல் கையேடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இங்கே இடப்பட்டுள்ள ஆங்கில கையேட்டை அடிப்படையாக வைத்து தமிழ் கையேடு ஒன்று தாயரிக்கவிருப்பதால், தயவு செய்து தனி ஆங்கில உள்ளடக்கத்தை அடிப்படையாக வைத்து (த.வி.வழமை) இப்பக்கத்தை நீக்க வேண்டாம். --Natkeeran 17:51, 28 ஜனவரி 2006 (UTC)

நற்கீரன், விக்கிபீடியா திட்ட உதவிப் பக்கங்கள் இல்லாமல் இருப்பதைக் காட்டிலும் முதற்கட்டமாக ஆங்கிலத்தில் இருப்பது மேல். எனவே அவற்றை யாரும் நீக்குவதில்லை. கட்டுரைப் பெயர்வெளிகளில் உள்ள முஉ ஆங்கிலப் பக்கங்களைத் தான் கூடிய மட்டும் தவிர்க்கப் பார்க்க வேண்டும்--ரவி 18:13, 28 ஜனவரி 2006 (UTC)

வார்ப்புரு:வாழ்க்கை வரலாறு எழுதுதல் கையேடு

நபர்கள் கட்டுரைகள் எழுதல் பரிந்துரைகள் - வரைபு 0.6

[தொகு]

தந்தை பெயர், முதற் பெயர் (XX,XX,XXXX - XX,XX,XXXX; இடம், நாடு)...
முதல் பந்(த்?)தியில் நபரின் முக்கியத்துவம் குறிப்பிடுதல் நன்று.

ஒரு நபரை பற்றிய கட்டுரையை கதை சொல்லும் போக்கில் (story telling) எழுதாமல், விபரன (narrative) அல்லது விடய (objective) போக்கில் அல்லது நடையில் சொல்வது நன்று. இயன்ற வரை குறைந்தது முதல் இரு பாகங்களையாவது பந்தி அமைப்பில் தர முனையுங்கள்.

  • நபரின் வாழ்க்கைச் சுருக்கம்
  • நபரின் முக்கியத்துவத்தை மையமாக வைத்து சில விபரிப்புகள்
  • நபரின் படைப்புக்கள், பங்களிப்புக்களின் பட்டியல்கள், அட்டவணைகள் ...
  • ஆதாரங்கள்
  • துணை நூல்கள்
  • வெளி இணைப்புகள்

அனைத்து தகவல்களையும் ஒரே தடவையில் இணைக்க வேண்டிய அவசியம் இல்லை, தெரிந்த தகவல்களை இணைத்தாலே நன்று. பிற பயனர்கள் கட்டுரைகளை மேம்படுத்தும் பொழுது, மேற்கூறிய வடிவை ஒற்றி மேம்படுத்தினால் நன்று. இது ஒரு பரிந்துரையே, தீர்மானம் அல்ல. பிற பயனர்களின் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன. --Natkeeran 17:36, 20 மார்ச் 2006 (UTC)

ஒரு படம் மட்டுமே நடித்த, (படமே இன்னும் வெளிவராத?), அவ்வளவாக ரசிகர்களின் ஆர்வமும் இல்லாத, நடிப்புத் திறன் அறியப்பெறாத ஒரு நடிகைக்கு தமிழ் விக்கிபீடியா கட்டுரை தேவையா? (இது போன்று விக்கிபீடியாவில் இடம்பெறும் அளவுக்கு சாதிக்காத சில நடிக நடிகரின் கட்டுரையை நானும் உருவாக்கி இருக்கலாம் !) விக்கிபீடியாவில் குறிப்பிடத்தக்கமை குறித்த ஒரு பரந்து கொள்கை, வழிகாட்டலையாவது நாம் உருவாக்க வேண்டும். இதே மாதிரி, ஒரு எழுத்தாளர் விக்கிபீடியாவில் இடம்பெறுவதற்கான தகுதிகள் யாவை? ஒரு படம் நடித்த நடிகை விக்கிபீடியாவில் இடம்பெறலாம் என்றால், ஒரு நூல் எழுதிய பிரபலமல்லாத தரமற்ற எழுத்தாளர்களுடன் விக்கிபீடியாவில் இடம்பெற நியாயம் கேட்கலாம். அவ்வப்போது குட்டி எழுத்தாளர்களின் வாழ்க்கைக் குறிப்புகள் விக்கிபீடியாவில் இட்டுச் செல்லப்படுவது கவனிக்கத்தக்கது. ஒரு தரவுத்தளத்துக்கும் கலைக்களஞ்சியத்துக்கும் உள்ள வேறுபாட்டை நாம் வரையறுத்து பின்பற்ற வேண்டும் எனப் பரிந்துரைக்கிறேன்--ரவி 21:03, 29 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]

ரவி, இவர் நடித்த படம் இன்னும் வெளிவரவில்லையா? (செப் 28 இல் வெளிவருவதாக இருந்தது??) எனினும் இந்தக் கட்டுரையை அழிக்காமல், திரைப்பட நடிகைகள் பகுப்பில் இருந்து எடுத்து விடுகிறேன். எனினும் இவர் பாலசந்தரின் 101வது படத்தில் கதாநாயகியாக நடித்தவர் என்ற முறையிலும் இன்னும் பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்ற வகையிலும், அதைவிட முக்கியமாக ஓர் ஆளுமையான ஆஸ்திரேலியத் தமிழர் என்ற வகையிலும் இந்தக் கட்டுரையை தற்போதைக்கு ஆஸ்திரேலியத் தமிழர் பகுப்புக்குள் மட்டும் உள்ளடக்குகிறேன். தமிழ்நாட்டு இரசிகர்களிடையே ஆர்வம் வரும்போது மற்றப் பகுப்புகளுக்குள் அடக்குவதைப்பற்றி பிறகு யோசிக்கலாம்:)). மற்றும்படி உங்கள் கருத்துடன் உடன்படுகிறேன். நன்றி.--Kanags 22:52, 29 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]
தமிழர்களை நாம் தான் தட்டிகொடுத்து உற்சாகப்படுத்தவேண்டும். கடல்கடந்த நாடுகளில் வாழும் தமிழர்கள் இன்றளவும் தமிழில் ஆர்வத்துடன் செயற்படுத்துவது மகிழ்ச்சியையே அளிக்கின்றது. இக்கட்டுரை நடுநிலையாகவே எழுதப்பட்டுள்ளது. அழிக்கவேண்டாம். --Umapathy 03:21, 30 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]

kanags, படம் வெளிவந்த மாதிரி தெரியவில்லை. வழக்கமாக விமர்சனங்கள் விரைந்து வெளியாகும் தளங்களில் இப்படத்திற்கான விமர்சனைத்தை காணவில்லை. படம் வெளிவந்திருந்தாலும், நான் எழுப்பிய கேள்வியில் மாற்றம் இல்லை. கட்டுரையின் நடுநிலையில் எந்தக் குறையுமில்லை. அவர் கவனிக்கத்தக்கவரா என்பது தான் கேள்வி. திரைப்படத்துறையினருக்கு (அதுவும் நடிகர்களுக்கு) அதிக முக்கியத்துவமும் வெளிச்சமும் தமிழர்களால் தரப்படுகிறதா என்பது சிந்தனைக்குரியது. ஒரு படத்தில் நடிப்பதை சாதனையாக கருத முடியாது. ஒரு வேளை அவருக்கு வருது ஏதும் கிடைத்தால், கட்டுரை எழுதலாம். அவர் தமிழர், வெளிநாட்டில் இருந்தும் தமிழ்த் திரையில் நடிக்கிறார் என்பதற்காக விக்கிபீடியா கொள்கைகளில் சமரசமோ சலுகையோ காட்ட முடியாது. விக்கிபீடியா ஒரு தரவுத்தளமாக இருந்தால் யாரைப் பற்றி வேண்டுமானாலும் கட்டுரை எழுதலாம். ஆனால், கலைக்களஞ்சியமாக இருப்பதால் கொஞ்சமாவது notabilityக்கு முக்கியத்துவம் தரப்படவேண்டும். என்னுடைய கேள்வி, இதே போல் ஒரு நூல் பிரசுரித்தவரையோ ஓர் ஓவியம் மட்டும் வரைந்தவரையோ எழுத்தாளர் என்றோ ஓவியர் என்றோ விக்கிபீடியாவில் இடமெபெறச்செய்வோமா என்பது தான். ஒரு படத்தில் மட்டும் இடம்பெற்ற ஒளிப்பதிவாளருக்கோ இசையமைப்பாளருக்கோ நாம் இது போல் கட்டுரைகள் எழுதுவதை ஏற்றுக்கொள்வோமா? அனைத்து பயனுள்ள தகவல்களையும் தமிழர் தமிழில் பெற வேண்டும் என்பது நன்னோக்கம் தான். ஆனால், அவை அனைத்தையும் விக்கிபீடியாவில் செய்ய வேண்டாமே..இது போல் துறை சார் விக்கிகள் பல உள்ளன. மயூரேசனே திரைத்துறைக்கு என்று ஒரு விக்கி தளம் நடத்துகிறார் (பார்க்க:http://tamilcinema.wikia.com/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D). அங்கு இது போன்ற கட்டுரைகளை இடம்பெறச் செய்தால், நாம் தேவைப்படும்போது இங்கு எடுத்தாளலாம் அல்லது இணைப்புகள் தரலாம். பகுப்புப் பக்கத்தில் இருந்து நீக்குவதை ஒரு தீர்வாக கருத முடியாது. பயனர்கள் கருத்தொத்தால், இக்கட்டுரையை தமிழ்த் திரை விக்கியா தளத்துக்கு நகர்த்திவிட்டு இங்கிருந்து அழிக்கப்பரிந்துரைக்கிறேன். தமிழர்களை தட்டிக் கொடுக்க வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், அவை அனைத்தையும் விக்கிபீடியாவில் இருந்து தான் செய்ய வேண்டும் என்று அவசியமில்லையே..தமிழ் சினிமா ஆர்வலன் என்ற முறையில் இக்கட்டுரையை நான் உரை திருத்தம் கூட செய்தேன். ஆனால், அதன் பிறகு தான் இக்கட்டுரை இங்கு இடம்பெறத்தக்கதா என்ற சிந்தனை வந்தது. --ரவி 08:42, 30 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]

ரவி, மயூரேசனின் முன் நின்று நடத்தும் தமிழ் சினிமாத் தளத்தை ஏற்கனவே பார்த்துள்ளேன். விக்கிப்பீடியர்களின் முயற்சியைப் பாராட்டுகின்றேன். நீங்கள் எடுத்த கட்டுரையை இடமாற்றும் முடிவில் ஆட்சேபனையில்லை. --Umapathy 10:28, 30 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]

படம் வெளி வரவில்லை என்ற ஒரே காரணத்திற்காக நீக்க வேண்டுமா ? ஒரு படம் மற்றும் என்று பார்ப்பதற்கு பதில் பாலச்சந்தர் படம் என்று பார்க்கலாமே. மேலும் Notability என்பது ஒரு Subjective Criteria. அதற்கு ஒன்று, இரண்டு கணக்கெல்லாம் கிடையாது. உதாரணமாக காவ்யா விஸ்வநாதன் ஒரு புத்தகம் மற்றுமே எழுதியிருந்தால் கூட அந்தப் புத்தகம் notable தானே. (எப்பிடி notable என்பது வேறு விஷயம்) புருனோ மஸ்கரனாஸ் 18:37, 4 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]

மன்னிக்கவும், கொஞ்சமாவது notability அடிப்படைகளை நாம் வரையறுக்க வேண்டும் என்று விரும்புகிறேன். படம் இன்னும் வெளிவரவில்லை என்பது ஒரு விஷயமல்ல. ஆனால், ஒரு படம் மட்டும் நடித்திருப்பது ஒரு கலைக்களஞ்சியத்தில் இடம்பெறத்தக்க சாதனையா என்பது தான் என் சிந்தனையாக இருக்கிறது. பாலச்சந்தர் படம் என்பதற்காக எந்த சலுகையும் ஏன் தர வேண்டும் என்று புரியவில்லை. கலைக்களஞ்சியத்தில் இடம்பெற அது ஒரு தகுதியாகவும் தெரியவில்லை. பாலச்சந்தர் படங்களில் நடித்த எத்தனையோ கதைநாயகிகள் காணாமல் போயிருக்கிறார்களே ! நடுநிலையோடு எழுதப்பட்டிருக்கிறது என்பதற்காக எல்லா ஆக்கங்களையும் விக்கிபீடியாவில் குவிக்க வேண்டுமா என்று தோன்றுகிறது! ஒரு வேளை இந்த நடிகை இன்னும் ஒரு சில படஙகளிலாவது நடித்து தன் தனித்திறனால் கவனிக்கப்பட்டால், அப்பொழுது அவரைப் பற்றிய கட்டுரை இடம்பெறுவதில் எனக்கு எந்த ஆட்சேபணையுமில்லை. --ரவி 19:24, 4 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]
எத்தனை படம் நடித்தால் notable ?? எத்தனை புத்தகம் எழுதினால் notable ?? இந்த கேள்விக்கு யாராலும் சரியான விடை தர முடியாது. எண்ணிக்கையின் அடிப்படையில் மட்டும் முடிவெடுக்கக்கூடாது என்பதுதான் என் கருத்து. உதாரணமாக ஒரு புத்தகம் மட்டுமே எழுதியிருக்கிறார் என்பதற்காக வால்மீகி non-notable என்று கூறலாமா ?? நான் இந்த கட்டுரை இடம்பெற வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கவில்லை. ஆனால் "ஒரு ...... மட்டும்; அதனால் non-notable" (..... என்பது படம், புத்தகம், etc) என்ற கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. மேலும் if in doubt, keep என்ற கொள்கையையும் இது Spam இல்லை என்பதையும் கருத வேண்டும் புருனோ மஸ்கரனாஸ் 22:50, 4 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]
ரவி, உங்கள் ஆதங்கம் புரிகிறது. யாராவது மருத்துவர்கள் என்று ஒரு பிரிவு ஏற்படுத்தி, ஒவ்வொரு மருத்துவரின் பெயரையும் விபரத்தையும் சேர்க்க முயலுவார்களா. பிரபலமான மருத்துவர்கள் என்று கூறகூடியவர் யாரையாவது உங்களுக்கு தெரியுமா? (Mariano Anto Bruno Mascarenhas, உங்களை இதில் சேர்க்கவில்லை :-;) இப்படியே பல துறைகளை சேர்க்கலாம். கலைத்துறை சற்று வேறுபட்டது, அதில் இயல்பாகவே ஒரு வித popularity சேர்த்து வருகின்றது. மற்றத்துறையில் அந்தவித popularity ஒரு குறிப்பிட்ட வட்டத்தை தவிர மிக அரிதாகவே பொதுவுக்கு வருகின்றது எனலாம். (அரசியலும் கலைத்துறை போன்று இருக்கலாம்.)
ஆஸ்திரேலியத் தமிழர்களுக்கு முக்கியமான ஒரு நபர் என்று கனகுக்கு தோன்றினால் அவரை அந்த பகுப்பில் சேர்ப்பது பொருத்தம் என்றே தெரிகின்றது. அவர் ஒரு நடிகை என்று வைத்து மாத்திரம் முக்கியத்துவத்தை மதிப்பிடத்தேவையில்லைத்தானே. ஆங்கில விக்கிபீடியாவில் ஒரு தேர்தலில் பங்குபற்றும் அனைவரைப் பற்றியும் தகவல்கள் சேர்க்கப்படவுகதை இங்கு குறிப்பிடலாம்.
ரவி, நீங்கள் சுட்டியபடி ஒரு பொது வரையறை ஒன்றை எடுத்துரைப்பது நன்று. இல்லாவிடில் த.வி. க.க. ஒரு தனிநபர் விளம்பர கருவியாக பாவிக்கப்படக்கூடிய சாத்தியம் உண்டு.

--Natkeeran 00:36, 5 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]


மற்ற துறையினரை காட்டிலும் திரைத்துறையினர் மீது இயல்பிருப்பாக ஒரு popularity வந்து விடுகிறது என்பதை ஒப்புக் கொள்கிறேன். சிறு நடிகர்களை குறித்த ஆங்கில விக்கிபீடியா தகவல்கள் கூட உதவிகரமாக இருப்பதும் உண்மை தான். ஆனால், ஆஸ்திரேலியத் தமிழர், பாலச்சந்தர் பட நாயகி என்பதை ஒரு அடிப்படையாக வைத்து இவரது முக்கியத்துவத்தை அளக்க முடியாது. படம் வெளிவந்து இவரது நடிப்பு பாராட்டப்பட்டிருந்தால் கூட எனக்கு மறுயோசனை ஏதும் இருந்திருக்காது. இது விதயத்தில் எனக்கு kanags, விமலா ராமனுக்கு எதிராக தனிப்பட்ட முறையில் ஒன்றுமில்லை :) பல சமயங்களில் இது போன்ற பேச்சுப் பக்கங்களில் தொடங்கும் உரையாடல்கள் பின்னர் விக்கிபீடியா கொள்கைகள், வழிகாட்டல்களை இறுதி செய்ய உதவி இருக்கின்றன. அந்த வகையில் இந்தப் பக்க உரையாடல்கள் பயன்படும் என்று நினைக்கிறேன். நன்றி--ரவி 22:52, 5 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]

ரவி, இங்கு யார் யாருடைய முக்கியத்துவத்தை மதிப்பிடுவது என்பது கேள்விக்கு வருகின்றது. அஸ்திரேலியத் தமிழர்கள் தகவல் தேடுமிடத்து இந்த நபரை தேடலாம் அல்லவா. அவர் ஒரு வித local herione அல்லது role model ஆக இருக்க சந்தர்ப்பம் இருக்கின்றது. எனக்கு இவரைப் பற்றி தெரியாது, ஆதனால் தான் கனகு தீர்மானிப்பதே பொருத்தம் என்றேன்.

முக்கியத்தின்போது Achievement, Contribution, Relevance, Importance போன்ற கூறுகள் கவனத்தில் எடுக்கப்படவேண்டும். வேண்டுமானல், இந்த உரையாடலை ஆலமரத்தடிக்கு மாற்றலாம், ஏன் என்றால் இங்கு இனி இது அவ்வளவு பொருந்தாது. --Natkeeran 00:55, 6 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]

இந்தக் கட்டுரையை நீக்கி விடும்படி கேட்டுக்கொள்கிறேன். கருத்துத் தெரிவித்தவர்களுக்கு நன்றி.--Kanags 02:31, 26 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]

கட்டுரை நீக்கப்பட்டாலும், இப்பேச்சுப் பக்கம் பொருத்தமான கொள்கைப்பக்கத்துக்கு நகர்த்தப்பட்டு பேணப்பட வேண்டும். கோபி, கவனிக்க :)--Ravidreams 22:53, 26 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]

நீக்கப்ப்பட்ட கட்டுரையை மீட்டெடுத்துள்ளேன். யாருக்காவது ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்கவும்.--Kanags \பேச்சு 04:33, 30 டிசம்பர் 2008 (UTC)

குறிப்பிடத்தக்க நபர்கள் யார்

[தொகு]

ஆயிரக்கணக்கான தமிழ் பேசும் பொறியியலாளர்கள் இருக்கின்றன். இவர் மட்டும் என்ன ஸ்பெஷல்? அவர் வாழ்க்கை குறிப்போ, தமிழிலோ, ஆங்லத்திலோ ஒரு சாதனையும் இல்லாமல், ஒருவர் பேரை குறிப்பது சரியில்லை −முன்நிற்கும் கருத்து 217.28.2.87 (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.


இவர் உயர் தொழில்நுட்பத்துறை பற்றி ஆழமான நூல் ஒன்றைத் தமிழில் எழுதியுள்ளார். தமிழ் சூழலில் விரலில் எண்ணிவிடக்கூடிய அளவே அறிவியல் எழுத்தாளர்கள் உள்ளார்கள். ஆகையால் இவரைப் பற்றி கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவில் இருப்பது மொத்தப் பொருத்தம். உங்களுக்கு ஸ்பெஷல் என்ற சொல்லுக்கு தமிழ் தெரியவில்லை எனில் தமிழ் விக்சனரியைப் பயன்படுத்தவும். --Natkeeran 15:05, 28 பெப்ரவரி 2009 (UTC)
சரி, அவர் சாதனையென்று எதாவது இருந்தால், அதைப் பற்றி உரையாடலில் சொல்லி மாய்ந்து போகவேண்டாம். கட்டுரையில் போடவும். மேலும் வாழ்க்கை குறிப்புகளூம் அவசியம்.−முன்நிற்கும் கருத்து 217.28.2.87 (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
உங்கள் குறிப்புகள் அவமதிப்பதாக அமைகிறது. எனவே இதை இன்னொரு பக்கத்து மாற்ற உள்ளேன்.--Natkeeran 15:23, 28 பெப்ரவரி 2009 (UTC)