விக்கிப்பீடியா பேச்சு:தானியங்கித் தமிழாக்கம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தானியங்கித் தமிழாக்கங்களை உடனுக்குடன் நீக்குவதற்கான கொள்கைப் பரிந்துரையாக இப்பக்கத்தை முன்வைக்கிறேன். மாற்றுக் கருத்துகள், நடைமுறைகளைப் பரிந்துரைக்கலாம். ஒரு வார காலத்துக்குப் பின், தமிழ் விக்கிப்பீடியாவின் முறையான கொள்கையாகக் கருதப்படும்--இரவி 12:03, 17 சூலை 2011 (UTC)[பதிலளி]

சோடாபாட்டில் கருத்துகள்[தொகு]

தற்போதைய தானியங்கி தமிழாக்க சேவைகளின் தரம் இப்படித்தான் உள்ளது

தற்போதைய முன்மொழிவை முழுமையாக வரவேற்கிறேன் + ஆதரிக்கிறேன். இதற்கான என் காரணங்கள் பின்வருமாறு:

கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி ஆல்ஃபா பதிப்பு வெளியாகி இந்த ஒரு மாத காலத்தில் சுமார் 100 கட்டுரைகள் இவ்வாறு உருவாக்கப்பட்டு நீக்கப்பட்டுள்ளன. தானியங்கி மொழிமாற்றம், தமிழ் தெரியாத பிற மொழியினர், தமிழ் சரியாக எழுதத் தெரியாதவர்களால் கட்டுரைகளை உருவாக்கப் பயன்படுத்தப் படுகிறது. இத்தகு கட்டுரைகளை உருவாக்கியோர் மேம்படுத்துவதில்லை. அடுத்தடுத்து இதே போன்ற கட்டுரைகளை உருவாக்குவதில் தான் முனைப்பு காட்டுகிறார்கள். இதனை உடனனுக்குடன் நீக்காவிடில் அது அவர்களை உற்சாகப்படுத்தும். பின் இத்தகு கட்டுரைகள் அதிகமாகி நம்மால் சமாளிக்க முடியாத நிலைக்குப் போகும்.

  • தானியங்கியால் உருவாக்கப்படும் கட்டுரைகள் உடனடியாக (ஒரிரு மணி நேரங்களில்) சரி செய்யப்படா விட்டால் நீக்கப்பட வேண்டும். நிருவாகிகள் அல்லாத பிற பயனர்கள், விரைவு நீக்கல் வேண்டுகோளைச் சேர்க்கலாம். ஏற்கனவே உள்ள கட்டுரைகளில் இவ்வாறு சேர்க்கப்படும் உள்ளடக்கங்களும் உடனடியாக நீக்கப்படலாம்.
  • தானியங்கியால் தொடர்ச்சியாக கட்டுரைகளை உருவாக்கும் பயனர்கள் மூன்று முறை எச்சரிக்கை செய்யப்பட்டு அதற்கு மேலும் தொடர்ந்து அவ்வாறு கட்டுரைகளை உருவாக்கினால் தற்காலிகமாகத் தடை செய்யப்படலாம்.--சோடாபாட்டில்உரையாடுக 13:14, 17 சூலை 2011 (UTC)[பதிலளி]