விக்கிப்பீடியா பேச்சு:கொள்கை வகுத்தல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பரிந்துரை 2[தொகு]

சிக்கலை அடையாளம் காணல்

தமிழ் விக்கியில் நீங்கள் பங்களிக்கும் போது ஒரு சிக்கலை அல்லது மேம்படுத்தக் கூடிய விடயத்தை நீங்கள் அடையாளம் காணலாம். இந்தச் சிக்கல் ஏற்கனவே உள்ள வழிமுறைகளால் தீர்க்கப்படக் கூடியதா என்று பாருங்கள். எ.கா கட்டுரை அல்லது பயனர் பேச்சுப் பக்கங்களில், ஆலமரத்தடியில் உரையாடிப் பாருங்கள். இவ்வாறான உரையாடல்களினால் உங்களுக்குத் தீர்வு கிடைக்கவில்லை என்றால், புதிய கொள்கை அல்லது வழிகாட்டலை உருவாக்குவதன் ஊடாக, அல்லது ஏற்கனவே உள்ள கொள்கை அல்லது வழிகாட்டலில் திருத்தங்களைக் கொண்டு வருவதன் ஊடாக தீர்க்க முடியுமா என்று பாருங்கள். அவ்வாறு நீங்கள் உணரின், அடுத்த கட்டத்துக்குச் செல்லுங்கள்.

பகுப்பாய்ந்தல், தீர்வு தேடல்

நீங்கள் அடையாளம் கண்ட விடயத்தின் செயற்பரப்பை (scope) அறியுங்கள். இது தொடர்பான தமிழ் விக்கியில் உள்ள பிற கொள்கைகளையும் வழிகாட்டல்களையும், ஆங்கில மற்றும் பிற விக்கிகளில் உள்ள கொள்கைகள் வழிகாட்டல்களையும் படித்து அறிந்து கொள்ளுங்கள். இந்தச் சிக்கலில் இருந்து உங்களை விலக்கி வைத்து, ஒரு புதுப் பயனரை அல்லது வேறு ஒருவரை வைத்து அலசிப் பாருங்கள். இதில் தொடர்புடைய, அல்லது தொடர்பாக செயற்பட்டு இருக்கக் கூடிய பிற பயனர்களின் கருத்துக்களைக் கண்டறியுங்கள். சிக்கலின் வரையறை, செயற்பரப்பு, தீர்ப்பதால் கிடைக்கக் கூடிய நன்மைகள், பக்க விளைவுகள், நடைமுறைப்படுத்தல் போன்ற விடயங்களைக் கருத்துதில் எடுத்து உங்கள் கொள்கை அல்லது வழிகாட்டல் முன்மொழிவினை வரையுங்கள். ஒன்றுக்கு மேற்பட்ட பயனர்கள் ஒன்று கூடி ஒரு பரிந்துரையை வைப்பதும் வரவேற்கத்தக்கது, உங்கள் பரிந்துரை ஏற்கப்படுவதற்கான வாய்ப்பை இது அதிகரிக்கும். கொள்கைகள் வழிகாட்டல்களை விட கூடிய வலுவானவை, ஆகையால் அவற்றை உருவாக்குவதும் மாற்றுவது கூடிய கவனத்துடன் மேற்கொள்ளப்படவேண்டும்.

உரையாடல், கருத்துக் கோரல்

உங்கள் கொள்கை அல்லது வழிகாட்டல் முன்மொழிவு தொடர்பான அறிவித்தலை விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (கொள்கை) பக்கத்தில் இட்டு பரந்த பயனர்களிடம் கருத்துக்களைக் கோருங்கள். இந்த உரையாடல்களின் ஊடாக உங்களின் முன்மொழிவு, அணுகுமுறை தொடர்பாக கூடிய புரிதல் கிடைக்கலாம். இந்த உரையாடல்களின் ஊடாக பெறப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் உங்கள் முன்மொழிவில் தகுந்த மாற்றங்களைச் செய்யுங்கள். குறிப்பான கால எல்லை குறிப்பிட்டு இந்தப் பணியை மேற்கொள்ளலாம். ஆனால் பரந்த பயனர்கள் பங்களிக்க ஏதுவாக்கும் முறையில் குறைந்தது 2-4 கிழமைகள் அவகாசம் தரப்பட வேண்டும். சிக்கல்கள், உரையாடல்களைப் பொறுத்து இந்தக் கால எல்லை விரியலாம்.

இணக்க முடிவு

மேற்சுட்டப்பட்ட சுற்று முறையினால் (iterative process) முன்னெடுக்கப்படும் கொள்கை அல்லது வழிகாட்டல் தொடர்பான பரந்த பயனர்களின் ஒப்புதல் பெற்ற ஒரு வரைவை பெரும்பாலும் எட்ட முடியும். அவ்வாறு எட்ட முடியாது எனின் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட வரைவுகளுக்குப் பின்னர் வாக்கெடுப்பு மூலம் கொள்கையை நிறைவேற்ற முனையலாம். வாக்கெடுப்பில் நீங்கள் 2/3 பெரும்பான்மை பெறவேண்டும். இவ்வாறு ஒரு புதிய கொள்கை அல்லது வழிகாட்டல் உருவாக்கப்பட்ட பின் அதனை முறைப்படி ஆவணப்படுத்தி விடுங்கள் (எ.கா தகுந்த பகுப்புக்கள், பட்டியல்களில் சேர்த்தல்.)

செயற்படுத்தல்

ஒரு புதிய கொள்கையை செயற்படுத்தத் தொடங்கும் போது பயனர்களுக்குத் தகுந்த முறையில் அறிவித்தல் தாருங்கள் (எ.கா தள அறிவிப்புக்கள், பயனர் பக்க அறிவிப்புக்கள்). அவர்கள் தமது செயற்பாடுகளில் மாற்றம் ஏற்படுத்த கால அவகாசம் தேவை என்று உணரின், அது தொடர்பாகவும் தெளிவான அறிவுறுத்தல்கள் வழிகாட்டல்கள் வழங்குங்கள். தொடர்ச்சியாக இந்தக் கொள்கையை அல்லது வழிகாட்டலை எவ்வாறு அமுல்படுத்தலம் என்பது தொடர்பான வியூகத்தை ஆவணப்படுத்துங்கள், செயற்படுத்துங்கள்.

--Natkeeran (பேச்சு) 02:58, 20 மார்ச் 2014 (UTC)

கொள்கை எதிர் வழிகாட்டல்[தொகு]

நக்கீரன், இது ஒரு நடைமுறையில் உள்ள வழிகாட்டல் பக்கம். இது எழுதப்படுவதற்கு முன்பே இந்த அடிப்படையில் பல கொள்கைகளை உருவாக்கியுள்ளோம். எழுதியதற்குப் பிறகும் ஒரு கொள்கையை உருவாக்கியுள்ளோம். அப்படியிருக்க பேச்சுப் பக்கத்தில் உரையாடி இந்த வழிகாட்டலை மேம்படுத்துவது தான் முறை. மாறாக, முற்றிலும் உள்ளடக்கங்களை நீக்கி, வெறுமைப்படுத்தி, வரைவு என்ற பக்கத்துக்கு நகர்த்தி விட்டு, புதிதாக பரிந்துரைகள் என்று தொடங்கியிருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. தவிர, பரிந்துரை 2 என்று நீங்கள் தந்திருப்பது ஏற்கனகவே உள்ள வழிகாட்டலைத் தான் வேறு சொற்களில் கூற முனைகிறது. பரிந்துரை 2 குறிப்பிடும் இரண்டு புதிய விசயங்கள்:

  • பரந்த பயனர் பங்களிக்க ஏதாவது 2-4 கிழமைகள் காலம் தர வேண்டும் என்பது. விக்கிப்பீடியாவின் பல வழமையான முக்கியப் பணிகளுக்கும் கூட ஒரு வார காலமே தருகிறோம். இந்நிலையில் 4 கிழமைகள் வரை காலம் தருவது, தேவையற்ற கால தாமதத்துக்கே இட்டுச் செல்லும். உரையாடல்கள் நடக்கும் அந்தந்த வாரங்களில் முனைப்பாக பயனர் சமூகங்களே முதிர்ச்சியுடன் உரையாடி நல்ல முடிவை எடுக்க முடியும். விட்டுப் போன சில பயனர்களின் கருத்து வேண்டும் என்பதற்காக இழுத்தபடிப்பது முறையாக இருக்காது.
  • வாக்கெடுப்பு என்று வந்தால் 2/3 பெரும்பான்மை என்று கூறியிருக்கிறீர்கள். இது வரையிலானா கொள்கைகள் அனைத்துமே இணக்க முடிவின் அடிப்படையிலேயே எடுக்கப்பட்டுள்ளன. எனிலும், எதிர்காலத்தில் வாக்கெடுப்புகள் என்று வரும் போது எவ்வாறு முடிவெடுப்பது என்பதற்கு ஒரு வழிகாட்டல் தேவை தான். மற்ற விக்கிப்பீடியாக்களில் எவ்வாறு இதனை அணுகுகிறார்கள் என்பதைக் கவனித்து வழிகாட்டலைத் தெளிவுபடுத்த வேண்டியிருக்கிறது. நன்றி. --இரவி (பேச்சு) 04:04, 24 மார்ச் 2014 (UTC)
ரவி, தமிழ் விக்கியில் தற்போதைய வளர்ச்சி நிலையில் இது மாதிரியனா முக்கிய meta கொள்கைகளை தனியாக உருவாக்கி, பின்னர் அதை வைத்தே அதை நிலைநாட்டுவது மிகவும் நல்ல முன் காட்டாகக் கருதவில்லை. ஆகையால்தான், பரிந்துரை என்று மாற்றினேன். இந்த வழிகாட்டல் உருவாக்கும் போது, பரந்த கருத்துக்கள் பெறப்பட்டதா? --Natkeeran (பேச்சு) 13:22, 24 மார்ச் 2014 (UTC)
நற்கீரன், நான் முன்பே சொன்னது போல் இது ஒரு வழிகாட்டல் மட்டுமே. கொள்கை அன்று. நீங்கள் தான் அதனைக் கொள்கையாக மாற்றும் பரிந்துரைகளை முன்வைத்துள்ளீர்கள். அக்டோபர் 2013ல் புருனோ இரண்டு கொள்கை முன்மொழிவுகளை வைத்த விதம் விமரிசனத்துக்கு உள்ளாகியது.

பார்க்க:

எனவே தான், புதுப்பயனர்கள் தமிழ் விக்கிப்பீடியாவின் கொள்கை உருவாக்கும் முறையை அறிந்து செயற்படுவதற்கு ஏதுவாக இந்த வழிகாட்டலை உருவாக்கினேன். புருனோவுக்கு இந்த வழிகாட்டலைத் தந்த போது யாரும் மறுக்கவில்லை.

வேறு யாராவது இந்த வழிகாட்டலைப் புருனோவுக்குத் தந்திருக்க வேண்டும். யாரும் செய்யாததால் நான் செய்தேன். வழக்கமான விக்கிப் பக்கம் போல் இதையும் யார் வேண்டுமானாலும் மேம்படுத்தி இருக்கலாம். அதை விடுத்து நான் தன்னிச்சையாகச் செய்ததாக கூறுவது தவறு.

நிருவாக அணுக்க நீக்கல் கொள்கை உருவாக்கத்தின் போது கூட இந்த வழிகாட்டலின் அடிப்படையில் செயல்படுகிறேன் என்று தெளிவாக கூறி இருந்தேன். அப்போதும் யாரும் மறுக்கவில்லை.

ஏனெனில், இந்தப் பக்கத்தில் மறுப்பதற்கு ஒன்றுமேயில்லை என்பது தான் உண்மை. ஏற்கனவே இருந்து வரும் நடைமுறையைத் தான் இந்த வழிகாட்டல் விளக்குகிறது. இந்த வழிகாட்டல் பக்கம் இல்லாமலேயே பல கொள்கைகளை உருவாக்கி இருக்கிறோம். இனியும் உருவாக்க முடியும். எனவே, இந்த வழிகாட்டல் பக்கத்தின் காரணமாக ஒரு தவறான கொள்கையைத் தன்னிச்சையாக உருவாக்கியது போன்ற தோற்றத்தை எழுப்ப வேண்டாமே. நன்றி. --இரவி (பேச்சு) 14:13, 24 மார்ச் 2014 (UTC)