விக்கிப்பீடியா பேச்சு:பயனர் மீது அவதூறு செய்வதை தடுத்தல் (வரைவு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கட்டுரை எழுதும் போது ஏற்படும் கருத்து வேறுபாடுகள் குறித்து விவாதிக்க விக்கிப்பீடியா:பிணக்குத் தீர்வுமுறை (வரைவு) இந்த கொள்கை அவதூறு மற்றும் தனி மனித தாக்குதலுக்காக

இவற்றை நீங்கள் உங்கள் எண்ணத்திற்கு வரைந்தீர்களா? அல்லது மேல்விக்கியில் அல்லது ஆங்கில விக்கியில் இருந்ததை மொழிபெயர்த்தீர்களா புருனோ?--Kanags \உரையாடுக 13:39, 21 அக்டோபர் 2013 (UTC)
தமிழ் விக்கிப்பீடியா ஆங்கில விக்கிப்பீடியாவைப் போல் ஆயிரக் கணக்கில் பங்களிப்பாளர்களைக் கொண்டது அல்ல. இங்கே இவ்வாறான விடயங்களை முன்னெடுப்பதற்குக் இங்குள்ள சூழலை மையமாக கொண்டு நாம் தான் வகுக்க வேண்டும். எனவே தமிழ் விக்கி சூழலிற்கு ஏற்ப தந்துள்ளேன். இது வரைவு (draft) மட்டுமே. இதில் நம் சூழலிற்கு ஏற்றாற் போல் நீங்கள் உங்கள் கருத்துக்களை தெரிவிக்க வேண்டுகிறேன் புருனோ மஸ்கரனாஸ் (பேச்சு) 14:10, 21 அக்டோபர் 2013 (UTC)
புருனோ, இது போன்ற கடுமையான சட்ட திட்டங்களின் விளைவுகள் சிறு விக்கி சமூகங்களை எப்படி அழிக்க வல்லன என்பதை முன் அனுபவத்தால் அறிவேன் (அழிந்த சமூகங்களும் பல உள்ளன). இப்போது நடைபெறும் காரசார முரணில் அவதூறு வரை போயுள்ளதை அறிந்தேன். அதில் உங்களையும் ஒரு கைப்பாவை கணக்கு அவதூறு செய்திருப்பதை அறிந்தேன். இதனை தடித்த தோலுடனும், மிகப்பெருந்தன்மையுடனும் அணுக வேண்டுகின்றேன். அவ்வாறு விடுவது கடினம் என்பதை அறிவேன். நிருவாகிப் பொறுப்பில் செயல்படுவதால் எனக்கும் சிலமுறை பல விக்கித் திட்டங்களில் இது போன்று நிகழ்ந்துள்ளது. அவற்றில் இருந்து நான் கற்றவை இது தான் - நம்மை பாதிக்கும் நிகழ்வுகளின் சூட்டோடு கொள்கை வரவு, முழுமையாகத் தீர்வு காணல் போன்ற செயல்களில் ஈடுபடாதிருக்க வேண்டும். இதுவே உங்கள் மீது பெருமரியாதை கொண்டிருக்கும் என் வேண்டுகோளும் கூட.--சோடாபாட்டில்உரையாடுக 14:51, 21 அக்டோபர் 2013 (UTC) 👍 விருப்பம் -- சுந்தர் \பேச்சு 14:59, 21 அக்டோபர் 2013 (UTC)👍 விருப்பம்--கலை (பேச்சு) 07:35, 22 அக்டோபர் 2013 (UTC) 👍 விருப்பம் --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 09:36, 22 அக்டோபர் 2013 (UTC) 👍 விருப்பம் --செல்வா (பேச்சு) 13:04, 22 அக்டோபர் 2013 (UTC)

தொகுப்புகளை மீள்வித்தல்[தொகு]

கருத்துகள் இட்ட வரிசையை மாற்ற வேண்டாம் என்பதால் புருனோ செய்த 2 தொகுப்புகளை மீளவும் முன்பு இருந்த நிலைக்கு மாற்றியுள்ளேன்.--செல்வா (பேச்சு) 13:03, 22 அக்டோபர் 2013 (UTC)