விக்கிப்பீடியா பேச்சு:கலைக்களஞ்சியத் தலைப்புகள்/பிரிட்டானிகா தகவல் களஞ்சியம்/தொகுதி 1

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிபி, பக்கத்தை நான் முன்பு இட்டிருந்த வடிவமைப்புக்கே மாற்ற முடியுமா? அகர வரிசை புத்தகத்தில் உள்ளது மாதிரி இருக்க வேண்டும். அப்போது தான் பலரும் தலைப்புகளை இற்றைப்படுத்தும் பணியைக் குழப்பம் இல்லாமல் செய்ய முடியும். நான் இட்டிருந்த ஏழு முதன்மைத் தலைப்புகளும் முதற் தொகுதியின் முதற் பக்கத்தில் வருவன. ஒரே வரியில் நான் கொடுத்திருந்த மற்ற தலைப்புகள் யாவும் தொடர்புடைய தலைப்புகள். இவை ஒவ்வொரு கட்டுரைக்குள்ளும் தடித்த எழுத்துகளில் தரப்பட்டுள்ளன (விகடன் பதிப்பில்). எடுத்துக்காட்டுக்கு, அக்கார்டியனைப் பற்றி எழுத விரும்புபவர் கூடவே கான்செர்டினா பற்றி எழுத முடியும். அக்காடிய மொழி பற்றி எழுதுபவர் கூடவே செமிட்டிக் மொழி கோணவடிவ எழுத்துமுறை அராமிய மொழி ஆகியவற்றை மேம்படுத்த முடியும். தற்போது நீங்கள் கொடுத்துள்ள வடிவில் தொடர்புடைய தலைப்புகளை இனங்காண முடியாது. --இரவி (பேச்சு) 09:00, 8 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

இரவி மாற்றிவிட்டேன் . உதவுவதாக எண்ணியே அகர வரிசையில் இட்டேன் . புரிந்து கொண்டேன் . :) --Commons sibi (பேச்சு) 14:56, 8 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]
நன்றி சிபி. கண்டிப்பாக உதவி தேவை. 172ஆம் பக்கத்தில் தான் ஆவன்னாவே வருது :) நாம இப்ப தான் முதல் பக்கம் முடிச்சிருக்கோம். அதனால் இப்போதைக்கு அகரவரிசை பற்றி யோசிக்க வேண்டாம் :) --இரவி (பேச்சு) 16:36, 8 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

தலைப்புகள் சேர்க்க உதவி தேவை[தொகு]

தங்களிடன் விகடன் வெளியிட்ட பிரிட்டானிகா தகவல் களஞ்சியம் நூல் உள்ளோர் தலைப்புகளைச் சேர்த்து உதவ வேண்டுகிறேன். கவனிக்க: பயனர்:தமிழினியன், பயனர்:Nandhinikandhasamy. நன்றி.--இரவி (பேச்சு) 04:24, 13 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

புத்தகம் இன்னும் எனது கையில் கிடைக்கவில்லை. அடுத்த வாரம் கிடைக்கும் என நினைக்கிறேன். புத்தகம் கையில் கிடைத்தவுடன் இப்பணியினை தொடங்குகிறேன் இரவி :).--நந்தினிகந்தசாமி (பேச்சு) 03:44, 14 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]
இன்னும் சில தினங்களில் செய்கிறேன். --தமிழினியன் (பேச்சு) 15:00, 14 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]