விக்கிப்பீடியா பேச்சு:இன்றைய சிறப்புப் படம்/செப்டம்பர் 16, 2018

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்#படங்களின் தெரிவு/சிறப்புப் படங்களுக்கான வரையறைகள்?

அன்ரன், குறிப்பாக இங்கு என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரியவில்லை. இரண்டு ஆண்டுக் காலமாக இற்றைப்படுத்தப்படாமல் இருந்த முதற்பக்கத்தை இற்றைப்படுத்த எண்ணினேன். அவ்வளவு தான். என்னால் இற்றைப்படுத்தப்பட்ட அனைத்துப் படங்களும் ஆங்கில விக்கிப்பீடியாவில் முதற்பக்கத்தில் வெளியானவையே. இப்படத்தை முதல் பக்கத்தில் இருந்து நீக்கி விடலாமா? முதல் பக்கத்தை நீங்களே கவனித்துக் கொள்கிறீர்களா?--Kanags (பேச்சு) 04:53, 16 செப்டம்பர் 2018 (UTC)
தற்போதுள்ள படம் தொழினுட்ப அடிப்படையில் (எ.கா: இரைச்சல்) குறைபாடுள்ள படம். எனவே வருங்காலங்களில் பொதுவகத்தில் இருந்து சிறப்புப் படங்களை எடுப்பது நல்லது. அங்கு மதிப்பீட்டின் பின் அடிப்படையில் சிறப்புப் படங்களாக குறிப்பதால் தொழினுட்ப நிலை நன்றாகவே இருக்கும். தற்போதுள்ள படம் ஆரம்பத்தில் ஆ.வி.யில் முதற்பக்கப்படிமமாக இருந்திருந்தும், தற்போது சிறப்புப் படம் என்ற நிலை அற்று உள்ளது. சிறப்புப் படிமங்கள் {{Assessments|featured=1}} என்ற வார்ப்புருவினால் அடையாளப்படுத்தப்பட்டிருக்கும். --AntanO (பேச்சு) 07:04, 16 செப்டம்பர் 2018 (UTC)