விக்கிப்பீடியா:WikiProject Medicine/Translation task force/RTT/Simple pregnancy
| கர்ப்பம் | |
|---|---|
| கர்ப்பமாக இருக்கும் ஒரு பெண் | |
| வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள் | |
| சிறப்பு | Obstetrics |
| ஐ.சி.டி.-10 | Z33. |
| ஐ.சி.டி.-9 | 650 |
| நோய்களின் தரவுத்தளம் | 10545 |
| மெரிசின்பிளசு | 002398 |
| ஈமெடிசின் | article/259724 |
| ம.பா.த | D011247 |
சினைக்காலம் அல்லது கருசுமத்தல் காலம் என்றும் அறியப்படும் கர்ப்பமானது ஒரு பெண்ணுக்கு உள்ளே ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சந்ததிகள் உருவாகும் காலம் ஆகும்.[1] ஒரு அல்லது பன்மடங்குக் கர்ப்பம் என்பது இரட்டைக் குழந்தைகளைப் போல ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சந்ததிகளைக் கொண்டதாகும்.[2] பாலுறவுச் செயல்பாட்டின் மூலமாக அல்லது உதவப்பட்ட இனப்பெருக்கத் தொழில்நுட்பவியலின் மூலமாகக் கர்ப்பம் நிகழலாம். அது வழக்கமாகக் கடைசி மாதவிடாய்க் காலத்தில் இருந்து 40 வாரங்களுக்கு (10 நிலவு சார்ந்த மாதங்கள் (LMP)) நீடித்து, குழந்தைப்பிறப்பில் முடியும்.[1][3] இது , கருவுறுதலுக்குப் பிறகு சுமார் 38 வாரங்களாகும். An embryo is the developing offspring during the first 8 weeks following conception after which the term fetus is used until birth.[3] கர்ப்பத்துக்கான முன்னதான அறிகுறிகளில் தவறவிடப்பட்ட ஒரு மாதவிடாய், தொடுவலியுடன் கூடிய மார்பகங்கள், , குமட்டல், மற்றும் வாந்தி, பசி மற்றும் அடிக்கடி சிறுநீர் கழித்தல் ஆகியவை அடங்கும்.[4] ஒரு கர்ப்பப் பரிசோதனையின் மூலமாகக் கர்ப்பம் உறுதிசெய்யப்படலாம்.[5]
கர்ப்பம் பொதுவாக மூன்று மாதக்காலங்கள் மூன்றாகப் பிரிக்கப்படுகிறது. முதல் மூன்று மாதக்காலம் வாரம் ஒன்று முதல் பன்னிரண்டு வரை ஆகும், இதில் கருவுறுதல் அடங்கும். கருவுறுதலைத் தொடர்ந்து, சினை முட்டையானது கருமுட்டைக் குழாய் வழியாகக் கீழ்நோக்கிப் பயணம் செய்து கருப்பைக்கு உட்புறத்தில் ஒட்டிக்கொள்ளும், அங்கே அது ஒரு வளர்ந்த சினைக் கரு மற்றும் நஞ்சுக்கொடியை உருவாக்கத் தொடங்கும்.[1] கருச்சிதைவுக்கான (வளர்ந்த சினைக் கரு அல்லது கருவின் இயற்கையான மரணம்) மிகவும் அதிகமான அபாயத்தை முதல் மூன்று மாதக்காலம் கொண்டுள்ளது. [6] இரண்டாவது மூன்று மாதக்காலம் வாரம் 13 முதல் 28 வரை ஆகும். சுமாராக இரண்டாவது மூன்று மாதக்காலத்தின் நடுவில் வளர்ந்த சினைக் கருவின் அசைவை உணர முடியலாம். 28 வாரங்களில் 90% -க்கு அதிகமான கொண்ட குழந்தைகளால், உயர் தர மருவத்துவப் பராமரிப்பு அளிக்கப்பட்டால், கருப்பைக்கு வெளியே நீடித்து வாழமுடியும். மூன்றாவது மூன்று மாதக்காலம் 29 வாரங்கள் முதல் 40 வாரங்கள் வரை ஆகும்.[1]
பிரசவத்துக்கு முந்தையப் பராமரிப்பு கர்ப்பத்தின் இறுதிவிளைவை மேம்படுத்தும்.[7] கூடுதலாக ஃபோலிக் அமிலத்தை எடுத்துக்கொள்வது, மருந்துகளையும், சாராயத்தையும் தவிர்ப்பது, வழக்கமான உடற்பயிற்சி, இரத்தப் பரிசோதனைகள், வழக்கமான உடல்ரீதியான சோதனைகள் இதில் அடங்கும்.[7] கர்ப்பம் தொடர்பான சிக்கல்களில், பிறவற்றில், , கர்ப்பம் தொடர்பான உயர் இரத்த அழுத்தம், கருசுமத்தல் காலத்தில் நீரிழிவு நோய், இரும்புச் சத்துக்குறைவு இரத்தச் சோகை மற்றும் , தீவிரமான குமட்டல் மற்றும் வாந்தி ஆகியவை அடங்கலாம்.[8] அடுத்தடுத்த கர்ப்பக் காலம் 37 வாரங்கள் முதல் 41 வாரங்கள் வரை ஆகும், இதில் முன்னதான காலம் 39 மற்றும் 40 வாரங்களாகவும், முழுமையான காலம் 37 மற்றும் 38 வாரங்களாகவும், தாமதமான காலம் 41 வாரங்களாகவும் இருக்கும். 41 வாரங்களுக்குப் பிறகு அது பிந்தையக் காலம் என்று அறியப்படுகிறது. 37 வாரங்களுக்கு முன்பு பிறக்கும் குழந்தைகள் குறைந்தகாலப் பிறப்பு ஆகும், மூளை மற்றும் தசைப் பாதிப்பு போன்ற உடல்நலப் பிரச்சனைகளுக்கான அதிகமான அபாயம் அந்தக் குழந்தைகளுக்கு இருக்கும்.[1] பிற மருத்துவக் காரணங்களால் அவசியப்பட்டாலன்றி, 39 வாரங்களுக்கு முன்பு கருவும், நஞ்சுக்கொடியும் கருப்பையை விட்டு நீங்குகிற செயல்முறையைத் தூண்டுதல் அல்லது சிசேரியன் அறுவை மூலமாகப் பிரசவத்தைச் செயற்கையாகத் தொடங்கக்கூடாது என்று பரிந்துரைக்கப்படுகிறது.[9]
சுமார் 213 மில்லியன் கர்ப்பங்கள் 2012 -இல் நிகழ்ந்தன, இவற்றில் 190 மில்லியன் வளரும் உலக நாடுகளிலும், 23 மில்லியன் முன்னேறிய உலக நாடுகளிலும் இருந்தன. 15 மற்றும் 44 வயதுகளுக்கு இடையிலான 1,000 பெண்களில் இது சுமார் 133 கர்ப்பங்கள் ஆகும். [10] அடையாளம் காணப்பட்ட கர்ப்பங்களில் சுமார் 10% முதல் 15% கருச்சிதைவில் முடிந்தன.[6] 1990 -இல் ஏற்பட்ட 377,000 மரணங்களில் இருந்து குறைந்து 2013 -இல் கர்ப்பம் தொடர்பான சிக்கல்கள் 293,000 மரணங்களை விளைவித்தன. பொதுவான காரணங்களில் பெண்களுக்குக் கர்ப்பமாக இருக்கும் காலத்தில் இரத்தக்கசிவு, கருக்கலைப்பு தொடர்பான சிக்கல்கள், கர்ப்பம் தொடர்பான உயர் இரத்த அழுத்தம், பெண்களுக்குக் கர்ப்பமாக இருக்கும் காலத்தில் சீழ்ப்பிடித்தல் மற்றும் கருவும், நஞ்சுக்கொடியும் கருப்பையை விட்டு நீங்குகிற செயல்முறை தடுக்கப்படுவது ஆகியவை அடங்கும்.[11] உலகம் முழுவதும் கர்ப்பங்களில் 40% திட்டமிடப்படாத கர்ப்பம் ஆகும். திட்டமிடப்படாத கர்ப்பங்களில் பாதி கருக்கலைப்பு செய்யப்படுவது ஆகும்.[10] யுனைடட் ஸ்டேட்ஸில் உத்தேசிக்கப்படாத கர்ப்பங்களில் கர்ப்பம் நிகழ்ந்த மாதத்தின்போது பெண்களில் 60% பேர் ஓரளவுக்குப் பிறப்புக் கட்டுப்பாட்டைப் பயன்படுத்தினர்.[12]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 "Pregnancy: Condition Information". www.nichd.nih.gov/. 2013-12-19. Retrieved 14 March 2015.
- ↑ Wylie, Linda (2005). Essential anatomy and physiology in maternity care (Second Edition ed.). Edinburgh: Churchill Livingstone. p. 172. ISBN 9780443100413.
{{cite book}}:|edition=has extra text (help) - ↑ 3.0 3.1 Abman, Steven H. (2011). Fetal and neonatal physiology (4th ed. ed.). Philadelphia: Elsevier/Saunders. pp. 46–47. ISBN 9781416034797.
{{cite book}}:|edition=has extra text (help) - ↑ "What are some common signs of pregnancy?". www.nichd.nih.gov/. 2013-12-07. Retrieved 14 March 2015.
- ↑ "How do I know if I'm pregnant?". www.nichd.nih.gov/. 2012-11-30. Retrieved 14 March 2015.
- ↑ 6.0 6.1 The Johns Hopkins Manual of Gynecology and Obstetrics (4 ed.). Lippincott Williams & Wilkins. 2012. p. 438. ISBN 9781451148015.
- ↑ 7.0 7.1 "What is prenatal care and why is it important?". www.nichd.nih.gov/. 2013-12-07. Retrieved 14 March 2015.
- ↑ "What are some common complications of pregnancy?". www.nichd.nih.gov/. 2013-12-07. Retrieved 14 March 2015.
- ↑ World Health Organization (November 2014). "Preterm birth Fact sheet N°363". who.int. Retrieved 6 Mar 2015.
- ↑ 10.0 10.1 Sedgh, G; Singh, S; Hussain, R (September 2014). "Intended and unintended pregnancies worldwide in 2012 and recent trends.". Studies in family planning 45 (3): 301-14. பப்மெட்:25207494.
- ↑ GBD 2013 Mortality and Causes of Death, Collaborators (17 December 2014). "Global, regional, and national age-sex specific all-cause and cause-specific mortality for 240 causes of death, 1990-2013: a systematic analysis for the Global Burden of Disease Study 2013.". Lancet. doi:10.1016/S0140-6736(14)61682-2. பப்மெட்:25530442.
- ↑ The Johns Hopkins manual of gynecology and obstetrics (4th ed.). Philadelphia: Wolters Kluwer Health / Lippincott Williams & Wilkins. p. 382. ISBN 9781605474335.
{{cite book}}: Unknown parameter|authors=ignored (help)