விக்கிப்பீடியா:விக்கி மின்மினிகள்/பயிற்சி/நாள் 3

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முந்தைய பயிற்சியில், தமிழ் விக்கிப்பீடியா பயனர்களோடு உரையாடுவது குறித்தும் பக்க வரலாறுகளைக் குறித்தும் அறிந்து கொண்டீர்கள்.

இந்தப் பயிற்சியில், விக்கிப்பீடியாவின் மணல் தொட்டி பற்றி பார்ப்போம்.

சிறு வயதில் மணலில் எழுதிப் பழகியுள்ளீர்களா? அது தான் இந்த மணல் தொட்டி. மணல் தொட்டி என்பது ஒரு பயிற்சிப் பக்கம். இங்கு நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். விக்கிப்பீடியா வெடித்துச் சிதறாது :)

உங்கள் மணல் பெட்டிக்குச் செல்ல இங்கு அழுத்துங்கள்.

இந்தப் பக்கத்தைப் பயன்படுத்தி விக்கிப்பீடியாவில் எழுதுவதற்கு உள்ள கருவிகள், குறியீடுகளைப் பயிலலாம்.

தொகுத்தல் பெட்டியில் உள்ள கருவிகளைப் பயன்படுத்தி பின்வருவனவற்றை முயன்று பாருங்களேன்..

  • ஒரு சில எழுத்துகளைத் தடித்த எழுத்துகளாக மாற்றுவது.
  • ஒரு விக்கிப்பீடியா பக்கத்துக்கு இணைப்பு தருவது.
  • ஒரு படிமத்தைக் காட்டுவது
  • ஒன்றின் கீழ் ஒன்றாக கருத்துகளை அடுக்கி எழுதி நட்சத்திரக் குறியிடுவது.

இந்த அனைத்துப் பயிற்சிகளுக்குமான விடை இந்தப் பக்கத்திலேயே இருக்கிறது :) எப்படி என்று அறிய இப்பக்கத்தின் மேலே உள்ள "தொகு" என்ற இணைப்பை அழுத்தி எப்படி எழுதியுள்ளோம் என்று பாருங்கள்.

விக்கிப்பீடியாவில் எப்படி எழுதுவது என்று விரிவாக அறிய விக்கிப்பீடியா:தொகுத்தல் பாருங்கள்.

இப்பயிற்சியில் பங்கு பெற்று வருகிறீர்களா?

உங்கள் பெயரை விக்கிப்பீடியா:விக்கி மின்மினிகள்/பயில்வோர் என்ற பக்கத்தில் பதியுங்கள். மற்ற பயனர்கள் உங்களைக் கவனித்துத் தேவையான உதவிகளைச் செய்வார்கள்.