விக்கிப்பீடியா:விக்கி மின்மினிகள்/பயிற்சி/நாள் 2

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நேற்றைய விக்கி மின்மினிகள் பயிற்சியில் விக்கிப்பீடியாவைச் சுற்றிப் பார்த்தீர்கள்.

இன்று, இந்த விக்கிப்பீடியாவை யார் எழுதுகிறார்கள் என்று பார்ப்போமா?

  • தமிழ் விக்கிப்பீடியாவின் சில பங்களிப்பாளர்களை இங்கு பார்க்கலாம்.
  • உங்கள் ஊர்க்காரர்கள் யாராவது பங்களிக்கிறார்களா?அவர்களின் பங்களிப்புக்கு நன்றி தெரிவித்து ஒரு செய்தி இடலாமே?

எடுத்துக்காட்டுக்கு, மலேசியாவைச் சேர்ந்த முத்துக்கிருசுணனின் பயனர் பக்கத்தைப் பாருங்கள். அங்கு மேற்பகுதியில் "உரையாடல்" என்று ஒரு இணைப்பு இருக்கும். அதனை அழுத்துங்கள். பிறகு வரும் உரையாடல் பக்கத்தில் "தலைப்பைச் சேர்" என்ற இணைப்பை அழுத்துங்கள். பிறகு, உங்கள் செய்தியை இட்டுச் சேமியுங்கள்.

(படத்தை முழு அளவில் காண அதன் மேல் சொடுக்குங்கள்)

  • தமிழ் விக்கிப்பீடியாவின் வலது மூலையில் ஒரு தேடல் பெட்டி உள்ளது. அதில் உங்களுக்கு விருப்பமான ஒரு தலைப்பில் தேடி ஒரு கட்டுரையைக் காணுங்கள் (தமிழில் தேடுங்கள். தமிழ்த் தட்டச்சு வசதி அப்பெட்டியிலேயே உள்ளது).
  • இப்போது இக்கட்டுரையின் மேற்பகுதியில் "வரலாற்றைக் காட்டவும்" என்று ஒரு இணைப்பு இருக்கும். அதனைச் சொடுக்கினால், கட்டுரையை யார் தொடங்கினார், யார் யார் எப்போது என்னென்ன பங்களித்திருக்கிறார்கள் என்று அறியலாம். உங்களுக்குப் பிடித்த பங்களிப்புகளைச் செய்தவர்களுக்கு நன்றி கூறலாமே? முகநூலில் விருப்பம் இடுவது போல் இது விக்கிப்பீடியர்களுக்கு உற்சாகமூட்டுவதாக இருக்கும்.

  • உங்களுக்குத் தேவையான கட்டுரைகளில் நடக்கும் மாற்றங்களைத் தொடர்ந்து கண்காணிக்க விரும்புகிறீர்களா? ஒவ்வொரு பக்கத்தின் மேலேயும் ஒரு நட்சத்திரக் குறி இருக்கும். அதனை அழுத்தினால் அக்கட்டுரை உங்கள் விருப்பப் பட்டியலில் சேர்ந்து விடும்.
  • இப்படி, ஒவ்வொரு நாளும் யார் யார் என்ன எழுதுகிறார்கள் என்று அறிய அண்மைய மாற்றங்கள் பக்கத்தைக் காணுங்கள்.

சரி, இன்று இவ்வளவு போதும். நாளை முதல் நேரடிப் பங்களிப்புகளைக் காண்போம்.

--

இப்பயிற்சியில் பங்கு பெற்று வருகிறீர்களா?

உங்கள் பெயரை விக்கிப்பீடியா:விக்கி மின்மினிகள்/பயில்வோர் என்ற பக்கத்தில் பதியுங்கள். மற்ற பயனர்கள் உங்களைக் கவனித்துத் தேவையான உதவிகளைச் செய்வார்கள்.