விக்கிப்பீடியா:விக்கித்திட்டம் தாவரங்கள்/பெயரிடல் வழிமுறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தாவரவியல் சொற்கள் பன்னாட்டு மொழியில் இருப்பதாலும், உலகின் தாவரப் பயன்பாடுகள் வேறுபடுவதாலும், தமிழ் மொழியில் அச்சொற்கள் அனைத்தும் இல்லை. பிற மொழியில் இருக்கும் சொற்களின், பிறப்பிடங்களை ஒட்டியும், அதன் மூலப் பொருளுக்கு ஏற்படவும் புதிய பெயர்களை ஏற்படுத்த பின்வரும் கட்டுரைகள் உங்களுக்கு உதவலாம். மேலும், இப்பக்கத்தில் தொடர்புடைய கணிய நுட்பங்களும் ஒருங்கிணைக்கப் படுகின்றன.

வழிமுறைகள்[தொகு]

ஒரு தாவர இனத்தின் பிறப்பிடம்/தாயகம் ஒரே ஒரு நாடு என்றாலோ, மூலப்பெயரின் பொருள் தெரிந்தாலோ, தமிழ் பெயர் இல்லா சூழ்நிலையில், தமிழ் பெயரினை வைக்கலாம். எ-கா: Jasminum amabile என்பதன் பேரினம் மல்லி ஆகும். amabile என்ற இலத்தீனிய சொல்லுக்கு அழகு என்பது பொருளாகும். இதன் தாயகம் நேபாளம் என்பதால் நேபாள அழகு மல்லி என தமிழ்பெயரை முதலில் உருவாக்கலாம். ஆனால், பிறருக்கு அதனை அறிவித்து, பிறரின் எண்ணமறிந்து, விக்கிமீடிய வழிமுறைகள் படி, கட்டுரைக்கு பெயர் வைத்தல் வேண்டும்.

நுட்பங்கள்[தொகு]

  • தாவரவியல் பெயர்களை தமிழில் மாற்ற இந்த நுட்பத்தினை பயன்படுத்துதல். எ-கா: Jasminum amabileஜாஸ்மினும் அமாபைல் (இதில் கிரந்தம் தவிர்க்க மூல ஒலிமாற்று நிரலை மாற்றுதல்) ↔ யாசுமினம் அமாபைல் என்றும் மாற்றிய பிறகு, மேலுள்ள வழிமுறைகள் படி, தமிழ் பெயரும் வைக்கலாம்.
  • https://tamilpesu.us/en/translite/
  • https://itranslate.com/translate/latin-to-tamil

அடிக்குறிப்புகள்[தொகு]