விக்கிப்பீடியா:மேம்பாடு/2022

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாட்டிற்காக 2022 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட முன்னெடுப்புகள் இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

  • விக்கி மாரத்தான் நிகழ்வு 5 ஆண்டுகளுக்குப் பிறகு நடத்தப்பட்டது. மேம்பாட்டுப் பணிகளுக்கு முக்கியத்துவம் தரப்பட்டது.
  • சிறப்பு மாதம் எனும் திட்டம் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டு, தொடர்ச்சியாக 3 மாதங்கள் நடத்தப்பட்டது.
  • ஒட்டுமொத்தமாக, தமிழக ஆசிரியர்கள் எழுதியிருந்த கட்டுரைகளைச் செம்மைப்படுத்தும் பணிகள் நடந்தன.

1. தமிழக ஆசிரியர்கள் எழுதிய கட்டுரைகளைச் செம்மைப்படுத்துதல்[தொகு]

விக்கிப்பீடியா:தமிழக ஆசிரியர்கள் விக்கிப்பீடியா பங்களிப்புத் திட்டம்/துப்புரவு/2022

பெற்ற பலன்கள்[தொகு]

  • மாவட்டவாரியான வகைப்பிரித்தல் ஏற்கனவே செய்யப்பட்டிருந்தது. ஒவ்வொரு மாவட்டமாக எடுக்கப்பட்டு, கலைக்களஞ்சியத்திற்குப் பொருந்தாத கட்டுரைகள் பல நீக்கப்பட்டன. அதே வேளையில், தேவைப்படும் கட்டுரைகளைச் செம்மைப்படுத்தும் பணியும் நடந்தது.
  • 2,039 கட்டுரைகள் கையாளப்பட்டு, 889 கட்டுரைகள் துப்புரவு முடிந்தவையாக அறிவி்க்கப்பட்டன. 1,150 கட்டுரைகள் ஏற்கனவே இருக்கும் கட்டுரைகளுடன் ஒருங்கிணைக்கப்பட்டிருக்கலாம். அல்லது நீக்கப்பட்டிருக்கலாம்.

2. விக்கி மாரத்தான் 2022[தொகு]

விக்கிப்பீடியா:விக்கி மாரத்தான் 2022

பெற்ற பலன்கள்[தொகு]

  1. சொந்தக் காரணங்களால் தொடர் பங்களிப்பை செய்ய இயலாத பயனர்கள், மாரத்தானில் கலந்துகொண்டு பங்களித்தனர்.
  2. கேட்டுக்கொண்டபடி - செம்மைப்படுத்துதல், சீரமைத்தல், மேம்படுத்துதல், துப்புரவு ஆகியன சார்ந்து பெரும்பாலான தொகுப்புகள் அமைந்தன.

புள்ளிவிவரம்[தொகு]

  • 24 மணி நேரத்தில் செய்யப்பட்ட மொத்தத் தொகுப்புகளின் எண்ணிக்கை: 2,060
  • 24 மணி நேரத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட கட்டுரைகளின் எண்ணிக்கை: 24
  • கவனக் குவியம் கொள்ளப்பட்ட பணிகள் குறித்தான விவரங்கள் அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளன:-
எண் வகை குறிப்புகள்
1 செம்மைப்படுத்தப்பட வேண்டிய கூகுள் தமிழாக்கக் கட்டுரைகள் 6 கட்டுரைகள் செம்மைப்படுத்தப்பட்டன.
2 சரிபார்க்க வேண்டிய தமிழக ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள் 123 கட்டுரைகள் சரிபார்க்கப்பட்டன.
3 மேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள் 177 கட்டுரைகள் கையாளப்பட்டன.
4 பகுப்பு இல்லாத கட்டுரைகள் 127 கட்டுரைகள் கையாளப்பட்டன.
5 விக்கியாக்கம் செய்யப்பட வேண்டிய கட்டுரைகள் 6 கட்டுரைகள் கையாளப்பட்டன.
6 ஒன்றிணைக்கப்பட வேண்டிய கட்டுரைகள் 15 கட்டுரைகள் அதிகரித்தன. துப்புரவுப் பணியால் இது நடந்திருக்கலாம்.
7 சரி பார்க்க வேண்டிய தானியக்கக் கோயில் கட்டுரைகள் 14 கட்டுரைகள் சரிபார்க்கப்பட்டன.
8 குறுங்கட்டுரைகள் 2 கட்டுரைகள் அதிகரிப்பு. துப்புரவுப் பணியால் இது நடந்திருக்கலாம்.

(மூலம்: விக்கிப்பீடியா:விக்கி மாரத்தான் 2022/புள்ளிவிவரம்)

3. செம்மைப்படுத்துதல் பணிக்கான சிறப்பு மாதம் - அக்டோபர் 2022[தொகு]

விக்கிப்பீடியா:செம்மைப்படுத்துதல் பணிக்கான சிறப்பு மாதம் - அக்டோபர் 2022

பெற்ற பலன்கள்[தொகு]

  • 8 பயனர்கள் பங்களித்து, மொத்தமாக 50 கட்டுரைகளைச் செம்மைப்படுத்தினர்.

4. ஒழுங்கமைத்தல் பணிக்கான சிறப்பு மாதம் - நவம்பர் 2022[தொகு]

விக்கிப்பீடியா:ஒழுங்கமைத்தல் பணிக்கான சிறப்பு மாதம் - நவம்பர் 2022

பெற்ற பலன்கள்[தொகு]

  1. பகுப்பு:பகுப்பில்லாதவை எனும் பகுப்பில் அடங்கும் கட்டுரைகளின் எண்ணிக்கையானது 'சுழியம்' என்பதாக ஆக்கப்பட்டது.
  2. பெரிய பகுப்புகள் சிலவற்றில் ஒழுங்கமைத்தல் பணி ஓரளவு நடந்தது.
  3. 2013இல் விக்கித்தரவில் இணைக்கப்படாத பல பக்கங்களுக்கு புதிய விக்கித்தரவு பக்கம் உருவாக்கப்பட்டது. அதனால் பல பகுப்புகள் வேறு மொழிகளில் இருந்தாலும் அவைகளுடன் தமிழ் விக்கிப்பகுப்புகள் இணைக்கப்படவில்லை. இந்த மாதத்தில் அப்படிப்பட்ட பகுப்புகள் கிட்டதட்ட 300 பகுப்புகள் விக்கித்தரவில் ஒன்றிணைக்கப்பட்டுள்ளது. இதனால் மொழி மாற்றம் செய்யும் பொழுது பகுப்புகளைக் காண்பது எளிதானது. மற்றும் நகல் பகுப்புகளை கண்டுபிடிப்பது எளிது.
  4. 20 இணைக்கப்படவேண்டிய பகுப்புகள் கண்டுபிடிக்கப்பட்டு {{merge}} என்னும் பகுப்பு இடப்பட்டது. அதனை இங்கு பார்க்கலாம்.
  5. எழுத்துப்பிழையுள்ள பகுப்புகள், தேவையில்லாத பகுப்புகள் நீக்கப்பட்டன.

5. செம்மைப்படுத்துதல் பணிக்கான சிறப்பு மாதம் - டிசம்பர் 2022[தொகு]

விக்கிப்பீடியா:செம்மைப்படுத்துதல் பணிக்கான சிறப்பு மாதம் - டிசம்பர் 2022

பெற்ற பலன்கள்[தொகு]

134 கட்டுரைகள் கையாளப்பட்டு, 77 கட்டுரைகள் துப்புரவு முடிந்தவையாக அறிவி்க்கப்பட்டன. 57 கட்டுரைகள் ஏற்கனவே இருக்கும் கட்டுரைகளுடன் ஒருங்கிணைக்கப்பட்டிருக்கலாம். அல்லது நீக்கப்பட்டிருக்கலாம்.

தொடர்ச்சி[தொகு]

விக்கிப்பீடியா:மேம்பாடு/2023