விக்கிப்பீடியா:செம்மைப்படுத்துதல் பணிக்கான சிறப்பு மாதம் - டிசம்பர் 2022

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிறப்பு மாதம் வரிசையில், டிசம்பர் மாதமானது செம்மைப்படுத்துதல் பணிக்கென அறிவிக்கப்பட்டது.

தமிழக ஆசிரியர்கள் எழுதியக் கட்டுரைகளைச் செம்மைப்படுத்துதல்

நோக்கம்[தொகு]

2017 ஆம் ஆண்டில் தமிழகத்துப் பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டு, அதன் வாயிலாக சுமார் 10,000 கட்டுரைகள் உருவாக்கப்பட்டன. அக்கட்டுரைகளை செம்மைப்படுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்தப் பணியின் மீது கவனக்குவியம் செலுத்தி, சிறப்பு மாதம் முழுவதும் துப்புரவு, மேம்படுத்துதல் ஆகிய பணிகளைச் செய்தலே நோக்கமாகும்.

நாட்கள்[தொகு]

டிசம்பர் 1, 2022 முதல் டிசம்பர் 31, 2022 வரை

செய்யவேண்டிய பணியாக கருதப்பட்டவை[தொகு]

  1. கலைக்களஞ்சியம் அல்லாத கட்டுரைகள், தானியங்கித் தமிழாக்கக் கட்டுரைகள் ஆகியவற்றை நீக்க வேண்டும்.
  2. மேற்கோள்கள் சேர்த்தல், விக்கியாக்கம், வடிவமைப்பு முன்னேற்றங்கள், எழுத்துப் பிழை திருத்தம், சொற்றொடர்த் திருத்தங்கள் ஆகிய மேம்பாட்டுப் பணிகள்.
  3. செம்மைப்படுத்தப்பட்டும் துப்புரவு முடிந்ததாக அறிவிக்கப்படாத கட்டுரைகள் இன்னமும் இருக்கின்றன. அவற்றை துப்புரவு முடிந்ததாக அறிவிக்க வேண்டும்.
  4. ஏற்கனவே இருக்கும் கட்டுரையைச் சிதைத்து, பகுப்பைச் சேர்த்துள்ளதையும் அறிய முடிகிறது. எடுத்துக்காட்டு: மதுராந்தகம். இதனையும் கவனத்திற்கொள்ள வேண்டும்.

வழிகாட்டல்கள் / நெறிமுறைகள்[தொகு]

  1. கட்டுரைகளை ஒருங்கிணைக்க வார்ப்புரு இட்டுவிட்டால், துப்புரவு முடிந்ததாகக் கருதவும்.
  2. துப்புரவு முடிந்துவிட்டதாகக் கருதினால், துப்புரவு முடிந்த ---- மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள் எனும் பகுப்பினை இட வேண்டும். தரவுகளைக் கொண்டிருப்பதற்காக இந்த வேண்டுகோள்.

பார்வைக்கு[தொகு]

பங்குபெற ஆர்வமுள்ள பயனர்கள்[தொகு]

  1. பாலசுப்ரமணியன்
  2. --சத்திரத்தான் (பேச்சு) 02:03, 1 திசம்பர் 2022 (UTC)[பதிலளி]
  3. ஸ்ரீதர். ஞா (✉) 04:36, 2y6 திசம்பர் 2022 (UTC)
  4. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:32, 30 திசம்பர் 2022 (UTC)[பதிலளி]

ஒருங்கிணைப்பாளர்கள்[தொகு]

பெற்ற பலன்கள்[தொகு]

  • 134 கட்டுரைகள் கையாளப்பட்டு, 77 கட்டுரைகள் துப்புரவு முடிந்தவையாக அறிவி்க்கப்பட்டன. 57 கட்டுரைகள் ஒருங்கிணைக்கப்பட்டிருக்கலாம்; அல்லது நீக்கப்பட்டிருக்கலாம்.