விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/அக்டோபர் 4, 2015

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தோனேசிய மொழி இந்தோனேசியாவின் உத்தியோகபூர்வ மொழி. பல நூற்றாண்டுகளாக இந்தோனேசியத் தீவுகளுக்கிடையே இடைத் தரகர் மொழியாகச் செயற்பட்டு வந்த இந்தோனேசியாவின் ரியாவு மாநிலத்தின் பேச்சு வழக்கினை ஒத்ததாகும். இந்தோனேசியா, கிழக்கு திமோர் போன்ற நாடுகளில் பேசப்படுகிறது. மலாய் மொழியை ஒத்தது. 1945 இல் இந்தோனேசியா சுதந்திரம் பெற்றபோது வரையறுக்கப்பட்டுத் தனிமொழியானது. கிட்டத்தட்ட 100% இந்தோனேசியர்களால் சரளமாகப் பேசப்படக்கூடிய இம்மொழி, உலகில் அதிகளவு மக்களால் பேசப்படும் மொழிகளுள் ஒன்றாக விளங்குகிறது. மேலும்...


இன்விக்டஸ் என்பது வில்லியம் எர்னஸ்ட் ஹென்லே (1849–1903) எனும் ஆங்கிலக் கவிஞரால் வடிக்கப்பட்ட ஓர் விக்டோரிய கால ஆங்கிலக் குறுங்கவிதை. இது 1875 இல் எழுதப்பட்டு, 1888 இல் வெளிவந்த அவரது முதல் கவிதைத் தொகுப்பான புக் ஆஃப் வெர்ஸஸின் லைஃப் அன்ட் டெத் (எக்கோஸ்) என்ற பகுதியில் முதன்முதலில், தலைப்பு எதுவுமின்றி பதிக்கப் பெற்றது. ஆரம்பப் பதிப்புகளில், ஸ்காட்லாந்தைச் சேர்ந்த மாவு மற்றும் உரொட்டி வியாபாரியும், இலக்கியப் புரவலருமான, ராபெர்ட் தாமஸ் ஹாமில்டன் புரூஸ் (1846–1899) என்பவருக்கு அர்ப்பணமாக "To R. T. H. B" எனும் குறிப்பு இடம் பெறுகிறது. மேலும்...