விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/சூலை 15, 2020
- நாட்டு நாய் (படம்) என்பது இந்திய துணைக் கண்டத்தில் இயற்கையாக காணப்படும் நாய் இனமாகும். இதன் பாரம்பரியம் 4,500 ஆண்டுகளுக்கு முன் செல்கிறது.
- பாபிரசு பண்டைய எகிப்தில், கிமு நான்காம் ஆயிரமாண்டில், நைல் ஆற்றின் கழிமுகத்தில் சதுப்பு நிலத்தில் விளையும் பாபிரஸ் எனும் நாணல் போன்ற செடிகளின் தண்டுகளைப் பிழிந்தெடுத்த வெள்ளைப் பசை போன்ற கூழிலிருந்து தயாரிக்கப்படும் தடித்த காகிதம் போன்ற எழுதுபொருளாகும்.
- உயிர்ப்பாலம் என்பது மேகாலயாவின் தென் பகுதியில் உயிருள்ள மரங்களின் விழுதுகளைக் கொண்டு படிப்படியாக இயற்கையான முறையில் அமைக்கப்படும் பாலங்களாகும்.