விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/ஆகத்து 5, 2018

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நீல் ஆம்ஸ்ட்றோங் (1930–2012) நிலாவில் நடந்த முதலாவது மனிதர் என்ற சாதனையுடனும், எட்வின் ஆல்ட்ரினுடன் இரண்டரை மணி நேரம் விண்கலத்திற்கு வெளியே இருந்த சாதனையுடனும் அப்பல்லோ 11 விண்கலத்தில் இருந்த போது எடுக்கப்பட்ட படம். அமெரிக்க விண்ணோடியான ஆம்ஸ்ட்ரோங் அமெரிக்க வான்படையிலும், மனித விண்வெளிப்பறப்பு திட்டங்களிலும் பணியாற்றியவர். நாசாவில் 1962 இல் இணைந்தார். 1966 இல் ஜெமினி 8 விண்கலத்தில் புவியின் சுற்றுவட்டத் திட்டத்தில் பங்கேற்றார். 1969 சூலையில், அப்பல்லோ 11 இவரது இரண்டாவதும், கடைசியுமான விண்வெளிப் பறப்பாகும்.

படம்: எட்வின் ஆல்ட்ரின்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்