விக்கல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

விக்கல் (hiccup அல்லது hiccough) ஓர் அனிச்சை செயல் ஆகும். இது ஒரு நிமிடத்தில் உதரவிதானம் பலமுறை சுருங்குவதால் உண்டாகிறது. மனிதர்களில் திடீரென நுரையீரலுக்குள் காற்று புகும் போது எபிகிளாட்டிஸ் மூடிக் கொள்வதால் “ஹக்“ என்ற சத்தம் உண்டாகிறது.

காரணங்கள்[தொகு]

பெரும்பாலும் மைய மற்றும் புற நரம்பு மண்டலக் கோளாறுகளால் உண்டாகிறது. கார்பானிக் அமிலம் (H2CO3)ஏற்றப்பட்ட பானங்களை அருந்துதல், சாராயம் குடித்தல், காரமான உணவு வகைகள் போன்றவற்றாலும் ஏற்படுகிறது. கட்டுங்கடங்காத விக்கல் உதரவிதானத்தின் நரம்பான ஃப்ரீனிக் நரம்பு உறுத்தப்படும் நிலைகளில் உண்டாகிறது.

பரிணாம மரபு வழிக் கருதுகோள்[தொகு]

கனடாவில் உள்ள கல்காரி பல்கலைக்கழக சுவாச ஆராய்ச்சிக் குழுவைச் (respiratory research group) சேர்ந்த கிறிஸ்டியன் ஸ்டிராஸ் (Christian Straus) மற்றும் அவரின் குழுவினரின் விக்கல் குறித்து புதிய பரிணாம மரபு வழிக் கருதுகோள் (phylogenetic theory) ஒன்றை முன்வைத்துள்ளனர்.[1] இதன்படி விக்கல் என்பது இருவாழ்விகளின் மூச்சு விடும் முறையின் எச்சம் ஆகும். தவளை போன்ற இருவாழ்விகள் விக்கலை ஒத்த முறையில் தான் நீரை விழுங்குகின்றன. இந்தக் கருதுகோளுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக கீழ்கண்ட கண்டறிவுகள் உள்ளன.

1. மனிதக் கரு வளர்ச்சியின் போது விக்கலுக்கான நரம்புப் பாதைகள் நுரையீரல் சுவாசத்திற்கான நரம்புப் பாதைகள் உருவாதலுக்கு முன்னமே உருவாகி விடுகின்றன.

2. இருவாழ்களின் நீர் விழுங்கலும் விக்கலும் பாக்ளோஃபென் மருந்தால் தடை செய்யப்படுகின்றன.

3. குறைப்பிரசவக் குழந்தைகள் தங்களின் 2.5 விழுக்காட்டு நேரத்தை விக்கலெடுப்பதிலேயே செலவழிக்கின்றன. ஏனெனில் அவர்களின் நுரையீரலும் நரம்பு மண்டலமும் சரிவர வளர்ச்சியடையாததால் இருவாழ்விச் சுவாச முறையைப் பின்பற்றுகின்றன.

குறிப்புகள்[தொகு]

  1. Straus, C.; Vasilakos, K; Wilson, RJ; Oshima, T; Zelter, M; Derenne, JP; Similowski, T; Whitelaw, WA (February 2003). "A phylogenetic hypothesis for the origin of hiccough". BioEssays 25 (2): 182–188. doi:10.1002/bies.10224. 10.1002/bies.10224. பப்மெட் 12539245. http://www3.interscience.wiley.com/cgi-bin/abstract/102526391/ABSTRACT?CRETRY=1&SRETRY=0=Abstract. பார்த்த நாள்: 2007-07-20. 

1. Changes of room temperature from hot to cold or cold to hot 2. Changes for stomach temperature.(Due to high carbon food- H2CO3)

"https://ta.wikipedia.org/w/index.php?title=விக்கல்&oldid=2474375" இருந்து மீள்விக்கப்பட்டது