விகாஸ் பால்
Appearance
விகாஸ் பால் | |
---|---|
2017 ல் பால் | |
பிறப்பு | 1971 (அகவை 52–53) புது தில்லி, இந்தியா |
பணி |
|
செயற்பாட்டுக் காலம் | 2005–தற்காலம் |
வாழ்க்கைத் துணை | ரீச்சா தூபே (மணமுறிவு) |
விகாஸ் பால் (Vikas Bahl) என்பவர் இந்திய திரைப்படக் கதாசிரியரும், எழுத்தாளரும், இயக்குநரும், தயாரிப்பாளரும் ஆவார். அவர் 1971 ம் ஆண்டு புது தில்லியில் பிறந்தார். அவர் பெரும்பாலும் இந்தியில் படங்களை இயக்கி இருக்கின்றார். குவீன், சூப்பர் 30 உள்ளிட்ட பல படங்களை உருவாக்கி இருக்கின்றார்.[1]
பள்ளிப்பருவம்
[தொகு]அவர் தில்லியில் உள்ள லஜ்பத் நகரில் தன்னுடைய தொடக்கக் கல்வியை மேற்கொண்டார். அவருடைய தந்தை இந்தியன் எண்ணெய் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அவருடைய பள்ளிக் கல்வியை சர்தார் பட்டேல் வித்யாலயாவில் தொடர்ந்தார். அவர் தில்லியில் உள்ள ராம்ஜாஸ் கல்லூரியில் பயின்று பட்டம் பெற்றார். பிறகு மேலாண்மை முதுகலைப் பட்டம் பெற மும்பாய் சென்றார். யுடிவியில் கடைநிலை படப்பிடிப்புத்தள ஊழியராகத் தன் தொழில்முறை வாழ்வைத் தொடங்கினார்.
விருதுகள்
[தொகு]- அவர் மூன்று நேஷனல் ஃபில்ம் விருதுகளைப் பெற்றுள்ளார்.
- 2014 ஆம் ஆண்டுக்கான சிறந்த இயக்குனருக்கான ஃபில்ம் ஃபேர் வெகுமதியை குவீன் திரைப்படத்துக்காகப் பெற்றுள்ளார்.