உள்ளடக்கத்துக்குச் செல்

குவீன் (2014 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குவீன் (தமிழாக்கம்: அரசி) என்பது மார்ச்சு 7, 2014 அன்று வெளியான இந்தி மொழித் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தை விக்காசு பால் இயக்க, கங்கனா இரனாத்து தலைமை பாத்திரத்தில் நடித்திருந்தார்.[1]

குவீன்
இயக்கம்விக்காசு பால்
தயாரிப்புவையகாம் 18 மோசன் பிக்ச்சர்சு
பேந்தம் பிக்ச்சர்சு
கதைஅன்வித்தா தட் குப்தன்
திரைக்கதைவிக்காசு பால்
சைத்தலி பர்மர்
பர்வீசு சேக்
இசைஅமித்து திரிவேதி
நடிப்புகங்கனா இரனாத்து
இராச்சுகுமார் இராவு
அலீசா எய்டண்
ஒளிப்பதிவுபாபி சிங்கு
படத்தொகுப்புஅபிச்சித்து கொக்கத்தே
அனுராகு காசியப்பு
விநியோகம்வையகாம் 18 மோசன் பிக்ச்சர்சு
வெளியீடு7 மார்ச்சு 2014
ஓட்டம்146 நிமிடங்கள் [2]
நாடுஇந்தியா
மொழிஇந்தி
ஆக்கச்செலவு12 கோடி[3]
மொத்த வருவாய்222 கோடி

கதை

[தொகு]

இராணி மெகரா என்கிற பெண்ணுக்கு நடக்கவிருந்த திருமணம் மாப்பிள்ளையால் கடைசி நேரத்தில் நிறுத்தப்படுகிறது. திருமணம் முடிந்த கையோடு தேனிலவுக்கு பாரிசு செல்லலாம் என்று கனவு கண்டு பயணச்சீட்டெல்லாம் வாங்கி வைத்திருந்த நிலையில், இராணி தனியாகவே பாரிசு செல்ல முடிவெடுத்து, பயணம் என்னும் பாதையில் தன்னைத் தானே தேடிக் கொள்வது கதை.

நடிப்பு

[தொகு]
இராணி மெகரா
என்னும் பாத்திரத்தில் நடித்தவர் கங்கனா இரனாத்து
விச்சயலட்சுமி
என்னும் பாத்திரத்தில் நடித்தவர் அலீசா எய்டண்
விச்சய்
என்னும் பாத்திரத்தில் நடித்தவர் இராச்சுகுமார் இராவு
ஒலெக்சாண்டர்
என்னும் பாத்திரத்தில் நடித்தவர் மிசு பொய்க்கோ
தாக்கா
என்னும் பாத்திரத்தில் நடித்தவர்

செப்புரி ஓ

திம்
என்னும் பாத்திரத்தில் நடித்தவர் யோசேப்பு கித்தோபு

தயாரிப்பு

[தொகு]

இத்திரைப்படத்தை விக்காசு பால் இயக்க, வையகாம் 18 மற்றும் பேந்தம் பிக்ச்சர்சு இணைந்து தயாரித்திருந்தனர். இராணி மெகரா பாத்திரத்தில் நடிக்க முதலில் கரீனா கப்பூரும் பிரியங்கா சோப்ராவும் அணுகப்பட்டனர். இருவரும் மறுத்து விடவே கங்கனாவுக்கு வாய்ப்பு கிடைத்தது.[4][5][6]

இத்திரைப்படத்தில் நடித்திருந்த இதர சில வெளிநாட்டவரை இலண்டனில் நேர்முகத்தேர்வு நடத்தி தேர்ந்தெடுத்தனர். 2012 இல் துவங்கி 45 நாட்களில் படப்பிடிப்பு முடிந்தது. இலண்டன், ஆம்சுடர்டாம் மற்றும் தில்லியில் படம்பிடித்தனர்.[7]

90 விழுக்காடு படப்பிடிப்பு முடிந்த நிலையில், ஒளிப்பதிவாளர் பாபி சிங்கு ஆசுத்துமா தாக்கத்தால் 25 திசம்பர் 2012 அன்று காலமானார். மீதப் பணிகளை அனுராகு காசியப்பு முடித்தார்.[8]

சர்ச்சை

[தொகு]

2018 அக்டோபரில் பேந்தம் பிக்ச்சர்சின் முன்னாள் ஊழியர் ஒருவர் விக்காசு பால் தன்னிடம் முறை தவறி நடந்து கொண்டதாக குற்றஞ் சாட்டினார். இதனை கங்கனாவும் படத்தில் அவர் தோழியாக நடித்த நயனி என்கிற நடிகையும் வழிமொழிந்தனர். விளைவாக, விக்காசு பாலை தங்கள் தயாரிப்பு குழுவில் இருந்து நீக்கிய நிறுவனங்கள், அவர் மீது வழக்கு தொடுத்தன.[9][10]

விமர்சனம்

[தொகு]

குவீன் திரைப்படம்தான் மிகுதியான நேர்மறை விமர்சனங்களையும் இரசிகர்களின் அன்பையும் ஒரு சேரப் பெற்று இருநூறு கோடிக்கு மேல் வருவாய் ஈட்டியது.[11][12][13]

62 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் நிகழ்ச்சியில் அந்த ஆண்டின் சிறந்த இந்தி திரைப்படமாக இத்திரைப்படம் அறிவிக்கப்பட்டு விருது பெற்றது. அதே நிகழ்ச்சியில் சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றார் கங்கனா இரனாத்து.[14]

60 ஆவது பிலிம்பேர் விருது விழாவில் சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகை, சிறந்த பின்னணி இசை, சிறந்த ஒளிப்பதிவாளர் மற்றும் சிறந்த தொகுப்பாளருக்கான விருதுகள் இத்திரைப்படத்தில் பணிபுரிந்தோருக்கு வழங்கப்பட்டது.[15]

மேலும் பல்வேறு விருதுகளைப் பெற்றது இத்திரைப்படம்.

மீளுருவாக்கம்

[தொகு]

இந்தியில் இத்திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தமிழில் காச்சல் அகர்வால் நடிக்க பாரிஸ் பாரிஸ் என்ற தலைப்பிலும், தெலுங்கில் தமன்னா நடிக்க தட் இஸ் மகாலக்ஷ்மி என்கிற தலைப்பிலும் மலையாளத்தில் மஞ்சிமா மோகன் நடிக்க ஃஜம் ஃஜம் என்ற தலைப்பிலும் கன்னடத்தில் பருல் யாதவ் நடிக்க பட்டர்ஃப்ளை என்ற தலைப்பிலும் மீளுருவாக்கம் செய்யப்பட்டு வெளியாக இருக்கிறது.[16][17]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "குவீன் விமர்சனம் - இந்தியன் எக்ஸ்பிரஸ்".
  2. "QUEEN (12A) – British Board of Film Classification". British Board of Film Classification. Archived from the original on 4 ஜூலை 2017. பார்க்கப்பட்ட நாள் 4 October 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "BO report: At Rs 50 crore, Main Tera Hero inching close to Queen's record". Hindustan Times. 15 April 2014.
  4. "குவீன் ஆரம்பம் - பாக்ஸ் ஆபீஸ் இந்தியா". Archived from the original on 2021-04-25. பார்க்கப்பட்ட நாள் 2021-04-25.
  5. "குவீனை மறுத்த நடிகை - ஃபர்ஸ்ட்போஸ்ட்".
  6. "குவீன் - டைம்ஸ் ஆப் இந்தியா".
  7. "கங்கனாவின் குவீன் - இந்தியன் எக்ஸ்பிரஸ்".
  8. "பாபி சிங்கின் மரணம் அதிர்ச்சி அளித்தது - டைம்ஸ் ஆப் இந்தியா".
  9. "கங்கனாவிடம் முறை தவறினார் - இந்தியா டுடே".
  10. "இன்னொரு நடிகை குற்றச்சாட்டு - எண்டிடிவி".
  11. "குவீன் விமர்சனம் - இந்தியா டுடே".
  12. "குவீன் விமர்சனம் - எண்டிடிவி". Archived from the original on 2020-10-30. பார்க்கப்பட்ட நாள் 2021-04-25.
  13. "குவீன் விமர்சனம் - டைம்ஸ் ஆப் இந்தியா".
  14. "62 ஆவது தேசிய திரைப்பட விருதுகள்" (PDF).
  15. "60 ஆவது பிலிம்பேர் விருது விழா".
  16. "தெலுங்கில் குவீன் - டைம்ஸ் ஆப் இந்தியா".
  17. "நான்கு குவீன்கள் - டெக்கான் கிரானிக்கல்".
"https://ta.wikipedia.org/w/index.php?title=குவீன்_(2014_திரைப்படம்)&oldid=3929135" இலிருந்து மீள்விக்கப்பட்டது