வாவிலொவ்-செரன்கோவ் விளைவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வாவிலொவ்-செரன்கோவ் விளைவு

வாவிலொவ்-செரன்கோவ் விளைவு (Vavilov-Cerenkov effect) அல்லது பொதுவாக செரன்கோவ் கதிர்வீச்சு (Cerenkov radiation) என்பது மின்னூட்டம் பெற்ற இலத்திரன் போன்ற துகள் ஒன்று ஒளி கடத்தும் ஊடகம் ஒன்றில் ஒளி அலைகளின் திசை வேகத்தினை விடக் கூடுதலான வேகத்தில் பயணிக்கும் போது வெளிவிடும் மின்காந்த அலை ஆகும். இவ்விளைவு முதன் முதலில் செர்கே வாவிலோவ், பாவெல் செரன்கோவ் என்ற இரு உருசிய நாட்டு இயற்பியலாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. இக்கண்டுபிடிப்புக்காக 1958 ஆம் ஆண்டில் செரன்கோவ் நோபல் பரிசை வென்றார்.[1]

செரன்கோவ் கதிர்வீச்சின் வடிவவியல்

இவ்வகையான கதிர்வீச்சு சாதாரண ஒளிஅலைகளைப் போல் எல்லா திசைகளிலும் பரவுவதில்லை. ஆனால் இது கூம்பு வடிவில் பரவுகிறது. இந்த கூம்பின் அச்சு, துகள்களின் இயக்கத்தின் திசையில் இணைந்து இருக்கிறது. கூம்பின் கோணம், மிகவும் திட்டமாக துகள்களின் திசை வேகத்தினையும், ஊடகத்தில் குறிப்பிட்ட அலைநீளமுள்ள ஒளி அலைகளின் விலகு எண்ணையும் பொறுத்திருக்கிறது. எனவே இந்த வகையான கதிர் வீச்சு, இலத்திரன், புரோத்தன், மேசான்கள் முதலிய மின்னூட்டம் கொண்ட துகள்களின் திசைவேகத்தினைக் காண உதவுகிறது. இக்கதிர்களின் செறிவு இதனைத் தோற்றுவிக்கும் துகளின் வேகம் அதிகரிக்கும் போது கூடுகிறது. மேலும் இச்செறிவு துகள்களின் மின்னூட்டத்தின் இருமடிக்கு நேர்வீத்த்திலும் இருக்கிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Pavel Alekseyevich Cherenkov (1934). "Visible emission of clean liquids by action of γ radiation". Doklady Akademii Nauk SSSR 2: 451.  Reprinted in Selected Papers of Soviet Physicists, Usp. Fiz. Nauk 93 (1967) 385. V sbornike: Pavel Alekseyevich Čerenkov: Chelovek i Otkrytie pod redaktsiej A. N. Gorbunova i E. P. Čerenkovoj, M.,"Nauka, 1999, s. 149-153. (ref பரணிடப்பட்டது 2007-10-22 at the வந்தவழி இயந்திரம்)

வெளி இணைப்புகள்[தொகு]