வார்ப்புரு பேச்சு:Mainpagefeature

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

1சிறப்புக்கட்டுரை 4செய்திகளில் என்றவாறு ஒவ்வொரு தலைப்புகளுக்கும் முன்னால் எண்கள் வருவதை தவிர்த்தால் நல்லதென நினைக்கிறேன். --மு.மயூரன் 14:57, 19 அக்டோபர் 2005 (UTC)[பதிலளி]

அடிப்படையில் செய்திகளில் போன்றவை துணைத்தலைப்புகளே. உங்களுடைய முன்னுரிமைகள் பக்கத்தில் (மேலே இணைப்பு உள்ளது) சென்று என்ன தோல் தேர்வு செய்துள்ளீர்கள் என்று பார்க்கவும். சில வகை தோல்களில் எண்களுடன் வரும், சிலவகை தோல்களில் எண்களின்றி வரும். கீழே உள்ள வெவ்வேறு "தோல்களில்" எப்படி வருகிறதென்று பாருங்கள்.
பிற பக்கங்களில் உள்ள துணைத்தலைப்புகளில் எண்கள் வேண்டும், ஆனால் முதல்பக்கத்தில் மட்டும் எந்த "தோலாக" இருந்தாலும் எண்கள் வேண்டாம் என்றால், வார்ப்புருவில் உள்ள ==செய்திகளில்== போன்றவற்றை '''செய்திகளில்''' என்று நிரல் மாற்றம் செய்ய வேண்டும். இதில் வேறு சிக்கல் ஏதாவது இருக்குமா எனத் தெரியவில்லை. ஏனெனில் ஆங்கில விக்கியில் == == குறியீட்டையே பயன்படுத்துகின்றனர். -- Sundar \பேச்சு 16:04, 19 அக்டோபர் 2005 (UTC)[பதிலளி]
சுந்தர், முன்னுரிமைகளில் பலதரப்பட்டவை பகுதியில் பத்திகளுக்கு தானியங்கி இலக்கமிடும் option உள்ளது. அதை நீக்குவதன் மூலம் முதற் பக்கம் உட்பட எந்தப் பக்கத்திலும் பத்திகளுக்கு எண்கள் வராமல் செய்ய முடியும். இதற்கும் தோலுக்கும் தொடர்பில்லை. ஆனால், விக்கிபீடியாவுக்கு சற்றுப் பரிச்சயமான பயனர்கள் தான் இந்த optionகளைத் துருவிப் பார்ப்பார்கள். புதுப் பயனர்களிடமும் அனாமதேய பயனர்களும் இதை செய்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. முன்னுரிமைகள் எப்படி இருந்தாலும் முதற் பக்கத்தில் எண்கள் வரக்கூடாது என்பது என் தனிப்பட்ட விருப்பம். பொதுவாக இப்படி முதற்பக்கத் தலைப்புகளுக்கு எண்களிடும் வழக்கம் எந்த தளத்திலும் இல்லை. அந்த மரபையே நாமும் பினபற்றலாம்.சென்ற முறை ஆங்கில விக்கிபீடியாவில் இருந்து முதற்பக்க வார்ப்புருவை copy செய்த போது நேரமின்மையால் எண்களை எடுக்காமல் விட்டு விட்டேன். இப்பொழுது உரிய மாற்றங்களை வார்ப்புரு:Mainpagefeature மாதிரி பக்கத்தில் செய்துள்ளேன். அம்மாற்றங்களில் அனைவருக்கும் உடன்பாடு என்றால், அதை இங்கும் செயற்படுத்தலாம்.--ரவி (பேச்சு) 07:12, 20 அக்டோபர் 2005 (UTC)[பதிலளி]
முன்னுரிமைகளில் எது என மறந்து விட்டேன். :p நினைவூட்டியதற்கு நன்றி. மாதிரிப் பக்கத்தில் நீங்கள் செய்த மாற்றத்தில் எனக்கு உடன்பாடு உண்டு. எவருக்கும் இதில் சிக்கல் இல்லையென்றால் செயற்படுத்தலாம். -- Sundar \பேச்சு 07:20, 20 அக்டோபர் 2005 (UTC)[பதிலளி]

செய்திக் கட்டுரைகள், தலைப்புகள் பற்றி கருத்து[தொகு]

கடைசியாக உள்ள வில்மா சூறாவளி செய்தித் தலைப்பு பற்றிய ஒரு சிறு கருத்து. அந்த செய்தித் தலைப்பில் சூறாவளி வில்மா கட்டுரைக்கு இணைப்பு இருந்திருக்க வேண்டியது அவசியம் என்று கருதுகிறேன். ஏனெனில் அது தான் முக்கியமான செய்தி. வாசகர்களும் அதை பற்றி அறிய தான் விரும்புவார்கள். எனவே இந்த மாதிரி செய்திகளை முன்னிறுத்தும்போது அதைப் பற்றி ஒரு குறுங்கட்டுரையாவது எழுதி விட்டு பின் முதற்பக்கத்தில் காட்சிப்படுத்தலாம். பிறகு, தற்பொழுது போன்ற சொற்களைத் தவிர்த்து இயன்றவரை தேதியுடன் எழுதுவது நலம்--ரவி (பேச்சு) 19:19, 8 நவம்பர் 2005 (UTC)[பதிலளி]

தகவல் கட்டுரைகளின் பட்டியல்[தொகு]

தகவல் கட்டுரையின் பட்டியலுக்கு இணைப்பு தேவை இல்லையா? மேலும், ஆங்கில விக்கியில் காமன்சிலிருந்து சிறப்புப் படிமங்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன. வெறும் படிமத்தின் விளக்கத்தை மட்டும் மொழிபெயர்த்து வந்தால் நாளுக்குநாள் மாறும் கவர்ச்சியான படிமம் முதல் பக்கத்தில் இடம்பெறுமல்லவா? -- Sundar \பேச்சு 13:23, 27 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]

எனக்கும் இது நல்ல திட்டமாகவே தோன்றுகிறது. --Sivakumar \பேச்சு 13:34, 27 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]

தற்பொழுது செய்திக்கட்டுரைகள் மட்டும் இருப்பதால், தகவல்கள் பக்கத்துக்கு இணைப்பு தரவில்லை. அந்தப் பகுதி இடம்பெறும் போது, இணைப்பு தரலாம். படிமங்களை சேர்ப்பதில் எனக்கும் உடன்பாடே. அடிக்கடி இற்றைப்படுத்த தான் உதவிக்கரங்கள் தேவை !--ரவி 14:07, 27 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வார்ப்புரு_பேச்சு:Mainpagefeature&oldid=77656" இலிருந்து மீள்விக்கப்பட்டது