வார்ப்புரு பேச்சு:தகவற்பெட்டி துடுப்பாட்டக்காரர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

@Selva15469: தகவல்பெட்டியில் "பன்னாட்டுத் தரவுகள்" பகுதியில் இ20ப தகவல்கள் தெரியவில்லை. cap என்பதற்குத் தமிழ் என்ன? பார்க்க: en:Cap (sport).--Kanags \உரையாடுக 09:54, 30 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]

@Kanags:, துடுப்பாட்டத்தில் தேர்வு, ஒநாப, இ20ப, பஅ, முத, இ20 என்று ஆறு வகையான போட்டிகள் உள்ளன. இவற்றில் ஒவ்வொரு துடுப்பாட்டக்காரரையும் பொறுத்து நான்கு வகையான போட்டிகளை தகவல் பெட்டியில் சேர்ப்பது வழக்கம். இங்கு எடுத்துக்காட்டில் உள்ள பிறெட் லீ என்ற வீரர் பெரும்பாலும் தேர்வுப் போட்டிகளில் விளையாடியவர் என்பதால் இ20ப போட்டிகள் குறித்த தகவல்கள் இடம்பெறவில்லை. பன்னாட்டுத் துடுப்பாட்டத்தில் புதிதாக அறிமுகமாகும் வீரருக்கு தொப்பி அணிவித்து அணியில் சேர்ப்பது cap என்று அழைக்கப்படுகிறது. இதற்கு பொருத்தமான தமிழ்ச்சொல் தெரியவில்லை. எனவே தமிழில் தொப்பி என்றே குறிப்பிடலாம் என்று நினைக்கிறேன். இதில் ஏதேனும் தங்களுக்கு கருத்து வேறுபாடு இருந்தால் தெரிவியுங்கள். Selva15469 (பேச்சு) 12:17, 30 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]