உள்ளடக்கத்துக்குச் செல்

வாய்மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாய்மொழி என்பது யாப்பிலக்கணம் ஆகும். இந்தச் செய்யுள் இலக்கணம் அறிந்த புலவரைத் தொல்காப்பியர் வாய்மொழிப் புலவர் என்று குறிப்பிடுகிறார்கள்.[1] தொல்காப்பியர் காலத் தமிழ் பாட்டு, உரை, நூல், வாய்மொழி, பிசி, அங்கதம், முதுசொல் என்று செய்யுளானது ஏழு நிலைகளில் காணப்படுகிறது என்று தொல்காப்பியர் குறிப்பிடுகிறார்.[2] இதற்கு உரை எழுதும் இளம்பூரணர் ’வாய்மொழியாப்பு’ என்று குறிப்பிட்டுச் செல்கிறார்.[3] நூல் என்பது எழுத்து, சொல் இலக்கணங்களைக் கூறும் நூல்.[4] வாய்மொழி என்பது யாப்பிலக்கணம் கூறும் நூல் என்றும் இவற்றால் தெரியவருகிறது.

மேற்கோள்

[தொகு]
  1. 'நிரை அவண் நிற்பின், நேரும் நேர்பும்
    வரைவு இன்று' என்ப-வாய்மொழிப் புலவர். (தொல்காப்பியம் – பொருளதிகாரம் 380 – செய்யுளியல்)

  2. பாட்டு, உரை, நூலே, வாய்மொழி, பிசியே,
    அங்கதம், முதுசொல், அவ் ஏழ் நிலத்தும்,
    வண் புகழ் மூவர் தண் பொழில் வரைப்பின்
    நாற் பெயர் எல்லை அகத்தவர் வழங்கும்
    யாப்பின் வழியது' என்மனார் புலவர். (தொல்காப்பியம், பொருளதிகாரம் 384 – செய்யுளியல்)


  3. தொல்காப்பியம், உரையாசிரியர் இளம்பூரணர், சாரதா பதிப்பகம், சென்னை 600 014, பதிப்பு 2010


  4. <poem>
    ஒத்த சூத்திரம் உரைப்பின் காண்டிகை
    மெய்ப்படக் கிளந்த வகையது ஆகி,
    ஈர்-ஐங் குற்றமும் இன்றி, நேரிதின்
    முப்பத்திருவகை உத்தியொடு புணரின்,
    நூல்' என மொழிப, நுணங்கு மொழிப் புலவர். (தொல்காப்பியம், பொருளதிகாரம் 644 – மரபியல்)
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாய்மொழி&oldid=3459044" இலிருந்து மீள்விக்கப்பட்டது