வான்வுன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வான்வுன் (Wanvun') (கூட்டுப்பாடல்) உபநயனம், திருமணங்கள் போன்ற சில சடங்குகளுக்கு முன்பு காஷ்மீரிகளால் பயன்படுத்தப்படும் ஒரு பாணியாகும். பாரம்பரிய பாடல்கள் பாடப்படும் இசை அமர்வை விவரிக்கவும் இந்தச் சொல்லைப் பயன்படுத்தலாம். இது இரௌப் என்றும் அழைக்கப்படுகிறது. [1]

தில்லியில் இரௌப் நடனம் ஆடும் காஷ்மீரி பெண்கள்

"வான்வுன்" ஒரு நிலையான துடிப்புடன், பேசப்படும் வார்த்தை வகை தாளத்துடன் பாடப்படுகிறது. இராகம் எப்போதும் ஒரே மாதிரியாக இருக்கும். ஆனால் எந்த நிகழ்வில் பாடப்படுகிறது என்பதைப் பொறுத்து, சுருதி மாறுபடும். பாடும் பெண்கள் பாடலின் மூலம் கதைகளைச் சொல்வதற்கு வசனம், வலியுறுத்தல், உருவகம் மற்றும் உவமை ஆகியவற்றைப் பயன்படுத்துகின்றனர்.

1980 களில், இந்திய கலாச்சார உறவுகளுக்கான அமைப்பு, நவீன திருமணங்களில் திரைப்படப் பாடல்களைப் பயன்படுத்துவதால், பாரம்பரிய வான்வுனைப் பாடும் வயதானவர்கள் குறைவாக இருப்பதாக கவலை தெரிவித்தது. [2] சில இடங்களில், ரம்ஜான் முடிவைக் கொண்டாட வான்வுன் பாடப்படுகிறது.

மேலும் பார்க்கவும்[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. Raheja, Neeta (1995). How to Arrange a Wedding. University of Virginia: UBS Publishers and Distributors. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788186112281. https://books.google.com/books?id=VztLAAAAYAAJ&q=Wanvun. 
  2. Indian Council for Cultural Relations (1987). "Indian Horizons". Indian Horizons 36. https://books.google.com/books?id=j8YnAAAAMAAJ&q=Wanvun. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வான்வுன்&oldid=3652875" இலிருந்து மீள்விக்கப்பட்டது