வாதநாராயணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(வாதநாராயணன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வாதநாராயணி
Delonix elata02.JPG
வாதநாராயணி
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
பிரிவு: பூக்குந் தாவரம்
வகுப்பு: மெய்யிருவித்திலையி
வரிசை: Fabales
குடும்பம்: ஃபபேசியே
துணைக்குடும்பம்: Caesalpinioideae
சிற்றினம்: Caesalpinieae
பேரினம்: Delonix
Species

Delonix baccal (Chiov.) Baker f.
Delonix elata (லி.) Gamble
Delonix regia (Hook.) Raf.

வாதநாராயணி (Delonix elata) மூலிகை மருத்துவத்தில் பயன்படும் ஒரு மரமாகும். இது இரண்டரை முதல் 15 மீற்றர் உயரம் வளர்கிறது.

வளரியல்பு[தொகு]

பொதுவாக இது எல்லா இடங்களிலும் வளரும். இது பெரும்பாலும் வறண்ட நிலப்பகுதிகளில் நிறைய காணப்படும். செம்மண் நிலத்தில் இதனை நிறையக் காணலாம். 20 முதல் 30 அடி வரை வளரும். இது பூவரசு, தேக்கு போல வலிமையான மரம் இல்லை. முருங்கைமரம் போல வலிமை இல்லாத மரம். இது விதை மூலமும், கிளை மூலமும் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. இதன் கிளைகளை வெட்டி நட்டாலே வளரக்கூடியது. தண்ணீர் அதிகம் தேவை இல்லை. அதிக நிழல் தராது. இதன் இலை பார்பதற்கு புளியிலைகளைப் போன்று சிறிதாக இருக்கும். வாத நாராயண மரம் நிறைய மருத்துவ குணம் கொண்டது. இரு சிறகான சிறு இலைகளையுடைய கூட்டிலை 10-14 ஜதைகளாகவும் உச்சுயில் பகட்டான பெரிய பூக்களையும் தட்டையான காய்களையும் உடைய வெளிர் மஞ்சள் சிவப்பு நிறமுடைய மரம். மே, ஜூன் மாதங்களில் காய்கள் விடும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வாதநாராயணி&oldid=1929159" இருந்து மீள்விக்கப்பட்டது