செம்மயிற்கொன்றை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
செம்மயிற்கொன்றை
Royal Poinciana.jpg
ஃபுளோரிடாவில் உள்ள பூக்கள் நிறைந்த மரம்
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்குந்தாவரம்
தரப்படுத்தப்படாத: மெய்யிருவித்திலையி
தரப்படுத்தப்படாத: Rosids
வரிசை: Fabales
குடும்பம்: Cesalpiniaceae
பேரினம்: Delonix
இனம்: D. regia
இருசொற் பெயரீடு
Delonix regia
(போச். ex ஃகூக்.) ர.

செம்மயிர்க்கொன்றை (Delonix regia) வெப்பவலயப் பகுதிகளைச் சேர்ந்த ஒரு பூக்கும் தாவரமாகும். இது, மயிர்க்கொன்றை, மயிற்கொன்றை, மேமாதப்பூ மரம் எனப் பல பெயர்களிலும் அழைக்கப்பட்டு வருகின்றது. அமெரிக்காவில் இம் மரத்தை அறிமுகப்படுத்திய பிலிப்பே டி லாங்வில்லியேர்ஸ் டி பொயின்சி (Phillippe de Longvilliers de Poincy) என்பவரின் பெயரில் இதனை ஆங்கிலத்தில் ரோயல் பொயின்சியானா என அழைப்பதுண்டு.

மெக்சிக்கோவிலுள்ள சாந்தோ டொமிங்கோ தேவாலயத்துக்கு வெளியேயுள்ள செம்மயிற்கொன்றை மரங்கள்.

இதன் கடும் பச்சை நிற இலைகளும் அவற்றின் பின்னணியில் கொத்துக் கொத்தாகப் பூத்துக் குலுங்கி ஒளிரும் செம்மஞ்சள் நிறப் பூக்களும் இம் மரத்துக்கு மிகுந்த கவர்ச்சியை வழங்குகின்றன. இதனால் இம்மரம் உலகின் அழகிய மரங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது.

செம்மயிற்கொன்றை மரம், மடகாஸ்கர் தீவைத் தாயகமாகக் கொண்டது. இங்கே இது மேற்கு மலகாசிக் காட்டுப் பகுதிகளில் காணப்படுகின்றது. காட்டுப் பகுதிகளைப் பொறுத்தவரை இது அழியும் ஆபத்து கொண்ட மரமாகக் கருதப்பட்டாலும், பிற பகுதிகளில் இது பெருமளவில் அலங்காரத் தாவரமாக வளர்க்கப்படுகின்றது. இதன் அழகியற் பெறுமானத்தையும் விட இது பயனுள்ள ஒரு நிழல் மரமும் ஆகும். இது ஏறத்தாழ 5 மீட்டர் உயரமே வளர்வதும், அடர்ந்த இலைகளைக் கொண்ட மேற்பகுதி குடை போல் பரந்து காணப்படுவதும் இதற்குக் காரணமாகும். இம்மரம், தெளிவான வறண்ட பருவ காலத்தைக் கொண்ட பகுதிகளில் வறட்சியின் போது இலைகளை உதிர்த்துவிடினும், ஏனைய இடங்களில் இது நிலைத்த பசுமையான மரமாகவே உள்ளது.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=செம்மயிற்கொன்றை&oldid=2916048" இருந்து மீள்விக்கப்பட்டது