வல்லூர் அனல் மின் நிலையம்
வல்லூர் அனல் மின் நிலையம் | |
---|---|
வல்லூர் அனல் மின் நிலையம் | |
நாடு | இந்தியா |
அமைவு | 13°14′2″N 80°18′21″E / 13.23389°N 80.30583°E |
நிலை | Operational |
அமைப்பு துவங்கிய தேதி | செப்டம்பர் 2007 |
இயங்கத் துவங்கிய தேதி | Unit 1: October 2010 Unit 2: March 2011 Unit 3: September 2012 |
அமைப்புச் செலவு | ₹91.93 பில்லியன் |
உரிமையாளர் | NTPC Limited and TANGEDCO |
இயக்குபவர் | NTPC Tamil Nadu Energy Company Limited |
வல்லூர் அனல் மின் நிலையம் (Vallur Thermal Power Station) இந்தியாவில் சென்னைக்கு அருகில் உள்ள திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டு புதுநகரில் அமைந்துள்ள அனல் மின் நிலையம் ஆகும். இந்த மின் உலையானது, தேசிய அனல் மின் நிறுவனத்தால் இயக்கப்படும் நிறுவனம் ஆகும். இது தேசிய அனல் மின் நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மின்சார வாரியம் ஆகியோரின் கூட்டு முயற்சியாகும். இந்நிறுவனமானது 500 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட மூன்று அலகுகளைக் கொண்டுள்ளது.[1]
2014 ஆம் ஆண்டு சனவரி மாதத்தில் இந்த அனல் மின் நிலையத்தில இருந்த அலகுகள் 24.09 மில்லியன் யூனிட்கள் மின்சாரத்தை உற்பத்தி செய்து ஒரு சாதனை அளவை எட்டின.[2] இந்தத் திட்டம் நாளொன்றுக்கு ஏறத்தாழ 24 மில்லியன் யூனிட்கள் மின்சாரத்தை மின் பகிர்மான கட்டமைக்குத் தயாரித்துத் தருகின்றது. இத்திட்டத்தால் அதிகமாகப் பயன்பெறும் மாநிலம் தமிழ்நாடு ஆகும். அதாவது மொத்த உற்பத்தியில் 75 விழுக்காடு மின்சாரமானது தமிழ்நாட்டிற்கே வழங்கப்படுகிறது. எஞ்சியுள்ள மின்சாரமானது ஆந்திரப் பிரதேசம், கருநாடகம், கேரளம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படுகிறது.
இந்த மின் உலையானது 4.62 மெட்ரிக் டன் நிலக்கரியை ஓராண்டிற்கு உற்பத்திக்காக எடுத்துக் கொள்கிறது. இந்த உலைக்கான நிலக்கரியானது ஒடிசாவிலிருந்து கப்பல் மூலமாகஎண்ணூர் துறைமுகத்திற்கு கொண்டு வரப்படுகிறது. அங்கிருந்து சுமை நகர்த்தும் சாதனக் குழாய்கள் மூலமாகக் கொண்டு வரப்படுகிறது.
அமைவிடம்
[தொகு]இந்த அனல் மின் நிலையமானது எண்ணூர் சிறுகுடா அத்திப்பட்டு புதுநகர் தொடருந்து நிலையம், எண்ணூர் துறைமுகத்தின் தென்மேற்குப் பகுதி ஆகிய பகுதிகளுக்கிடையிலான முக்கோண வடிவிலான நிலப்பகுதியில் அமைந்துள்ளது.
கட்டுமானம்
[தொகு]இந்த ஆலை மெகா மின் திட்டக் கொள்கையின் கீழ் நிறுவப்பட்டது. முந்தைய தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் தேசிய அனல் மின் நிறுவனம் இவற்றின் கூட்டு முயற்சியில் தேசிய அனல் மின் நிலையம் தமிழ்நாடு எரிசக்தி நிறுவனம் லிமிடெட் அமைக்கப்பட்டது. 2007 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 ஆம் நாள் வல்லூர் அனல் மின் உலைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த நிறுவனத்தின் உத்தேச கட்டுமான மதிப்பு இந்திய ரூபாயில் 80 பில்லியன்களாகும். 2007 ஆம் ஆண்டு ஆகத்து 13 இல் மாநிலத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் மின் சாதன தயாரிப்பாளர்களில் ஒன்றான பாரத மிகுமின் நிறுவனமானது முதல் நிலை உலை கட்டுமானத்திற்கான மின்னாக்கிகள் மற்றும் சுழலிகள் வழங்குவதற்காக இந்திய ரூபாயில் 19,900 மில்லியன் ரூபாய்கள் வழங்கப்பட்டது.[3]
இந்த திட்டப்பணியானது இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்டது: நிலை ஒன்றானது 500 மெகாவாட் அலகுகள் உற்பத்திக்கான அலகினை இந்திய ரூபாய் 54 பில்லியனிலும் மற்றும் நிலை இரண்டானது 500 மெகாவாட் உற்பத்திக்கான அலகானது இந்திய ரூபாயில் 30 பில்லியன் தொகையிலும் கட்டப்பட்டது. இந்த உலையானது 2010 ஆம் ஆண்டில் இயங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பாரத மிகு மின் நிறுவனத்தால் கட்டப்பட்ட நிலக்கரியைக் கையாளும் வசதிகளை நிறுவுவதில் ஏற்பட்ட தாமதத்தால் இது தாமதமானது. கொதிகலனானது 2009 ஆம் ஆண்டு ஜனவரி 5 ஆம் நாள் நிறுவப்பட்டது. அலகு 1 இற்கான 216 டன் கொதிகலனானது சூன் 2010 இல் நிறுவப்பட்டது. இந்த அலகு மார்ச் 2012 இல் ஆய்விடப்பட்டது. ஆனால், இதன் முழுத்திறனுடன் இயங்குவது நிலக்கரியைக் கையாள்வதில் உள்ள சிக்கல்களால் மேலும் தாமதமானது. அலகு 2 இன் சார்பற்ற வேலைகள் 2010 இல் தொடங்கியது. முதல், இரண்டாவது மற்றும் மூன்றாவது அலகுகள் முறையே 9 மார்ச் 2012, 26 பிப்ரவரி 2013 மற்றும் 28 பிப்ரவரி 2014 அன்று மின் பகிர்மான கட்டமைப்புடன் ஒத்திசைவாக்கப்பட்டன.
செப்டம்பர் 2009 இல், வல்லூருக்கான அனல் மின் நிலையத்திற்கான அலகுகளை வழங்குவதற்கான 130 மில்லியன் ரூபாய் ஒப்பந்தம் பாரத மிகுமின் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. இதன்படி, பாரத மிகு மின் நிறுவனம் நீராவி மின்னாக்கி மற்றும் நீராவி விசையாழி தொகுப்புகளை வழங்கி அவற்றை நிறுவியது. நீராவி மின்னாக்கிகள், சுழலி மின்னாக்கிகள், நிலை மின்னியல் கவர்ச்சி விசை வீழ்படிவாக்கிகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய துணைக்கருவிகள், மற்றும் கட்டுப்பாட்டுக் கருவிகள், அமைப்புகளின் வடிவமைப்பு, பொறியியல் உற்பத்தி, வழங்கல், கருவிமயமாக்கல் அமைப்புகள் ஆகியவற்றை நிறுவுவதற்கும் அவற்றை ஆய்வு செய்வதற்கும் பாரத மிகு மின் நிறுவனமே பொறுப்பேற்றுள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ https://www.tangedco.gov.in/linkpdf/vallur.pdf
- ↑ PTI (8 March 2014). "Power generation suspended from second unit of Vallur plant". Business Line (Chennai: The Hindu). http://www.thehindubusinessline.com/companies/power-generation-suspended-from-second-unit-of-vallur-plant/article5764308.ece. பார்த்த நாள்: 30 Mar 2014.
- ↑ "BHEL bags order for Vallur thermal power project". Live Mint (Tiruchirapalli: LiveMint.com). 5 September 2007. http://www.livemint.com/Companies/qMVIHnQrUd8ZXvDiElRUsK/BHEL-bags-order-for-Vallur-thermal-power-project.html. பார்த்த நாள்: 30 Mar 2014.