வல்லம் மாதவயோக நரசிம்மப்பெருமாள் கோயில்
வல்லம் மாதவயோக நரசிம்மப்பெருமாள் கோயில் தஞ்சாவூர் அருகே உள்ள வல்லம் பகுதியில் உள்ள வைணவக்கோயிலாகும்.
அமைவிடம்
[தொகு]தஞ்சாவூர்-திருச்சி நெடுஞ்சாலையில் தஞ்சாவூரிலிருந்து கிழக்கே உள்ள வல்லம் என்ற இடத்தில் உள்ளது. இக்கோயிலுக்கு அருகில் வஜ்ஜிரேசுவரர் கோயில் என்ற சிவன் கோயில் உள்ளது.
சிறப்பு
[தொகு]விக்கிரம சோழ மன்னர் காலத்தில் அமைக்கப்பட்டதால் விக்கிரம சோழ விண்ணகரம் என்ற பெயர் பெற்றதாகக் கல்வெட்டுச் செய்திகள் கூறுகின்றன. நரசிம்மர் சன்னதியின் சிறப்பின் காரணமாக இக்கோயில் மாதவயோக நரசிம்மப்பெருமாள் கோயில் என்றழைக்கப்படுகிறது.[1] கோயிலின் நுழைவாயிலுக்கு முன்பாக கோயில் வளைவு உள்ளது. மூலவர் சன்னதி விமானம் சற்று பெரிய அளவில் உள்ளது. திருச்சுற்றில் கொடி மரம், பலிபீடம் ஆகியவை உள்ளன. அவை மாதவப் பெருமாள் சன்னதியை நோக்கிய நிலையில் காணப்படுகின்றன.
அமைப்பு
[தொகு]மாதவப்பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் கிழக்கு நோக்கிய நிலையில் அமர்ந்த கோலத்தில் உள்ளார். அமர்ந்த கோலத்தில் யோக நரசிம்மர் உள்ளார். திருச்சுற்றில் ஆழ்வார் சன்னதிகளும், ஆண்டாள் சன்னதியும் உள்ளன. கோயிலுக்குக் கிழக்கே கௌதம தீர்த்தம் உள்ளது.[1] திருச்சுற்றில் ராகு, கேது சன்னதி, சக்கர கணபதி மற்றும் நர்த்தன கணபதி சன்னதி, ஆஞ்சநேயர் சன்னதி, ராமர், சீதை, லட்சுமணர் சன்னதி, அய்யப்பன் சன்னதி, வாகுளாதேவி தாயார் சன்னதிகளும் காணப்படுகின்றன.ஆழ்வார் சன்னதியில் தேசிகன், நம்மாழ்வார், ராமானுஜர், திருமங்கையாழ்வார் உள்ளனர்.