வல்லங்குளம் பாலம்
வல்லங்குளம் பாலம் (Vallamkulam Bridge) என்பது இந்தியாவின் கேரளா மாநிலத்தில் உள்ள பத்தனம்திட்டா மாவட்டத்தில் இரவிபேரூர் மற்றும் கவியூர் பஞ்சாயத்துகளை இணைக்கும், ஒரு குறுகிய எஃகு பாலம் ஆகும். நாற்பதாண்டுகளுக்கு முன்னரே இப்பாலம் கட்டப்பட்டது. சபரிமலைக்குச் செல்லும் பாதையில் அமைந்துள்ள ஒரே எஃகு பாலம் வல்லம்குளம் பாலம் ஆகும். திருவல்லை நகரத்திற்கு அப்பால் ஆறு கிலோமீட்டர் தொலைவில் திருவல்லை – கோழஞ்சேறி சாலையில் மணிமாலா ஆற்றின் குறுக்கே இப்பாலம் கட்டப்பட்டுள்ளது[1].
2012 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 25 ஆம் நாள் அன்று கேரள முதல்வர் உம்மன் சாண்டி திருவல்லை- கும்பழை மாநில நெடுஞ்சாலையில் புதிதாக கட்டப்பட்ட இப்பாலத்தைத் திறந்து வைத்தார். 75 மீட்டர் நீளமும், 11.5 மீட்டர் அகலமும் கொண்ட இபபுதிய பாலம் இரண்டு ஆண்டுகளில் Rs.4.5 கோடி செலவில் கட்டப்பட்டது ஆகும்.[2].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "New bridge to replace old one at Vallamkulam". The Hindu. 15 September 2009. http://www.thehindu.com/news/states/kerala/article20803.ece. பார்த்த நாள்: 2011-05-18.
- ↑ "Priority for infrastructure development, says Chandy". The Hindu. 2012-03-22. http://www.thehindu.com/news/cities/Thiruvananthapuram/article3223427.ece. பார்த்த நாள்: 2016-11-03.