இரவிபேரூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இரவிபேரூர்
கிராமம்
Country இந்தியா
Stateகேரளம்
Districtபத்தனம்திட்டா
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்26,038
மொழிகள்
 • அலுவலகமலையாளம், ஆங்கிலம்
நேர வலயம்IST (ஒசநே+5:30)
அ.கு.எண்689542
வாகனப் பதிவுKL-27

இரவிபேரூர் (Eraviperoor) என்பது இந்தியாவின் கேரளா மாநிலத்தில் உள்ள பத்தனம்திட்டா மாவட்டத்தில் இருக்கும் ஒரு கிராமம் ஆகும். திருவல்லை தாலுக்காவின் ஒரு பகுதியாவும் ஆறன்முளா சட்டப்பேரவைத் தொகுதியின் ஒரு பகுதியாகவும் இரவிபேரூர் கிராமம் உள்ளது. [1]

மக்கள் தொகையியல்[தொகு]

2001 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கீட்டின்படி இந்நகரின் மக்கள் தொகை 26,038 ஆகும். இம்மக்கள் தொகையில் 12,324 நபர்கள் ஆண்கள் மற்றும் 13,714 நபர்கள் பெண்கள்[1] ஆவர். மத்திய கேரளத்தில் பத்தனம் திட்டா மாவட்டத்தின் நிர்வாகப்பிரிவுக்குள் ஒரு கிராமமாகவும் ஆறன்முளா சட்டப்பேரவைத் தொகுதியிலும் இரவிபேரூர் அமைந்துள்ளது.

பெயர்க்காரணம்[தொகு]

இரவிபேரூர் என்பதன் பொருள் இரவியின் நிலம் என்பதாகும். இப்பகுதியை ஆட்சிபுரிந்த அரசன் பெயர் இரவி என்பதால் இப்பெயரால் அழைக்கப்படுகிறது. பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர் இப்பெயர் இரவிபேரூர் என மாறியது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Census of India: Villages with population 5000 & above". Registrar General & Census Commissioner, India. பார்த்த நாள் 2008-12-10.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரவிபேரூர்&oldid=3028635" இருந்து மீள்விக்கப்பட்டது