வலைவாசல்:சமணம்/சமண அறிஞர்/3
Appearance
ஜினசேனர் (Jinasena) கிபி 9ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திகம்பர சமணத் துறவியும், வட மொழி அறிஞரும் ஆவார். இவர் ஆதிபுராணம், மகாபுராணம் மற்றும் அரிவம்ச புராணம் ஆகிய மூன்று சமணப் புராணங்களை சமஸ்கிருத மொழியில் இயற்றியவர் ஆவார்.
திகம்பர சமணப் பிரிவின் அறுகோணம் (Shatkhandagama) எனும் முக்கியத் தத்துவ நூலுக்கு விளக்க உரை எழுதிய வீரசேனரின் மாணவர் சினசேனர் ஆவார். மேலும் சினசேனர் அரிவம்ச புராணத்தையும் இயற்றியுள்ளார். மேலும் எளிய மக்களுக்கான தர்மசாஸ்திரம் எனும் நீதி நூலை இயற்றியுள்ளார். இராஷ்டிரகூடர் மன்னர் அமோகவர்சன் இவரது சீடர் ஆவர்.