வலைத்தள சேவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வலைத்தள சேவைகள் கட்டமைப்பு.

வலைத்தள சேவைகளான இணையம் மற்றும் தொலை அமைப்பு வழங்கிகளுக்கு தேவைப்படும் சேவைகளைச் செயல்படுத்துதல் போன்றவற்றை இன்று பெரும்பாலும் பயன்பாட்டு நிரலாக்க இடைமுகங்கள் (API) அல்லது வலை APIகள் போன்ற வலையமைப்புகள் மூலமாகவே அணுகமுடியும்.

வலைத்தளத்தில் வாங்கிகள் மற்றும் வழங்கிகள் தொடர்பு கொள்வதற்கு பயன்படும் நெறிமுறையானது பொதுவான பயன்பாட்டு வழக்கில் மீயுரை பறிமாற்ற நெறிமுறை (HTTP) என்று குறிப்பிடப்படுகின்றது. இந்த சேவைகளை ஒரு வழிமுறைப்படி நாம் இருவகையாக பிரித்து வழங்கலாம் : பெரிய வலைத்தள சேவைகள்[1] மற்றும் RESTful வலைத்தள சேவைகள்.

"பெரிய வலைத்தள சேவைகள்" எளிய பொருளுக்கான அணுக்க நெறிமுறையை (SOAP) பின்பற்றி வரும் விரிவாக்க குறியீட்டு மொழி (XML) தகவல்களைப் பயன்படுத்தி நிலையான மற்றும் பாரம்பரிய தொழில் நிறுவனங்களின் மத்தியல் மிகுந்த வரவேற்பைப் பெற்றுத் திகழ்கின்றது. இதுபோன்ற கணினிகள் வழங்கும் சேவையானது வலைத்தள இணையசேவை விவரமொழி (WSDL) மூலம் எழுதி கருவிகள் எளிதில் படித்து புரிந்து கொள்ளும் வகையிலான ஒரு விவரணை செய்தியாக வழங்குகிறது. இரண்டாவதாகக் கூறிய மொழிக்கு SOAP வழி பெரும் முடிவு அவசியமற்றதாகும், ஆனால் இது அனேக ஜாவா(Java) மற்றும் .நெட்(.NET) SOAP வடிவமைப்புப் பணிகளில் தானியங்கி வாங்கி-சார்ந்த குறியீடு உருவாக்கத்திற்கான முற்படுதேவையாக உள்ளது. (இவற்றில் ஸ்பிரிங், அப்பாச்சி ஆக்சிஸ்2, அப்பாச்சி CXF போன்ற வடிவமைப்புப்பணிகள் குறிப்பிடத்தக்க விதிவிலக்கு உடையவைகளாக உள்ளன). WS-I போன்ற சில தொழில் நிறுவனங்கள் SOAP மற்றும் WSDL ஆகிய இரண்டையுமே தங்கள் உரிமைக்குட்பட்ட வலைத்தள சேவையை விளக்குவதற்குப் பயன்படுத்துகின்றன.

சேவை சார்ந்த கட்டமைப்பில் உள்ள வலைத்தள சேவைகள்

தற்காலத்தில், குறிப்பாக இணைய நிறுவனங்களில் ரீப்ரெசெண்டேசனல் ஸ்டேட் டிரான்ஃபர் (RESTful) வலைத்தள சேவைகள் மீண்டும் புகழ்பெற்று விளங்குகின்றன. PUT, GET, DELETE HTTP முறைகளுடன் கூடிய, POST வழிமுறைகளைப் பயன்படுத்துவதன் மூலம், இவைகள் SOAP-அடிப்படையிலான சேவைகளைக் காட்டிலும் சிறப்பாக HTTP மற்றும் வலைத்தள உலாவிகளுடன் ஒருங்கிணைக்கப்படுகின்றன. இவற்றுக்கு XML செய்திகள் அல்லது WSDL சேவை-API விளக்கங்கள் தேவையில்லை.

வலைதள சேவைகளில் ஒரு முன்னேற்றமாக வலைத்தள APIகள் கருதப்படுகின்றன. (இந்த அமைப்பு வெப் 2.0 எனப்படுகின்றது) இதன்படி எளிய பொருளுக்கான அணுக்க நெறிமுறை (SOAP) அடிப்படையிலான சேவைகளுக்கு தரப்பட்டு வந்த முக்கியத்துவத்தில் பெரும்பான்மை நேரடியாக ரீப்ரெசண்டேசனல் ஸ்டேட் டிரான்ஸ்பர் (REST) வகையிலான தொடர்புகளுக்கு மாற்றமடைந்தது.[2] வலைத்தள API க்கள் பல்வேறுபட்ட வலைத்தள சேவைகளின் இணைவில் மாஷப்ஸ் என்கின்ற புதிய பயன்பாடுகளை அனுமதிக்கின்றன.[3]

வலைத்தள உருவாக்கச் சூழலில் பயன்படுத்துகையில், வலைத்தள API என்பது மீயுரை பறிமாற்ற நெறிமுறை (HTTP) அமைப்பை வரையறுப்பதுடன் அவற்றுடன் கூடிய பதில் செய்திகளின் கட்டமைப்பின் வரையறைக்கான செய்திகளையும் வேண்டுகின்றது, வழக்கமாக இவை விரிவாக்க குறியீட்டு மொழி (XML) அல்லது ஜாவா ஸ்கிரிப்ட் ஆப்ஜெக்ட் நோட்டேஷன் (JSON) முறையில் வெளிப்படுகின்றது.

தொகுப்பாக வலைத்தள சேவைகள் இயங்குகையில், ஒவ்வொரு துணை சேவையும் தனித்தியங்கும் தகுதியுடையதாகக் கருதப்படுகின்றது. இந்த சேவைகள் மீது பயனர்கள் எவ்விதமான கட்டுப்பாடும் கொண்டிருப்பதில்லை. மேலும் இந்த வலைத்தள சேவைகள் அவர்களால் நம்பத்தகாததாகவும் உள்ளது; இந்த சேவை வழங்குநர் பயனர்களுக்கு எந்த ஒரு அறிவிப்புமின்றி தங்கள் சேவைகளை நீக்கவோ, மாற்றவோ அல்லது மேம்படுத்தவோ செய்யலாம். இத்தகைய நம்பகத்தன்மை மற்றும் தவறுகளைப் பொறுத்தல் நல்ல ஆதரவைப் பெறுவதில்லை; இவை தம் பணிகளைச் செய்கையில் தவறுகள் ஏற்படவும் வாய்ப்பிருக்கின்றது. வலைத்தள சேவைகளின் சூழலில் விதிவிலக்குகளைக் கையாளும் விதம் இன்றும்கூட ஆய்வுநிலையிலேயே உள்ளது.

W3C, ”வலைத்தள சேவை”யை ”தகவல்களைப் பறிமாறவும் பயன்படுத்தவும் கூடிய (interoperable) ஒர் இயந்திரத்திலிருந்து மற்றொரு இயந்திரத்திற்கு வலையமைப்பு மூலம் நடக்கும் இடைவினைகளை ஆதரிக்கக்கூடிய ஒரு மென்பொருள் அமைப்பின் வடிவமாக வரையறை செய்கின்றது. இது ஒர் இயந்திர-செயலாக்க முறையை விவரிக்கக்கூடிய இடைமுகம் ஆகும் (குறிப்பாக இணையசேவை விவரமொழி WSDL). பிற இயந்திரங்கள் மற்ற வலைத்தளம்-சார்ந்த நிலைகளுடன் HTTP -யுடன் கூடிய XML வரிசைமுறைமையைப் பயன்படுத்தி இணைவதை மாதிரியாகக் கொண்டு, SOAP செய்திகளின் பயன்பாட்டு விவரிப்பில் குறிப்பிட்டுள்ள முறையில் வலைத்தளத்துடன் உரையாடுகின்றன”.[4]

W3C, “நாங்கள் வலைத்தள சேவைகளை இரண்டு முக்கியப் பிரிவுகளாக அடையாளம் கண்டோம், REST-இணக்கமான வலைத்தள சேவைகள், இதன் முக்கிய நோக்கமானது வலைத்தள ஆதாரங்களின் XML பரிந்துரைகளை ஒரே மாதிரியான அமைப்புடைய விதிகளற்ற செயலாக்கங்கள் மூலம் கையாளுவது; மற்றொன்று தன்னிச்சையான வலைத்தள சேவைகள், இந்த சேவை செயலாக்கங்களின் தன்னிச்சை அமைப்பை வெளிப்படுத்தும்” என்றும் குறிப்பிடுகின்றது.[5]

விவரக்கூற்றுகள்[தொகு]

சிறப்புக் குறிப்புகள்[தொகு]

வலைத்தளத்திற்குள் தகவல்களைப் பறிமாறவும் பயன்படுத்தவும் கூடிய அமைப்பை மேம்படுத்த WS-I சிறப்புக் குறிப்புகளை வெளியிடுகின்றது. இந்த சிறப்புக் குறிப்பு மைய விவரக்கூற்றுகளின் அமைப்பில் (SOAP, WSDL, ...) குறிப்பிட்ட வகைமைகளுக்கான (SOAP 1.1, UDDI 2, ...) சில கூடுதல் தேவைகளில் மைய விவரக்கூற்றுகள் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்துகின்றது. WS-I யும்கூட இயந்திரத்தின் நடவடிக்கை பற்றி குறிப்பிடும் விவரம் மற்றும் சோதனைக் கருவிகளை வலைத்தள சேவைகளுக்கு ஏற்றவாறு பயன்படுத்த உதவும் சிறப்புக்குறிப்பை வெளியிடுகின்றது. WS வலைத்தள சேவையைத் தொகுத்தமைக்கின்றது.

கூடுதல் விவரக்கூற்றுகள், WS[தொகு]

வலைத்தள சேவைகளின் ஆற்றல்களை விரிவாக்கும் வகையில் சில விவரக்கூற்றுகள் வளர்ந்துள்ளன அல்லது தற்பொழுது வளர்ச்சியடைந்து வருகின்றன. இந்த விவரக்கூற்றுகள் பொதுவாக WS-* என்று குறிப்பிடப்படுகின்றது. இங்குள்ளது WS-* விவரக்கூற்றுகளின் முழுமையுறாத பட்டியல் ஆகும்.

WS-பாதுகாப்பு
SOAPஇல் XML மறையீடு மற்றும் XML குறியீடு ஆகியவற்றைப் பயன்படுத்தி எவ்வாறு செய்திகளைப் பாதுகாப்பாக பரிமாறிக்கொள்வது என்பதையும், அதற்கு மாற்றாக அல்லது விரிவாக்கமாக HTTPS ஐ பயன்படுத்தி செல்தடத்தை எவ்விதம் பாதுகாப்பது என்பது குறித்தும் விளக்குகின்றது.
WS-நம்பகத்தன்மை
OASIS இரண்டு வலைத்தள சேவைகளுக்கு இடையே இருக்கின்ற நம்பகமான செய்தி பறிமாற்றத்திற்கான தரமான ஓர் நெறிமுறையாகும்.
WS-பரிவர்த்தனை
பரிவர்த்தனையைக் கையாளக்கூடிய ஒரு முறையாகும்.
WS-முகவரி அளித்தல்
SOAP தலையகத்தில் முகவரியைத் திணிக்கும் ஓர் தரமான வழிமுறையாகும்.

இவற்றில் உள்ள சில கூடுதல் விவரக்கூற்றுகள் W3C இலிருந்து வந்துள்ளன. அநேக வலைத்தள சேவைகளின் நோக்கில் பொது வலைத்தளம் மற்றும் பொருள் வலைத்தளத்தின் உருமாதிரிகளில் முரண்பாடுகள் காணப்படுவதால், அவற்றில் நிறுவனங்களின் பங்கேற்பு குறித்து மிகுதியான விவாதங்கள் நடைபெறுகின்றன. இந்நிலையானது பிப்ரவரி 2007 ஆம் ஆண்டின் சமீபத்தில் நடந்த, நிறுவன கணக்கீட்டுச் சேவைகளுக்கான வலைத்தளம் குறித்த W3C பயிலரங்கில் தான் பரவலாக அறியப்பட்டது.[6] இதில் பங்கேற்ற சிலர் WS-* சார்ந்த வேலையிலிருந்து W3C மேலும் பங்கேற்காமல் விலகிக்கொண்டு மைய வலைத்தள வேலைகளில் ஈடுபட வேண்டும் என்று வாதிட்டார்கள்.[7] வலைத்தள சேவைகள் என்பது XML நெறிமுறைகளைப் பயன்படுத்தி வலைத்தளத்தை வெளியிடுதல், இருப்பிடத்தை அறிதல் மற்றும் வலைத்தளத்தோடு இணைதல் போன்றவற்றை செய்யக்கூடிய ஒரு மென்பொருள் அமைப்பாகும்.

இதற்கு மாறாக OASIS, வலைத்தள சேவைகளின் வள ஆதார கட்டமைப்பு மற்றும் WSDM உள்ளிட்ட அநேக வலைத்தள சேவை விரிவாக்கங்களைத் தரப்படுத்தியுள்ளது.

பயன்பாட்டின் வகைகள்[தொகு]

வலைத்தள சேவைகள் என்பது பல வழிகளில் பயன்படுத்தக்கூடிய கருவிகளின் தொகுப்பாகும். அவற்றில் பொதுவான மூன்று வகைகளாவன: RPC, SOA, REST.

தொலை செயல்முறை அழைப்புகள்[தொகு]

RPC வலைத்தள சேவைகள் ஒரு பகிர்ந்தளிக்கும் செயல்பாட்டு (அல்லது முறையை) அழைப்பு இடைமுகத்தைத் தருகின்றது. இந்த முறை பல மேம்பாட்டாளர்களிடம் புகழ்பெற்றதாகும். RPC வலைத்தள சேவையின் அடிப்படை அலகு WSDL செயலாக்கமாகும்.

முதல் வலைத்தள சேவைகளுக்கான கருவிகள் RPC ஐ அடிப்படையாகக் கொண்டு அமைந்தது மேலும் இதன் விளைவாக இந்த வகை பரவலான பயன்பாட்டையும் ஆதரவையும் பெற்றது. இருப்பினும் மொழி-சார்ந்த செயல்பாடுகள் அல்லது செயல்முறை அழைப்புகளில் நேரடியான முகப்புச் சேவைகளைக் கொண்டிருந்தமையால், இதன் தளர்வான இணைப்பின்மைக்காக இம்முறை சிலபொழுது விமர்சனத்திற்கு உள்ளானது. பல வாடிக்கையாளர் இந்த முறையை முடிவுக்கு கொண்டுவர கருதினர், இதனால் WS-I அடிப்படை சிறப்புக்குறிப்பு RPC ஐ அனுமதிக்கக்கூடாது என்று முன்மொழிந்தனர்.

பெருமளவு இது போன்ற செயல்பாட்டையே கொண்டுள்ள RPC இன் மற்ற அணுகுமுறைகளாவன: பொருள் நிர்வாகக் குழுக்கள் (OMG) பொது பொருள் கோரும் தரகு கட்டமைப்பாளர்(CORBA), மைக்ரோசாப்ட்ஸ் பகிர்ந்தளிக்கும் பாகத்தின் பொருள் உருமாதிரி (DCOM) அல்லது சன் மைக்ரோசிஸ்டம்ஸின்' ஜாவா/தொலைஇயக்க முறை வேண்டுதல்கள் (பொருள் நிர்வாகக் குழுக்கள்} (OMG) பொது பொருள் கோரும் தரகு கட்டமைப்பாளர்(CORBA), மைக்ரோசாப்ட்ஸ் பகிர்ந்தளிக்கும் பாகத்தின் பொருள் உருமாதிரி (DCOM) அல்லது சன் மைக்ரோசிஸ்டம்ஸின்' ஜாவா/தொலைஇயக்க முறை வேண்டுதல்கள் (RMI]]).

சேவை-சார் கட்டமைப்பு[தொகு]

சேவை-சார் கட்டமைப்பு (SOA ) கோட்பாடுகளைக் கொண்டும் வலைத்தள சேவைகளைச் செயல்படுத்தலாம், தகவல் தொடர்புக்கு இங்கு தேவையாக இருப்பது ஒரு செய்தியே தவிர ஒரு செயல்முறையல்ல. இதனைச் "செய்தி-சார்" சேவைகள் என்று அழைப்பர்.

பல முக்கியத் தொழிற்சாலை நிபுணர்கள் மற்றும் மென்பொருள் விற்பனையாளர்களால் SOA வலைத்தள சேவைகள் ஆதரிக்கப்படுகின்றன. RPC வலைத்தள சேவைகள் போல் அல்லாது இதில் உள்ள தளர்வான இணைப்பு மிகுதியாக விரும்பப்படுகின்றது, ஏனேனில் WSDL தரும் ஒப்பந்தத்தின் மையமாக விரும்பத்தக்க அடிப்படைச் செயலாக்க விவரங்கள் உள்ளன.

மென்பொருள்பாக ஆராய்ச்சியாளர்கள் நிறுவனங்களின் சேவை பாட்டைகளைப் பயன்படுத்தி செய்தி-சார் செய்முறை மற்றும் வலைத்தள சேவைகளை இணைத்து நிகழ்ச்சி-செலுத்தும் SOAவை உருவாக்குகின்றனர். இந்த திறந்த வெளி மூலத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு ESB ம்யூல் மற்றொன்று திறந்த ESB ஆகும்.

குறிப்பு நிலை இடமாற்றம்[தொகு]

முடிவாக குறிப்பு நிலை இடமாற்றம் (REST) என்பது HTTP ஐப் பயன்படுத்தும் கட்டமைப்புகள் பற்றி அல்லது அது போல் இருக்கும் நெறிமுறைகளைக் கொண்டு புகழ்பெற்ற, தரமான செயல்பாடுகளைக் (HTTP க்கான GET, POST, PUT, DELETE போன்றவை) கட்டுப்படுத்தும் இடைமுகத்தை விவரிக்க முயற்சிக்கின்றது. இவை செய்திகளுக்கோ அல்லது செயல்முறைகளுக்கோ மாறான முழுமையான வள ஆதாரங்களுடன் தொடர்பு கொள்வதை மையமாகக் கொண்டுள்ளன. HTTP மீதான SOAP செய்திகளை விவரிப்பதற்கு REST ஐ (அவற்றில் ஒன்று 'RESTful') அடிப்படையாகக் கொண்ட ஓர் கட்டமைப்பில் WSDL ஐப் பயன்படுத்த முடியும். இதன் செயல்திறன்களின் விவரிப்புகளில் இவை முழுமையாக SOAP மூலமாகவே நடைமுறைபடுத்தப்படுகிறது (எ.கா.WS-இடமாற்றம்) அல்லது SOAP இன் பயன்பாடு இல்லாமலும் இதனை உருவாக்க முடியும்.

WSDL வகைமை 2.0, அனைத்து HTTP கோரிக்கை செயல்முறைகளை இணைப்பதற்கான ஆதரவை வழங்குகின்றது. (GET மட்டுமல்லாமல் POST இன் வகைமை 1.1 இலும் உள்ளது) இதனால் REST சார்ந்த வலைத்தள சேவைகளை முழுமையாக நடைமுறைபடுத்த முடிகின்றது.[8] இருப்பினும் கூட, மென்பொருள் மேம்பாட்டு பொருள்களின் விவரக்கூற்றுக்கான ஆதரவு இன்றும் மிகக்குறைவாகவே உள்ளது, இது போன்ற கருவிகள் பெரும்பாலும் WSDL 1.1 இல் மட்டுமே அமைந்துள்ளன.

வடிவமைப்பு செயல்முறைகள்[தொகு]

வலைத்தள சேவைகளை இருமுறைகளில் எழுத முடியும்:

 • "கீழிருந்து மேல் முறையை"ப் பயன்படுத்தும் உருவாக்குநர்கள் நடைமுறையில் முதலில் நிரலாக்க மொழியில் எழுதுகின்றனர். அதன் பின்னர் WSDL உற்பத்தி செய்யும் கருவியைப் பயன்படுத்தி அதன் செயல்முறைகளை வெளிப்படுத்துகின்றனர், இதுவே வலைத்தள சேவை என்றழைக்கப்படுகின்றது[1]. இது எளிமையான அணுகுமுறையாகும்.
 • "மேலிருந்து கீழ் முறையை"ப் பயன்படுத்தும் உருவாக்குநர்கள் முதலில் WSDL ஆவணத்தை எழுதுகின்றனர் மேலும் அதன்பின்னர் அதனை முழுமையாக முடிக்க, கிளாஸ் ஸ்கெல்டனை உற்பத்தி செய்வதற்கு குறியீடு உருவாக்க கருவியைப் பயன்படுத்துகின்றனர். இந்த வழி கடினமாக இருந்தாலும் இதனால் கிடைக்கும் முடிவுகள் தெளிவான வடிவமைப்புகள் கொண்டதாகும்.[2]

விமர்சனங்கள்[தொகு]

REST சார்ந்த வலைத்தள சேவைகள் அல்லாதவை மிகவும் சிக்கலானவை[9] என்று விமர்ச்சிக்கப்படுகின்றது மேலும் இவை பெரிய மென்பொருள் விற்பனையாளர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்களைச் சார்ந்து வருவதால் திறந்த வெளி மூலத்தைக் கொண்டு நடைமுறைப்படுத்தப்படுவது இல்லை என்றும் குற்றம் சாட்டப்படுகின்றது. அபசே ஆக்சிஸ் மற்றும் அபசே CXF போன்றவை திறந்த வெளி செயலாக்கங்கள் ஆகும்.

REST வலைத்தளச் சேவை உருவாக்குநர்களின் ஒரே கவலை என்னவென்றால், தொலை இடைபறிமாற்றத்திற்கான புதிய இடைமுகங்களை SOAP WS கருவிகள் எளிதாக விவரிக்கின்றன, இதனால் ஜாவா, C# அல்லது VB குறியீடு ஆகியவற்றிலிருந்து WSDL மற்றும் சேவை API ஆகியவற்றை விரிவாக்க அடிக்கடி தன்னிலை ஆய்வு செய்ய வேண்டிய நிலை உள்ளது. இதன்மூலம் இயந்திரங்கள் எளிதில் சீர்குலைவது மிகுதியாகலாம் என்ற வாதம் எழுகின்றது. வழங்கியில் ஒரு சிறிய மாற்றம் இருந்தாலும் (SOAP அடுக்கை மேம்படுத்துவது) வேறு WSDL ஐ ஈடுபடுத்தி வித்தியாசமான சேவை நெறிமுறைகளைக் கையாள வேண்டிய நிலை உள்ளது[10]. WSDL மற்றும் XSD சேவை விவரங்கள் SOAP இன் தனிப்பட்ட வகையிலான இறுதி முடிவுடன் இணைக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த முடிவுப்பகுதி மாற்றமடைவதால் இது உடைந்து போக நேரிடுகின்றது. இதுமட்டுமின்றி பயன்படுத்துவோரின் SOAP அடுக்கும் மேம்படுத்தி உருவாக்க வேண்டிய நிலை ஏற்படுகின்றது. நன்கு அமைக்கப்பட்டிருக்கும் SOAP முடிவுப்பகுதிகள் (கையால் எழுதப்பட்ட XSD மற்றும் WSDL) இதனால் பாதிப்படைவதில்லை என்றாலும் இதிலும் நிலவக்கூடிய சிக்கல் என்னவென்றால், ஒவ்வொரு தனிப்பட்ட சேவையும் ஒவ்வொரு தனிப்பட்ட பயனாளருக்கு கண்டிப்பாகத் தேவைப்படுவதாகும்.

வலைத்தள சேவைகளில் XML ஐ செய்தி முறைமையாகவும் அவற்றின் சூழல் மற்றும் போக்குவரத்தில் SOAP, HTTP ஆகியவற்றைப் பயன்படுத்தப்படுவது அதன் செயலாக்கம் குறித்த கவலையை எழுப்புகின்றது. இருப்பினும் VTD-XML போன்றவற்றில் XML சார்ந்த செயலாக்கப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு XML வரிசைமுறை நுணுக்கம்/குறியீடு தொழில்நுட்பங்கள் ஆகியவை உள்ளன.

பிற முயற்சிகள்[தொகு]

வலைத்தளச் சேவைகளில் ஏற்படும் சிக்கல்களுக்கு வேறு சிலவழிகள் மூலமும் தீர்வு காணலாம், அவ்வழிகள் பழமை மற்றும் நவீன முறையிலிருக்கலாம். RMI அநேக மென்பொருள் பாகம் சார்ந்த அமைப்புகளில் பரவலான பயன்பாடுடைய ஒன்றாக உள்ளது. மிகவும் நவீனமாக இருக்கும் CORBA மற்றும் DCOM போன்றவை பகிர்ந்தளிக்கப்பட்ட பொருள்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றன, சிலநேரங்களில் வலைத்தளச் சேவைகளின் செயலாக்கங்களும் அவற்றைப் போலவே செயல்பட முயற்சிக்கின்றன.

மேலும் பல அடிப்படை முயற்சிகளில் RPCக்குப் பொருந்தும் ஒன்றாகவும் SOAPக்கு முன்னோடியுமான XML-RPCயும் SOAP இல்லாமல் பயன்படுத்தக்கூடிய HTTPயின் பல்வேறு முறைகளும் உள்ளடங்கும்.

மேலும் பார்க்க[தொகு]

 • வலைத்தள சேவை வடிவமைப்புப் பணிகளின் பட்டியல்
 • வலைத்தள சேவை நெறிமுறைகளின் பட்டியல்
 • வலைத்தள சேவை விவரக்கூற்றுகளின் பட்டியல்
 • சேவை அமைப்பு
 • சேவை சார்ந்த கட்டமைப்பு
 • அமேசான் வலைதள சேவையகம்
 • நிறுவன தகவல் ஒருங்கிணைப்பு (EII)
 • பிசினெஸ் இன்டலிஜென்ஸ் 2.0 (BI 2.0)
 • வலைத்தள சேவைகளுக்கான கருவிகளின் சிறப்புக்குறிப்பு
 • வலைத்தள செயலாக்கச் சேவை
 • வலைத்தள வழங்கி
 • மைக்ரோசாப்ட் இணை சேவைகளின் கட்டமைப்பு
 • வலைத்தள சேவைகள் கண்டுபிடிப்பு
 • OAuth
 • SOAPjr

குறிப்புதவிகள்[தொகு]

 1. Richardson; Ruby, Sam (2007), RESTful web services, O'Reilly Media, Inc., p. 299, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-596-52926-0 {{citation}}: Cite has empty unknown parameters: |editorn=, |doi_brokendate=, |laydate=, |coauthors=, |editorn-link=, |nopp=, |separator=, |laysummary=, |editorn-first=, |month=, |chapterurl=, |author-separator=, |lastauthoramp=, and |editorn-last= (help); More than one of |pages= and |page= specified (help)
 2. Benslimane, Djamal (2008). "Services Mashups: The New Generation of Web Applications". IEEE Internet Computing, vol. 12, no. 5. Institute of Electrical and Electronics Engineers. pp. 13–15. Archived from the original (HTML) on 2011-09-28. {{cite web}}: Cite has empty unknown parameters: |trans_title= and |month= (help); Unknown parameter |coauthors= ignored (help)
 3. "Mashup Dashboard". ProgrammableWeb.com. 2009. {{cite web}}: Cite has empty unknown parameters: |trans_title=, |month=, and |coauthors= (help)
 4. "Web Services Glossary".
 5. வலைத்தள சேவைகள் கட்டமைப்பு http://www.w3.org/TR/ws-arch/#relwwwrest
 6. நிறுவன கணக்கீட்டுக்கான சேவைகளின் வலைத்தளம் குறித்த W3C பயிலரங்கு
 7. பொசிஷன் பேப்பர் ஃபார் தி வொர்க்‌ஷாப் ஆன் வெப் ஆப் சர்வீசஸ் ஃபார் எண்டெர்ப்ரைஸ் கம்ப்யூடிங் (நிக் காலால் சமர்பிக்கப்பட்டது)
 8. "Web Services Description Language (WSDL) Version 2.0 Part 2: Adjuncts".
 9. செயல்பாட்டில் உள்ள பணி · WS-பக்கஎண்ணிக்கை
 10. "ஜாவா SOAP அடுக்கை மீண்டும் பரிசீலிப்பது". Archived from the original on 2009-04-28. பார்க்கப்பட்ட நாள் 2010-03-25.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வலைத்தள_சேவை&oldid=3755127" இலிருந்து மீள்விக்கப்பட்டது