வர்தக்கு நகர், தானே

ஆள்கூறுகள்: 19°13′N 72°58′E / 19.21°N 72.96°E / 19.21; 72.96
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வர்தக்கு நகர்
Vartak Nagar
வட்டாரம்
வர்தக்கு நகர் Vartak Nagar is located in மகாராட்டிரம்
வர்தக்கு நகர் Vartak Nagar
வர்தக்கு நகர்
Vartak Nagar
இந்தியா, மகாராட்டிராவில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 19°13′N 72°58′E / 19.21°N 72.96°E / 19.21; 72.96
நாடுஇந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்தானே
மொழிகள்
 • அதிகாரப்பூர்வம்மராத்திய மொழி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
வாகனப் பதிவுMH-04-XX-XXXX

வர்தக்கு நகர் (Vartak Nagar, Thane) என்பது இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் தானே நகரத்தில் உள்ள ஒரு முதன்மையான மற்றும் ஓர் உயர் சந்தை பகுதி ஆகும். தானே இரயில் நிலையத்திலிருந்து 4.3 கிலோமீட்டர் தொலைவில் இப்பகுதி உள்ளது. பொக்ரான் சாலை எண். 1, உப்வான் ஏரியில் உள்ள பொக்ரான் சாலை எண். இரண்டை சேர்வதற்கு இந்தப் பகுதி வழியாகச் செல்கிறது. [1] வர்தக் நகரின் பெரும்பகுதி 63 ஏக்கர் மகாராட்டிரா வீட்டுவசதி மற்றும் பகுதி மேம்பாட்டு ஆணையக் காலனி கட்டிடங்களால் மூடப்பட்டுள்ளது. இந்த கட்டிடங்கள் பெரும்பாலும் தானே மற்றும் அதைச் சுற்றியுள்ள உற்பத்தி அலகுகளில் பணிபுரியும் தொழில்துறை தொழிலாளர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. [2]

பெரும்பாலான குடியிருப்பாளர்கள் வர்தக்கு நகர் மற்றும் பிற பகுதிகளைச் சுற்றியுள்ள உற்பத்தி அலகுகள் / தொழிற்சாலைகளில் வேலை செய்தனர். சில புகழ்பெற்ற நிறுவனங்கள் வர்தக்கு நகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தங்கள் அலகுகளைக் கொண்டிருந்தன. சாசுத்திரி நகர், சமதா நகர் மற்றும் யசோதன் நகர்/லோகமான்யா நகர் போன்றவை அருகிலுள்ள பகுதிகளில் அடங்கும்.

வர்தக்கு பகுதியில் உள்ள புகழ்பெற்ற அடையாளங்களில் ஒன்று சாய்பாபா மந்திர் ஆகும்.. சுலோச்சனா தேவி சிங்கானியா உயர்நிலைப் பள்ளி, லிட்டில் பிளவர் உயர்நிலைப் பள்ளி, பிராமன் வித்யாலயா, சிறீமதி சாவித்ரி தேவி திராணி பள்ளி மற்றும் கல்லூரி ஆகியவை இந்தப் பகுதியில் உள்ள முக்கிய பள்ளிகளில் அடங்கும்.

மறுவடிவமைப்பு மற்றும் புதிய வீட்டு மனை, நிலம் தொழில் வளர்ச்சியின் காரணமாக இப்பகுதி படிப்படியாக மாற்றத்திற்கு உட்பட்டுள்ளது.

வர்தக்கு நகரிலுள்ள கட்டிடங்களில் தோசுத்தி விகார், கோர்சு கோபுரம் , வேதாந்த வளாகம் போன்றவை சில முக்கிய கட்டடங்களாகும். .

மேற்கோள்கள்[தொகு]

  1. "Pokharan Road widening work starts with demolition". பார்க்கப்பட்ட நாள் 25 December 2016.
  2. "Redevelopment of Mhada colony in Thane caught in red tape". பார்க்கப்பட்ட நாள் 25 December 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வர்தக்கு_நகர்,_தானே&oldid=3841610" இலிருந்து மீள்விக்கப்பட்டது