வரவர ராவ்
பண்டியாலா வரவர ராவ் Pendyala Varavara Rao | |
---|---|
பிறப்பு | 3 நவம்பர் 1940 சின்ன பண்டியாலா, வாரங்கல் மாவட்டம், தெலங்காணா, இந்தியா |
படித்த கல்வி நிறுவனங்கள் | உசுமானியா பல்கலைக்கழகம் |
பணி | செயற்பாட்டாளர், கவிஞர், ஊடகவியலாளர், இலக்கியத் திறனாய்வாளர், பேச்சாளர் |
வரவர ராவ் (Varavara Rao, பிறப்பு: 3 நவம்பர் 1940) என்பவர் இந்தியாவின் தெலங்கானாவைச் சேர்ந்த பொதுவுடமை செயற்பாட்டாளர், நக்சலைட்டு ஆதரவாளர்,[1] புகழ்பெற்ற கவிஞர், பத்திரிகையாளர், இலக்கிய விமர்சகர் மற்றும் பேச்சாளர் ஆவார். இவர் 1957 ஆண்டு முதல் கவிதைகளை எழுதிவருகிறார். தெலுங்கு இலக்கிய பட்டதாரியான இவர் இளங்கலை மாணவர்களுக்கு சுமார் 40 ஆண்டுகளாக கற்பித்து வருகிறார். தெலுங்கு இலக்கியவாதிகளில் சிறந்த மார்க்சிய விமர்சகர்களில் ஒருவராக இவர் கருதப்படுகிறார். இவர் ஆயிரக்கணக்கான பொதுக் கூட்டங்களில் உரையாற்றியுள்ளார். இவர் நவீன தெலுக்கு இலக்கியத்துக்காக 1966 ஆம் ஆண்டு சுர்ஜனா என்னும் காலண்டிதழைத் துவக்கினார், பிறகு இது மாத இதழாக 1992வரை வெற்றிகரமாக வெளிவந்தது. இவர் விப்லாவா ரட்சயாட்ல சங்கம் (புரட்சி எழுத்தாளர்கள் சங்கம்) என்ற அமைப்பின் நிறுவனர்களில் ஒருவர், நக்சலைட் சித்தாந்தத்தை ஆதரித்தும், அதை பரப்புகின்ற இந்த அமைப்பானது சுருக்கமாக விரசம் என்ற பெயரில் சிறப்பாக அறியப்படுகிறது. இவர் தெலுங்கில் வெளிவருகின்ற பல முற்போக்கான, புரட்சிகர பத்திரிகைகளுடன் தொடர்பு கொண்டிருக்கிறார்.
கைது
[தொகு]மகாராட்டிர மாநிலம், பீமா கோரேகானில் நடந்த கலவர வழக்கு மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியைக் கொல்ல சதித்திட்டம் தீட்டியது போன்ற குற்றங்களைச்சாட்டி, இவர் உள்ளிட்ட இடதுசாரி ஆதரவாளர்கள் ஐந்து பேர் வீடுகளில் புனே காவல்துறையினர் 2018 ஆகத்து 28 அன்று சோதனை நடத்தினர். பின்னர் இந்த ஐந்து பேரும் கைது செய்யப்பட்டனர்.[2] இந்த கைதுகளுக்கு நாடுமுழுவதும் பரவலான எதிர்ப்பு ஏற்பட்டது. உச்ச நீதிமன்றம் இவர்கள் கைது தொடர்பாக அரசிடம் பல கேள்விகளை எழுப்பியதுடன், அவர்களைச் சிறையில் அடைக்ககாமல், வீட்டுக் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டது.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://news.bbc.co.uk/2/hi/south_asia/4165274.stm
- ↑ "நலிந்த பிரிவினருக்காக தொடர்ந்து போராடி வரும் 5 இடதுசாரி ஆதரவாளர்கள்". செய்திக் கட்டுரை. இந்து தமிழ். 30 ஆகத்து 2018. பார்க்கப்பட்ட நாள் 31 ஆகத்து 2018.
- ↑ "எதிர்க்குரல்கள் மீதான அடக்குமுறை ஜனநாயகத்துக்கான ஆபத்து!". தலையங்கம். இந்து தமிழ். 3 செப்டம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 4 செப்டம்பர் 2018.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help)