வனிதா நாராயணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வனிதா நாராயணன், இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த வணிக நிர்வாகியும், பல்வேறு நிறுவனங்களில் தலைமை பொறுப்பேற்று நடத்தியுள்ள, நிர்வாக இயக்குநருமாவார்.[1] 2017 மற்றும் 2018 ஆண்டுகளில் ஐபிஎம் இந்தியா நிறுவனத்தின் தலைவராக இருந்துள்ளார்,[2] அதற்கு முன்னதாக, ஐபிஎம் இந்தியாவின் நிர்வாக இயக்குநராகவும், அந்நிறுவனத்தின் இந்தியா மற்றும் தெற்காசியாவிற்கான பிராந்திய பொது மேலாளராகவும் பணியாற்றியுள்ளார்.

வனிதா, 1987 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் உள்ள ஐபிஎம் நிறுவனத்தில் பணியில் சேர்ந்துள்ளார். ஐபிஎம்மின் வளர்ச்சி மற்றும் உருமாற்றக் குழுவில் உறுப்பினராக பணியாற்றியுள்ளார் அந்நிறுவனத்தின் பல்வேறு கிளைகளில் பணிபுரிந்துள்ளார், மேலும் ஐபிஎம் தொழிற்பள்ளியிலும் சேர்ந்து, பல்வேறு தலைமைத்துவ மேம்பாடு மற்றும் பன்முகத்தன்மை முன்முயற்சிகளுக்கு தலைமை தாங்கியுள்ளார். பெண்களின் தலைமைத்துவ வழி திட்டத்தை உருவாக்குவதற்கான நிர்வாகத்தின் பொறுப்பாளராகவும் இருந்துள்ளார்.  [3]

என்பது போன்ற பல்வேறு பதவிகளிலும் வனிதா சிறப்பாக செயல்பட்டுள்ளார்.

விருதுகள் மற்றும் அங்கீகாரம்[தொகு]

2017 ஆம் ஆண்டில் பார்ச்சூன் இந்தியா [6] மற்றும் பிசினஸ் டுடே ஆகிய பத்திரிகைகளால் 'மிகவும் சக்திவாய்ந்த பெண்களில்' ஒருவராக வனிதா குறிப்பிடப்பட்டுள்ளார்.[7] சிஎக்ஸ்ஓ டுடே,[8] 2016 ஆம் ஆண்டில் உலகளாவிய இந்திய சூப்பர் பெண்கள் பன்னிருவரில் ஒருவராக வனிதா, குறிப்பிடப்பட்டுள்ளார்.

கல்வி[தொகு]

வனிதா, சென்னைப் பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகம் மற்றும் விற்பனையில் முதுகலை வணிக மேலாண்மை பட்டம் பெற்றுள்ளார். தவிர, அவர் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் தாராளவாதக் கலைகளில் இளங்கலைப் பட்டமும் பெற்றவராவார்.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

நாராயணன் அமெரிக்காவில் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ஒரு மகள் மற்றும் பேரக்குழந்தை உள்ளது.[9]

மேற்கோள்கள்[தொகு]

  1. "IBM India chairman Vanitha Narayanan to return to US". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 24 February 2018. https://timesofindia.indiatimes.com/business/india-business/ibm-india-chairman-vanitha-narayanan-to-return-to-us/articleshow/63054370.cms. 
  2. "IBM and Beyond". Business Today. 8 October 2017. https://www.businesstoday.in/magazine/features/vanitha-narayanan-chairman-ibm-india-private-ltd-most-powerful-women-in-busines-member-of-nasscom-executive-council/story/260453.html. 
  3. "Vanitha Narayanan - Managing Director, IBM India Private Limited". IBM. November 2014.
  4. "AMCHAM India - National Executive Board". AMCHAM India. Archived from the original on 11 ஜூலை 2019. பார்க்கப்பட்ட நாள் 11 July 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. "Empathy is as important as intellect". இந்தியா டுடே. 23 March 2018. https://www.indiatoday.in/magazine/supplement/story/20180402-women-leaders-entrepreneurs-corporate-1196381-2018-03-23. 
  6. "Fortune India - Most Powerful Women in 2017 - Vanitha Narayanan". Fortune. https://www.fortuneindia.com/mpw/vanitha-narayanan?year=2017. பார்த்த நாள்: 11 July 2019. 
  7. "The Most Powerful Women In Business 2017". Business Today. பார்க்கப்பட்ட நாள் 11 July 2019.
  8. "Celebrating The Success Of 12 Global Indian Super Women". Trivone. 12 August 2016. Archived from the original on 16 May 2018.
  9. "When IBM India Chairman Vanitha Narayanan faced 'grandmother peer pressure'". 21 February 2018. https://economictimes.indiatimes.com/magazines/panache/when-ibm-india-chairman-vanitha-narayanan-faced-grandmother-peer-pressure/articleshow/63008347.cms. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வனிதா_நாராயணன்&oldid=3743456" இலிருந்து மீள்விக்கப்பட்டது