நாஸ்காம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தகவல் தொழில்நுட்பச் சட்டம் உருவாகக் காரணமான அமைப்புகளில் முக்கியமானது நாஸ்காம். இது தகவல் தொழில்நுட்பச் சட்டம் அமைத்தப்பின் உருவாக்கப்பட்டது. சட்டப்பூர்வமாக அங்கீகாரம் பெற்ற மென்பொருட்களையே பயன்படுத்த வேண்டும் என்பது பற்றிய விழிப்புணர்வைப் பொது மக்களுக்கு ஊட்டும் முயற்சியில் இந்த அமைப்பு 1993 முதல் இயங்கி வருகிறது. கொள்ளை நடவடிக்கைகளைத் தடுக்கும் உதவுவதற்காகவே நாட்டின் முதல் கட்டணத் தேவையற்ற தொலைபேசி இணைப்பை (1-600-334455) ஏற்படுத்தி இருகிறாகள். .

உருவாக்கியோர்[தொகு]

மென்பொருட்களை உருவாக்குதல், தகவல் தொழில்நுட்பச் சேவைகள், இணையம், மின் வணிகம், தகவல் தொழில்நுட்ப அடிப்படையிலான சேவைகள் புரிவோர் ஆகியோர்  இணைந்து இவ்வமைப்பை உருவாக்கியுள்ளனர்.

நோக்கம்[தொகு]

தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை விரைவுபடுத்தும் துனைவனாகச் செயல்படுவது இவர்களது முக்கிய நோக்கமாகும்.

வளர்ச்சிக்கான வழிகள்[தொகு]

தகவல் தொழில்நுட்பத்துறையின் வளர்ச்சிக்கும் அதன் பாதுகாப்பிற்கும் இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது. ஆசிய ஓசியானிக் பகுதி நாடுகளின் கூட்டமைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆசிய ஓசியானிக் பகுதிகளைச் சேர்ந்த 16 நாடுகள் இதில் அங்கம் வகிக்கின்றன. உலகத் தகவல் தொழில்நுட்பச் சேவைக் கூட்டமைப்பு என்ற அமைப்பிலும் இவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். உலகில் உள்ள  32 முன்னணி நாடுகள் இவ்வமைப்பில் உறுப்பினர்களாக உள்ளனர்.

அங்கத்தினர்[தொகு]

நாஸ்காம் அமைப்பில் 2000 மே 31 ஆம் தேதி வரையில் 650 தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உறுப்பினர்களாகச் சேர்ந்துள்ளனர்.

பார்வை நூல்[தொகு]

தமிழில் சைபர் சட்டங்கள், லெனின். ம சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், சென்னை 28
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாஸ்காம்&oldid=2723620" இருந்து மீள்விக்கப்பட்டது