சிவ நாடார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சிவ நாடார்
பிறப்பு 1945[1]
திருநெல்வேலி, தமிழ்நாடு, இந்தியா
பணி சேர்மன், எச்சிஎல் டெக்னாலிஜிஸ்
நிறுவனர், எசு எசு என் அறக்கட்டளை
சொத்து மதிப்பு Red Arrow Down.svgUS$3.9 billion (2008)[2]
வாழ்க்கைத் துணை கிரன் நாடார்
பிள்ளைகள் ஒன்று
வலைத்தளம்
Official Biography

சிவ சுப்பிரமணியம் என்ற சிவ நாடார் தமிழகத் தொழிலதிபரும், கல்வியாளரும் ஆவார். ஹச்.சி.எல் கணினி குழுமத்தின் தலைவராகவும் நிர்வாக ஆளுநராகவும் இருக்கிறார்.

ஆரம்ப காலம்[தொகு]

சிவ நாடார் தூத்துக்குடியில் மூலைபொழி என்னும் கிராமத்தில் பிறந்தார். பின்பு அமெரிக்கன் கல்லூரி, மதுரை மற்றும் பூ. சா. கோ (PSG) தொழில்நுட்பக் கல்லூரியில் பொறியியல் பட்டப்படிப்பை முடித்தார். ஒரு சிறிய கணினி நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த இவர் 1976ஆம் ஆண்டில் அஜய் சவுதிரி என்பவருடன் சேர்ந்து எச்.சி.எல் என்னும் நிறுவனத்தைத் தொடங்கினார். இன்று எச்.சி.எல் கணினி துறையில் பிரபலமான மென்பொருள் மற்றும் கணினி நிறுவனமாக விளங்குகிறது.

பெருமைகள்[தொகு]

1996 ஆம் ஆண்டு இவர் எஸ்.எஸ்.என் என்னும் பொறியியல் கல்லூரியை சென்னையில் தொடங்கினார். 2000ஆம் ஆண்டு போர்ப்ஸ் என்னும் பத்திரிகை நிறுவனம் இவரை உலகின் முதல் 500 பணக்காரர்கள், மற்றும் முதல் 40 பணக்கார இந்தியர்கள் வரிசையில் சேர்த்தது. 2007ஆம் ஆண்டு கணக்கின்படி இவர் உலகத்தின் பணக்காரப் பட்டியலில் 217ஆம் இடத்தில் உள்ளார்.

முதலீடு[தொகு]

சென்னையில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பேசிய இவர் மதுரை, நெல்லை மற்றும் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் தமது நிறுவனம் வரும் 5 ஆண்டுகளில் 1 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்து மக்களுக்கு வேலைவாய்ப்பை பெருக்கிக்கொடுக்கும் என்று தெரிவித்தார். [3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Sharma, Vishwamitra (2003). Famous Indians of the 20th century. புது தில்லி: Pustak Mahal. பக். 220. ISBN 8122308295. 
  2. "The World's Billionaires #277 Shiv Nadar". ஃபோர்ப்ஸ். ஃபோர்ப்ஸ் (2008-03-05). பார்த்த நாள் 2008-03-28.
  3. நெல்லை தொழில் வளர்ச்சிக்கு ஹெச்.சி.எல். பங்களிக்கும்: முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஷிவ் நாடார் உறுதிதி இந்து தமிழ் 09 செப்டம்பர் 2015
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவ_நாடார்&oldid=2258362" இருந்து மீள்விக்கப்பட்டது