வனராஜா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வனராஜா
தோன்றிய நாடுஇந்தியா
பரவல்இந்தியா
பயன்முட்டை & இறைச்சி என இரட்டைப் பயன்பாடு
பண்புகள்
Weightபெண்: 2–2.2 kg (4–5 lb)
வகைப்படுத்தல்
கோழி

வனராஜா (Vanaraja) என்பது இந்தியாவின் ஐதராபாத்தை அடிப்படையாகக் கொண்ட கோழிப்பண்ணை இயக்குநரக திட்டத்தால் உருவாக்கப்பட்ட ஒரு கோழி இனமாகும்.[1] இவ்வினம் இறைச்சி மற்றும் முட்டை உற்பத்தி ஆகியவற்றுக்காக வளர்க்கப்படுகிறது. இவ்வினத்தை, கிராமப்புற சமூகங்களால் [2] குறைந்த தீவனத்தில் இயற்கையான முறையில் வளர்க்க இயலும்.[3]  இந்த இனத்தின் முக்கிய அம்சங்கள் என்றால் இதன் முட்டை ஓடுகள் நாட்டுக் கோழி முட்டைகள் போல பழுப்பு நிற முட்டைகளாகவும், குறைவான ஊட்டச்சத்து உணவுக்கொண்டு வேகமாக வளர்ந்து முட்டை உற்பத்தி செய்வதாகவும், பல வண்ண இறகுகளைக் கொண்டு, நோய் எதிர்ப்பு சக்தி உள்ளனவையாக இருக்கின்றன.[4][5][6]

வனராஜாவை திறந்த வெளியில் வளர்த்தாலும்  இவை சிறந்த செயல்திறனை அளிக்கின்றன. இவை ஆண்டுக்கு 110 முட்டைகளை இடுகின்றன. மேலும் 6 அல்லது 6 1⁄2 மாதங்களில் 1.0 முதல் 1.2 கிலோகிராம் (2.2 முதல் 2.6 பவுண்டு) எடையை அடைகின்றன. வனராஜா சேர்த்து சொந்த பறவைகள் தடுப்பூசி பரிந்துரைக்கப்படுகிறது. அதிக உடல் எடை முட்டை உற்பத்தி குறைக்கும். வனராஜா முக்கியமாக தெலுங்கானா மற்றும் ஆந்திர பிரதேசத்தில் காணப்படுகின்றன. வனராஜாவுக்கு உள்நாட்டு பறவைகளுக்கான நோய் தடுப்பு மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன.  கோழிகள் முட்டை இடும் காலத்தில் கூடுதலாக உள்ள எடை குறையும். இந்தக் கோழிகள் பெரும்பாலும் தெலங்கானா ஆந்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வளர்க்கப்படுகின்றன. 

மேற்கோள்கள்[தொகு]

  1. "Vanaraja". Department of Agricultural Research and Education. பார்த்த நாள் 25 February 2015.
  2. Breed data sheet: Vanaraja/India.
  3. "Backyard Poultry Farming of Vanaraja Breed: A Less Capital Enterprise - Indian Council of Agricultural Research". icar.org.in.
  4. "Vanaraja". Department of Agricultural Research and Education. பார்த்த நாள் 25 February 2015.
  5. "Vanaraja". Department of Agricultural Research and Education. பார்த்த நாள் 25 February 2015.
  6. "Vanaraja". Department of Agricultural Research and Education. பார்த்த நாள் 25 February 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வனராஜா&oldid=2575555" இருந்து மீள்விக்கப்பட்டது