கிரிராஜா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Giriraja chicken (2).JPG

கிரிராஜா (Giriraja) என்பது கர்நாடக கால்நடைத் துறையின், பெங்களூர் வேளாண் அறிவியல் பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்ட ஒரு கோழி இனமாகும்.

கிரிராஜா கோழிகள் இடும் முட்டைகள் ஒவ்வொன்றும் 52-55 கிராம் எடை கொண்டவையாக இருக்கின்றன.இவை ஆண்டுக்கு  130-150 என்ற பெரிய எண்ணிக்கையில் இடுகின்றன.[1] முட்டைகள் எல்லாம் நல்ல தரமானவையாகவும் (80-85 விழுக்காடு), மற்றும் விவசாயிகள் தங்கள் சொந்த பயன்பாட்டுக்கு இருப்புவைக்க உகந்தவையாகவும் உள்ளன. இந்த முட்டை ஓடுகள் பழுப்பு நிறமானவையாகவும்,  பிற வர்த்தக முட்டைகள் விட தடிமனாக இருப்பதால், எளிதில் உடையாதவையாக இருக்கும். இந்தக் கோழிகள் பிற உள்ளூர் வகைகளை ஒப்பிடும்போது நல்ல வளர்ச்சியடையக் கூடியனவாகவும், கலப்பு மற்றும் கொல்லைப்புற பண்ணைகளுக்கு மிகவும் பொருத்தமானதாக உள்ளன.

கொல்லைப்புற வளர்ப்புக்கு, ஐந்து கோழிகளுக்கு  ஒரு சேவல் என்ற எண்ணிக்கையில் வளர்க்க வேண்டியது அவசியம். இவற்றை வளர்க்க சிறப்பு கவணம் தேவையில்லை. இவை ஆங்காங்கே சுற்றி திறந்த வெளியில் கிடைக்கும் உணவை உண்ணக்கூடியன. மேலும் இவை நல்ல தோட்டி விலங்குகளாக இருந்து,  பூச்சிகள் மற்றும் பச்சை இலைகள் போன்றவற்றை  உண்கின்றன. இவற்றால்  பண்ணை மற்றும் சமையலறை கழிவுகளை உண்ண முடியும். இந்த பறவைகள் நல்ல நோய் எதிர்பு ஆற்றலைக் கொண்டவை என்றாலும் இவை ராணிகேட் நோயால் தாக்கப்படுகின்றன. இதன் ஒரு நாள் வயது குஞ்சு 42-45 கிராம் எடையுடையது. 

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரிராஜா&oldid=2505254" இருந்து மீள்விக்கப்பட்டது